Wednesday 10 July 2013

இதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:

உலகம் முழுவதும் மரணத்திற்கு முன்னனி காரணமாக இருப்பது மாரடைப்பு. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை சாப்பிட்டால் இதயத்தை பாதுகாக்கலாம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை எடுப்பது ஒன்றும் கடினமல்ல.
நீங்கள் சாப்பிடும் உணவுகளை வேறுவிதமாக சமைத்தோ வேகவைத்தோ சாப்பிடலாம். நீங்கள் ஆரோக்கியமான நீண்ட கால வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் ஆரோக்கியமான இதயம் அவசியம் வேண்டும். இதற்கு உண்ணும் உணவினை மாற்றுவதே சிறந்தது... இதயத்தை பாதுகாக்க தினமும் செய்ய வேண்டியவைகளான உடற்பயிற்சி, உணவுமுறை, புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் நிறுத்துவது போன்றவையே.

ஆரோக்கியமான உணவுகள்:

இதயத்திற்கு இயற்கையான உணவுகள், குறைந்த கொழுப்புள்ள உணவுகளே சிறந்தது. நீங்கள் உணவு முறைகளில் ஒன்றினை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது விதைகள் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவை கெட்ட கொழுப்பை அகற்றி இதயத்தை பாதுகாக்கிறது. விதைகள் மற்றும் பருப்புகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வதால் பல நன்மைகளை இதயத்திற்கு வழங்குகிறது. இத்தகைய உணவுகள் ஊட்டச்சத்துகள் நிரப்பபட்டதாக இருக்கும் அதனால் உடலில் உள்ள நோய்களை விலக்கி தேசமடைந்த செல்களை மறுபூர்த்தி செய்ய உதவும்.

சல்மான் மீன்:

சல்மான் மீனில் புரோட்டீன் காணப்படுகிறது. உடலுக்கு தேவையான ஒமேகா3 கொழுப்பு அமிலங்களை பெற விரும்பினால் இந்த மீன் சரியான தேர்வாக இருக்கும். மற்ற உணவுகளை விட சல்மான் மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது. சல்மான் மீனை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடால் கூடுதல் சுகாதார நலன்களை பெறலாம். இது சுவையானது மற்றும் சமைக்க எளிதானது என்பதால் இதை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

சோயா உணவுகள்:

சல்மான் மீனை போன்று சோயாவும் புரதத்தினை ஆதாரமாக கொண்டுள்ளது. இதில் வைட்டமின், மினரல், தாதுக்கள், நார்சத்துகளை கொண்டுள்ளது. சோயாவில் உள்ள புரோட்டீன் இதயநோய்களை தடுக்க உதவும் ட்ரைகிளிசரைடுகளை கொண்டுள்ளது.

கீரை வகைகள் :

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் கீரைகளை தினமும் உணவில் ஒரு வேளையாவது சேர்த்துக் கொள்வது மிக அவசியம். இதில் பைத்தோகெமிக்கல்ஸ், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிரம்பிபி இருக்கிறது.. கீரையில் உள்ள இரும்பு தாதுக்கள் ஃபோலேட் பல்வேறு நோய்களுடன் சண்டையிட்டு இதயத்தை பாதுகாக்கிறது.

ஒட்ஸ் உணவு:

கொழுப்பு குறைக்க உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஃபைபர் போன்றவை இந்த தானியத்தில் உள்ளது.. இது முழுமையாக கொழுப்பை குறைக்க செயல்படுகிறது. ஒட்ஸ் உணவு கட்டுப்பாடுக்கான உணவு மட்டுமல்லாமல் இதயநோயை தடுக்கும் அபாயத்தையும் குறைக்கும் உணவாகவும் உள்ளது. மேலும் எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயை தடுக்கும் காரணிகளும் உள்ளது.

புளுபெர்ரி :

இது இயற்கையின் கொடையில் சிறந்த உணவாகும். இது சில நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இப்பழம் நீலநிறமாவதற்கு தேவையான ஆண்டியாக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. இது பைபர் மற்றும் வைட்டமின் சி யை கொண்டுள்ளது. இது இதயத்தில் உண்டாககூடிய நோய்களை தடுக்கிறது.thanks 

இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்

No comments:

Post a Comment