Wednesday, 25 December 2013

மழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழந்தைகள்- நன்றி trs trichy


"மழலை மறக்காத வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காமல், மனதளவில் வன்முறை வலைக்குள் குழந்தைகள் சிக்குவதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இன்றைய பரபரப்பான உலகில், நடமாடும் இயந்திரங்களாக மனிதர்கள் மாறிவிட்டார்கள். குடும்ப வரையறைக்குள் நுழையும், கணவன், மனைவிக்கு குழந்தைகளை அக்கறையாக பார்த்துக் கொள்ள போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால், மூன்று வயது கூட ஆகாத குழந்தைக்காக, பலமணி நேரம் காத்திருந்து "அட்மிஷன் வாங்கி பள்ளியில் சேர்க்க, பெரும்பாலான பெற்றோர்கள் முன்வருகின்றனர். கூட்டுக்குடும்பம் உடைந்து தனிக்குடும்பம் உருவான பிறகு, கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தையை பார்த்துக் கொள்ள ஆட்கள் இன்றி, "பிளே ஸ்கூல்' எனும் அறிமுகமில்லாத இடத்துக்கு, குழந்தைகளை படிக்க அனுப்புகின்றனர். மழலை மனம் மாறாத வயதில், இதுவரை அறிமுகமில்லா நபர்களின் பாதுகாப்பில், குழந்தைகளை விட்டு செல்வதால், பெற்றோர்களின் அரவணைப்புக்கும், அன்புக்கும் வாய்ப்பு கிடைக்காமல், தனிமையில் ஏங்க வாய்ப்புள்ளது. 

இப்படி, சிறிய வயதிலே அதிக நேரம் பெற்றோர்களை விட்டு பிரியும் குழந்தைகளுக்கு, எதையும் வெளிப்படையாக பேசத்தெரியாத மனநிலை உருவாக வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், பெற்றோர்களை விட்டு பிரியும் குழந்தைகள், மனதளவில் வெறுமையையும், வன்முறை குணாதிசயங்களோடும் இருப்பதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர். தனிமை, வெறுப்பு போன்ற குணநலன்கள் அதிகம் வளருவதால், குறிப்பிட்ட வயதை அடையும் போது, சுயமாக முடிவெடுத்தல்,பெற்றோரின் ஆதரவை நாடாமல் இருத்தல், மழலையாக பேச வேண்டிய வயதில், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றுக்கு வாய்ப்புள்ளதாக, குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.மேலும், "பிளே ஸ்கூலில்', நாகரிகம், படிப்பு, விளையாட்டு என பல நல்ல விஷயங்கள் கற்று கொடுக்கின்றனர். ஆனால், அதை புரிந்துகொள்ளும் பக்குவம், நான்கு வயதிற்கு மேல்தான் வருகிறது. அந்த வயதிற்கு முன்னால் கற்றுகொடுக்கப்படும் விஷயங்களால் குழந்தைகளின் மனதில், பள்ளியில் இருக்கும் நேரம் பெற்றோரை பிரிந்திருக்கிறோம் என்னும் எண்ணமே ஆழமாக பதிந்திருக்கும் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.


கோவை மனநல நிபுணர் மணி கூறுகையில், ""குழந்தைகளுக்கு இளம் பருவத்தில் பதியும் எண்ணங்களே, பிற்காலத்தில் வேர் விட்டு படர்கின்றன. இந்த பருவத்தில் குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் குறிப்பாக தாய்மார்களின் கண்காணிப்பும், அன்பும் அரவணைப்பும் அவசியம். குழந்தைகள் பெற்றோர்களை சார்ந்தேஉள்ளனர். அவர்களாகவே எதையும் கேட்டுப் பெறாத நிலையில் உள்ளதால், புதிதாக ஒரு இடத்துக்கு அனுப்பப்படும்போது பயம், வெறுப்பு, பிரிவுக்கு ஆளாகின்றனர். இதனால், ஐந்து வயதுக்கு மேல்தான், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். கல்வியை காட்டிலும், சுற்றுப்புற அறிவே, குழந்தைகளை அறிவுள்ளவராக மாற்றும். கல்வியில் சிறந்த மாணவராக குழந்தைகளை உருவாக்குவதை காட்டிலும், சிறந்த மனிதராக குழந்தையை ஆளாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. இதை புரிந்து கொண்டு, குழந்தைகளின் மழலை உலகத்துக்கு சென்று, அவர்களோடு மனம் விட்டு பேசவும் நேரம் ஒதுக்குவது அவசியம்,'' என்றார்.

Power Point Presentation

Social Science Study Material - நன்றி trs trichy

Science Study Material - நன்றி trs trichy

Maths Study Material -நன்றி trs trichy

English Study Material- நன்றி trs trichy


  • English 1st Paper - Question Analysis Report - Mr. R.Kodiappan AHM., N.A.A.M.Hr.Sec.School, Rajapalayam. - English Medium
  • English Important Material - Thanks to Mr. S. Ravi Kumar, B.T.Asst., GHS, Arangal Durgam. - EnglishMedium
  • English Minimum Material - Published By CEO, Vellore. - EnglishMedium
  • English Study Material - Govt Blue Print Patern- EnglishMedium
  • English 2 for Slow Learners - EnglishMedium
  • Minimum Level Study Material - EnglishMedium
  • English 2 – Non Detailed - EnglishMedium
  • English 1 – Model Answer Sheet - EnglishMedium
  • English 1,2 – Basic Study Materials (1) - EnglishMedium
  • English 1,2 – Basic Study Materials (2) - EnglishMedium
  • English 1 – Simple Study Materials - EnglishMedium
  • English 2 – Simple Study Materials - EnglishMedium
  • English 1,2 – Book Back Solutions - EnglishMedium
  • English 1 – Memory Poems - EnglishMedium
  • ஆங்கிலம் 1 - PTA Material - EnglishMedium
  • ஆங்கிலம் 2 - PTA Material - EnglishMedium
  • ஆங்கிலம் - IVDP Material - EnglishMedium
  • ஆங்கிலம் 1 - Way To Success - EnglishMedium
  • ஆங்கிலம் 1 – ( Slow Learners ) - Way To Success - EnglishMedium
  • ஆங்கிலம் 2 Way To Success - EnglishMedium
  • ஆங்கிலம் 2 –  ( Slow Learners ) - Way To Success - EnglishMedium
  • வினா வங்கி 1,2 - Way To Success - EnglishMedium
  • English - Poem . The Cry of the children - Powerpoint Slide - Mr. Sankar, B.T.Asst., Pudhukottai Dt. - English Medium

TET சட்ட ஆலோசனை


Thursday, 19 December 2013

பதவி உயர்வுக்கு நன்றி தெரிவித்தல்


உதவி தொடக்கக் கல்வி அல்வலர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கியமைக்காக பள்ளிக் கல்வி இயக்குநர்  திருமிகு முனைவர் R. இளங்கோவன்   அவர்களை 19.12.2013 அன்று  உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  சங்க மாநில பொறுப்பாளர்கள்  சந்தித்து நன்றி தெரிவித்தனர் 

நன்றி அறிவிப்பு


உதவி தொடக்கக் கல்வி அல்வலர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கியமைக்காக பள்ளிக் கல்வி இயக்குநர்  திருமிகு வி..சி. இராமேஸ்வர முருகன்  அவர்களை 19.12.2013 அன்று  உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  சங்க மாநில பொறுப்பாளர்கள்  சந்தித்து நன்றி தெரிவித்தனர் 






Sunday, 15 December 2013

AEEO விலிருந்து G.H.School Head Master ராக பதவி உயர்வு வழங்கியமைக்கு நன்றி ....!!!

