மே 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம்
வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய
பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து மே 2013 வரை
8.97 புள்ளிகள் அதிகரித்து 88.97ஆக உள்ளது.
Monday, 8 July 2013
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த புதிய அரசாணை வெளியீடு
தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் அனுமதியின்றி
கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, புதிய
அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது; இதில், கட்டமைப்பு மற்றும் அடிப்படை
வசதிகள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைத்
தவிர்த்து, தமிழகத்தில் பிற பகுதிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும்
கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வரன் முறைப்படுத்த, கடந்த 2002ல் தமிழ்நாடு
மாநகராட்சி சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்து, ஐகோர்ட்
உத்தரவால் அது கைவிடப்பட்டது.அதனைக் கொண்டு வந்த அதே அ.தி.மு.க., அரசு,
2007 ஜூலை 1க்கு முன்பாக தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட அனுமதியற்ற,
விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, வீட்டு வசதி மற்றும்
நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் 2 அரசாணைகளை (எண்:234 மற்றும் 235 )
கடந்த ஆண்டு அக்.,30ல் வெளியிட்டது.
தீத்தடுப்பு வசதிகள், அவசர வழிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குனரிடம் சான்று பெற வேண்டும்; கட்டடத்தின் வளாகத்திற்குள் அல்லது 250 மீட்டர் தூரத்துக்குள் "பார்க்கிங்&' வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்; கட்டடம் அமைந்துள்ள சாலையின் அகலத்தைப் பொறுத்தவரை, 20 சதவீதம் வரை விதிமீறலை அனுமதிக்கலாம்; பக்கத்திறவிடம் (செட் பேக்) மற்றும் தள வியாபித பரப்பு (எப்.எஸ்.ஐ.,-புளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ்) விதிமீறல், 50 சதவீதம் வரை இருக்கலாம் என்பது போன்ற நிபந்தனைகள் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தன.
கட்டடம் அமைந்துள்ள நில பயன்பாடு, அதற்குரியதாக மட்டுமே இருக்கவேண்டும்; விவசாய நிலத்தில் தொழிற்சாலை கட்டடம் கட்டியிருந்தால், அதை வரன்முறைப் படுத்த முடியாது; உரிய அதிகார அமைப்பிடம் திட்ட அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே வரன்முறைப்படுத்த வேண்டும்; நகராட்சி, மாநகராட்சிகளின் அதிகாரத்துக்குட்பட்ட கட்டடங்களுக்கு அந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாகவும், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ளூர் திட்டக்குழுமம் போன்ற நகர ஊரமைப்புத்துறை மூலமாகவும் இதற்காக விண்ணப்பிக்குமாறும் அரசாணை அறிவுறுத்தியிருந்தது.
இந்த அரசாணையின்படி, தங்களது கட்டடங்களை வரன்முறைப்படுத்திக்கொள்ள, சில சலுகைகளை வழங்க வேண்டுமென்று, தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதிக்கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. அதாவது, அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; மொத்தப்பரப்பில், 10 சதவீத இடங்களை (ரிசர்வ் சைட்) உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அந்த இடங்களை திறந்த வெளி அல்லது பூங்காவாக தாங்களே பராமரித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தன.அதனை ஏற்றுக்கொண்டுள்ள தமிழக அரசு, கடந்த 26ம் தேதியன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஓர் அரசாணையை (எண்:161) வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்தில் 50 சதவீதத்தைச் செலுத்தினால் போதும்; ஆறு மாதங்களுக்குள் இத்தொகையைச் செலுத்துவோர்க்கு மட்டுமே இது பொருந்தும்; அத்துடன், 10 சதவீத திறந்த வெளி இடங்களில் (ரிசர்வ் சைட்) கட்டடம் எதுவும் கட்டக்கூடாது; மைதானமாக பயன் படுத்தக்கூடாது; அந்த இடங்களை பூங்காக்களாக அந்தந்த கல்வி நிறுவனங்களே பராமரிக்கலாம்.
