தொடர்ச்சியாக பல வகைகளில் ஆங்கில மொழி பயிற்சியில் ஈடுபட்டால், ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற மொழித்திறன் சோதனை தேர்வுகளில் எளிதாக சாதித்து, வெளிநாட்டுப் படிப்பு மற்றும் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத நாட்டினர், ஆங்கிலத்தை நன்றாக கற்றுக்கொண்டுள்ளனரா என்பதை சோதிக்க, சர்வதேச அங்கீகாரத்துடன் நடத்தப்படும் சிலவகை ஆங்கிலத் திறன் கண்டறியும் தேர்வுகளில் முக்கியமானது IELTS. இத்தேர்வை எழுதும் மாணவர்கள், தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
இக்கட்டுரையின் மூலமாக, IELTS மதிப்பெண் முறை, பதிவுசெய்யும் முறை மற்றும் அதற்கு தயாராதல் உள்ளிட்ட பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
IELTS மதிப்பெண் இடும் முறை
IELTS டெஸ்ட் மதிப்பெண்களை வழங்க மற்றும் தெரிவிக்க, 9 - Band முறை பயன்படுத்தப்படுகிறது. கவனித்தல், வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் ஆகியவற்றுக்கு தனித்தனி band மதிப்பெண்களைப் பெறுவீர்கள் மற்றும் 1 முதல் 9 வரை, ஒட்டுமொத்த band மதிப்பெண், band scale அடிப்படையில் வழங்கப்படும்.
IELTS தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?
இத்தேர்வைப் பொறுத்தவரை, Pass அல்லது Fail என்ற சிஸ்டம் இல்லை. ஒவ்வொரு கல்வி நிறுவனமும், ஒரு தனி மனிதரின் திறமையை மதிப்பிட, தனக்கென ஒரு மதிப்பெண் வரையறையை வைத்திருக்கும். இதனடிப்படையிலேயே மாணவர் தேர்வு செய்யும் செயல்பாடு நடைபெறும்.
IELTS தேர்வெழுதும் அறைக்குள் என்னென்ன கொண்டு செல்ல முடியும்?
ஒருவருடைய செல்லத்தக்க அசல் பாஸ்போர்ட், பேனா, பென்சில் மற்றும் ரப்பர் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்.
தேர்வு முடிவுகளைப் பெறுவது எப்போது?
நீங்கள் தேர்வெழுதிய 13 நாட்களுக்குப் பிறகு, உங்களின் தேர்வு முடிவுகள் படிவம், உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், இதனை ஆன்லைனிலும் பார்க்கலாம்.
மெயின் தேர்வு முடிந்ததில் இருந்து 13வது நாளில், நண்பகல் 12 மணியிலிருந்து www.britishcouncil.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
ஒரு தேர்வை எழுதிய பின்னர், மீண்டும் மறுதேர்வை எழுத, குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் ஆகும்?
இத்தேர்வை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானலும் எழுதலாம். அதற்கென்று எந்த உச்சவரம்பும் இல்லை. அதேசமயம், மறுதேர்வை எழுதும் முன்னதாக, இன்னும் நன்றாக படிப்பது நல்லது.
சில தேர்வு மையங்கள், தயார்படுத்துதல் படிப்புகள் மற்றும் மொழி வகுப்புகளை நடத்துகின்றன. மேலும், IELTS அதிகாரப்பூர்வ பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்தி, உங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இத்தேர்வுக்கு பதிவு செய்வது எப்படி?
இத்தேர்வுக்கு பதிவுசெய்ய 2 முறைகள் உள்ளன. www.britishcouncil.in என்ற வலைதளம் சென்று ஆன்லைன் முறையில் பதிவு செய்யலாம் மற்றும் அருகிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகம் அல்லது நூலகம் சென்று நேரடி முறையிலும் பதிவு செய்யலாம்.
IELTS தேர்வெழுதுவோருக்கான சில ஆலோசனைகள்
* குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு ஆங்கில செய்தித்தாளாவது படிக்க வேண்டும். ஆங்கில மொழிப் பயன்பாட்டிற்கு பெயர்பெற்ற செய்தித்தாளாக அது இருந்தால், இன்னும் நலம்.
* உங்களின் நண்பர்களிடம் அல்லது வீட்டில் உள்ளோரிடம், முடிந்தளவு ஆங்கிலத்திலேயே பேசினால், உங்களின் ஆங்கிலம் பேசும் திறன் சிறப்பான முறையில் வளர்ச்சியடையும்.
* நீங்கள் ஏதேனும் ஒரு பிடித்தமான தலைப்பை, ஒரு நாளைக்கு ஒன்று என்ற முறையில் தேர்வுசெய்து கொண்டு, அதைப்பற்றி குறைந்தபட்சம் ஒரு பக்கம், தினமும் ஆங்கிலத்தில் எழுதிப் பார்க்க வேண்டும். இதன்மூலம், உங்களின் எழுதும் திறன் சிறப்பான முறையில் வளர்ச்சியடையும்.
* Word Power Made Easy என்பன போன்ற புகழ்பெற்ற புத்தகங்களை வைத்துக்கொண்டு, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
No comments:
Post a Comment