S.NO
NAME
OLD  POST/ DISTRICT
NEW POST
PLACE
1
SUTHANTHIRAN. K
AEEO  THENI
HEAD  MASTER G.H.S.SCHOOL
CHINNAYAKOUNDAR VALASU- TIRUPUR- DT
2
THAMOTHARAN. R
AEEO VIRUDHUNAGAR
HEAD  MASTER G.H.S.SCHOOL
THALANOO-PUDUKKOTTAI -DT
3
NAGARAJAN. R
AEEO VIRUDHUNAGAR
HEAD  MASTER G.H.S.SCHOOL
IDAIYATHIMANGALAM- PUDUKKOTTAI -DT
4
JAYALATHA. E
AEEO  TIRUNELVELI
HEAD  MASTER G.H.S.SCHOOL
ATHIRAMPATTINAM- TANJORE-DT
5
AROCKIASAMY. A
AEEO RAMANATHAPURAM
HEAD  MASTER G.H.S.SCHOOL

THAMBIKOTTAI MELEAKADU- TANJORE - DT
6
RAJAMAREES. S
AEEO DINDUGUL
HEAD  MASTER G.H.S.SCHOOL
KARAYANKADU-THIRUVARUR -DT

15 ஆண்டுகளாக பதவி உயர்வுக்காகக்  காத்திருந்து பெற்ற பதவி உயர்வு
                                                   
                                                                         நன்றி....!!நன்றி...!!!நன்றி...!!!
பதவி உயர்வு தந்த

                   மாண்புமிகு    முதல் அமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி
           
                   மாண்புமிகு     கல்வி அமைச்சர் அவர்களுக்கு நன்றி

                   மதிப்புமிகு  முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு நன்றி

                   மதிப்புமிகு    பள்ளி கல்வி இயக்குனர் அவர்களுக்கு நன்றி

                    மதிப்புமிகு  தொடக்கக்  கல்வி இயக்குனர் அவர்களுக்கு நன்றி

                     இந்நாளில் நம் முன்னாள்  இயக்குனர் திரு .நாராயணசாமி அவர்களையும்    முன்னாள்  SPD திரு . விஜயகுமார்  IAS அவர்களையும் நன்றியோடு நினைவு கொள்வோம்

                     உதவி தொடக்கக்  கல்வி அலுவலர்களுக்காகப்  பாடுபட்ட  இயக்க முன்னோடிகள் திரு.சுந்தரராஜன் திரு . பாஸ்கரன் திரு.ஆரோக்கியம்,     திரு.அ ய்யாச்சாமி திரு.செளந்தரராஜன்  ஆகியோர்க்கும் இந்த நேரத்தில் நன்றியை  உரித்தாக்குகிறோம் மற்றும் இயக்க  வழக்கறிஞர்கள் திரு .C.செல்வராஜ் (SENIOR COUNCIL)  வழக்கறிஞர்                திரு .பன்னீர்செல்வம் B.A., B.L .,  அவர்களுக்கு நன்றி .இவ்வாறு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க செய்திக்  குறிப்பில் தெரிவித்துள்ளது . 

Friday, 13 December 2013

AEEO பதவி உயர்வு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக ....14/12/2013

உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல்

அன்பார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பெருமக்களே ! ஒரு நற்செய்தி 

இதோ வருகிறது! அதோ வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ முதல் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.  இதை முதல் படியாகக் கொண்டு முன்னேறுவோம் .இதை எட்டிப்  பிடிப்பதற்குத்தான் எத்தனை தடைகள்!

 ஏழு பேர் கொண்ட அந்த பட்டியல் 


1.SUTHATHIRAM K         -  THENI
2.THAMOTHARAN R       -   VIRUDHANAGAR
3.NAGARAJAN R             -   VIRUDHANAGAR
4.JAYALATHA E               -  TIRUNELVELI
5.AROCKIASAMY A         -  RAMANATHAPURAM
6.JEYARAJU S                 -   RAMANATHAPURAM
7.RAJAMAREES S          -  DINDUGAL

தயங்காமல் இதை கண்டு வாழ்த்துவோம் 
மனமார்ந்த வாழ்த்துக்கள் 

இதற்காகப் பாடுபட்ட அத்துணை பேருக்கும் நெஞ்சார்ந்த  நன்றிகள 

14/12/2013 அன்று நடைபெறும் கலந்தாய்வில்  கலந்த கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு    உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.