இந்த அரசாணையால், அரசுக்குக் கிடைக்க வேண்டிய கட்டமைப்புக் கட்டணத்தில், 50 சதவீதம் இழப்பு ஏற்படும்; தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவன கட்டடங்கள் செலுத்த வேண்டிய தொகை என்று கணக்கிட்டால், இது பல நூறு கோடி ரூபாயைத் தாண்டும்; இதைக் குறைத்ததன் பின்னணியில், பெரும்தொகை கை மாறியிருக்க வாய்ப்புள்ளதாக நகர ஊரமைப்புத்துறை அலுவலர்களே சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில், அனுமதியே பெறாமல், கணக்கிலேயே வராமலிருந்த கல்வி நிறுவன கட்டடங்கள், அங்குள்ள திறந்தவெளியிடங்கள் ஆகியவை குறித்த விபரங்கள் இதனால் தெரியவருமென்றும் நம்புகின்றனர்.

Friday, 5 July 2013
Wednesday, 3 July 2013
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில்எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து (மாதிரி கணக்கீட்டுடன்)
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது
தனி ஊதியம் ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில்
எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து நண்பர்களுக்கு
எழுந்துள்ள சந்தேகம் சார்ந்த விளக்கம்.
நிதித்துறை கடித எண்.8764, நாள்.18.4.12. இல்
இத்தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்
கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கடிதத்தில் பார்வை 5 - இல் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்திலும் இதற்கான விளக்கம் 19.7.11 இல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில ஒன்றியங்களில் பதவி உயர்வின் போது 3% ஊதிய உயர்வுக்கு மட்டுமே இத்தனி ஊதியம் கணக்கில் கொள்ளப்படுகிறது. அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.
சில இடங்களில் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் இத்தனி ஊதியத்தை சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்கின்றனர்.

புதிய நியமனதாரர்கள் 1.6.2009 - க்கு பின்னர்
நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்புதான். பழைய
ஊதிய விகிதமே இருந்தால் கூட அவர்களுக்கு, தற்போது பெற்றுவருவதைவிட கூடுதல்
ஊதியம் கிடைத்திருக்கும். இதன் விளக்கத்தை மற்றொரு பதிவில் விளக்குகிறேன்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை முன்வைத்து கோரிக்கை மற்றும்
போராட்டங்கள் நடத்தி இன்று இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் அனைவரும்
தேவையானவற்றை பெற்றுவிட்டனர். தற்போது பதவி உயர்வின் போது தனி ஊதியம்
அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவது குறித்து சந்தேகம் கேட்பதாக கூறி
ஆதங்கத்தை வெளிக்காட்டுவது வேதனையான ஒன்று.
முந்தைய ஊதிய குழுவில் இருந்த தனி ஊதியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் போது 5% தனி ஊதியம் அளிக்கப்பட்டுவந்தது. மற்றும் தேர்வு நிலையின் போது அந்த ஊதிய நிலையில் அமையாத தொகை தனி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து வந்த ஆறாவது ஊதிய குழுவில் இத்தனி ஊதியங்கலெல்லாம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துதான் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது.
இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவதில் எத்தனை கேள்விகள், கணக்குப்பார்த்தல்கள் !!!!!!!
இடைநிலை ஆசிரியர்களே விழிப்படையுங்கள்.
பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்ட விவரம் மதுரை தணிக்கை அலுவலக கடித நகல் மூலம் அறியலாம். இதனை நம் பெரும்பாலான கல்விசார் வலைதளங்கள் வெளியிட்டதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இடைநிலை
ஆசிரியர் பதவியில்(கீழ்பதவியில்)ஊதிய உயர்வு பெற்றுக்கொண்ட பின்பு
உயர்பதவியில் (தொடக்கப்பள்ளி த.ஆ)ஊதிய நிர்ண்யம் செய்தல் கணக்கீடு
1
|
01.10.2012 அன்று பெற்று வரும் ஊதியம் மற்றும் ஊதியக்கட்டு
|
ரூ-17120/
----------------------------------------------- PB-1-5200-20200+2800
G.P+750PP
|
2
|
01.10.2012-ஆண்டுநிறை ஊதிய உயர்வு
|
17120X3% = ரூ-520/-
|
3
|
01.10.2012-ல் ஊதிய உயர்வுக்கு பின் ஊதியம்
|
ரூ-17640/-
----------------------------------------------- PB-1-5200-20200+2800
G.P+750PP
|
4
|
01.10.2012-ல்பதவிஉயர்விற்கு வழங்கப்படும் ஒரு ஊதிய உயர்வு 3% @ 17640X3% =530
|
ரூ- 530.00
|
5
|
தர ஊதிய வித்தியாசம்-4500-2800=
|
ரூ- 1700.00
|
6
|
01.10.2012அன்று தொ.ப.தலைமை ஆசிரியர் பதவியில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் மற்றும் ஊதியக்கட்டு
|
ரூ-19870/- (15370+4500G.P) - -----------------------------------------------
PB-2-9300-34800+4500 G.P
|
இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைகழகத்தின் மதுரை மண்டலம் மாற்றம்
சாத்தான்குளம்: இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் அஞ்சல்வழியில் பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
தற்போது பி.எட் படிப்பு இந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது. 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்தவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பயின்று பட்டம் வாங்க வேண்டும் (கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தால் 10 மாதம் மட்டுமே) மதுரை இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக் கழக மண்டல அலுவலகம் இயங்குகிறது.
இதில் பயின்ற மாணவர்கள் மே மாதம் நடக்கும் பி.எட் செமினார் வகுப்புகள் படிப்பதற்கான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதற்குரிய கவுன்சிலிங், தேர்வு கட்டணம் செலுத்துதல், உட்பட அனைத்து தேவைகளுக்கும் மதுரையில் உள்ள மண்டல அலுவலகத்தைபயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் மதுரை மண்டலத்தில் இருந்து பிரிந்து திருவனந்தபுரத்தில் இணைக்கப்பட்டிருப்பதுடன் விண்ணப்ப கட்டணமும் 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது
.
மதுரை மண்டலத்தை எளிதில் தொடர்பு கொண்டு தேர்வு, ரிசல்ட், அட்மிசன் உட்பட அனைத்து சந்தேகங்களும் போனிலும் நேரிலும் கேட்டு தெளிவடைந்து வரும் தபால் வழி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் இயக்கப்பட்டால் இரண்டாம் தரகுடிமக்களாக நடத்தப்படும் கசப்பான நிலை ஏற்படும், தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

Tuesday, 2 July 2013
Monday, 1 July 2013
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்:
ஆசிரியர்
தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இதுவரை 5½ லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக தேர்வு வாரிய
அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் 15 ஆயிரம் காலி இடங்களை நிரப்பும் வகையில் ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் மாதம் 17–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை 7 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ள நிலையில், ஏறத்தாழ 5½ லட்சம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
இன்று கடைசி நாள்
ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்தபடி, தகுதித்தேர்வுக்கு விண்ணப்பங்களை வழங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றாலும் அதன்பிறகு வரும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் கே.அறிவொளி தெரிவித்தார்.

இந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை
இந்த
ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக
வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை மாணவர்களிடம் பெறுவது குறித்து
தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆதி திராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு தோறும்
கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்
தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து
கல்வி மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட 119 பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆகஸ்டு 31ம்
தேதிக்குள் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் 6ம் வகுப்பு முதல்
மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வரை பயிலுவதற்கு உரிய கல்வி உதவித்தொகை
வழங்க பெற்றோரின் வருமான வரம்பு உள்ளிட்ட தகுதிகள் குறித்தும் விளக்கம்
அளிக்கப்பட்டது.
இதுவரை மாணவர்களுக்கு காசோலையாக வழங்கப்பட்டு
வந்த கல்வி உதவித்தொகை இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மாணவர்களின் வங்கி
கணக்குகளில் நேரிடையாக சேர்க்கப்பட உள்ளது. இதற்காக மாணவர்களுக்கு வங்கி
கணக்கு தொடங்குவது, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும்
தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுப்பது, விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்
முறை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்த
ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)