Thursday, 2 May 2013


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8%
 அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் 
செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று உத்தரவிட்டார்.
 இதையடுத்து தற்பொழுது 72% ஆக உள்ள அகவிலைப்படியானது
 80% ஆக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு
 01.01.2013 முதல் வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசுக்கு கூடுதலாக

 ரூ.1,631 கோடி செலவாகும். இந்த அகவிலைப்படி உயர்வின்
 மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள்
 என 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று கூறினார்.
 அண்மையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 8%
 அகவிலைப்படி உயர்வு வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment