Thursday 25 July 2013

"ஆசிரியர் செம்மல்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து 60

Tuesday 23 July 2013

ஆசிரியர்கள் லேப்-டாப் பயன்படுத்துவது கட்டாயம்: தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு-thinamalar seithi

கோவை: "அரசு நடுநிலைப்பள்ளிகளில், வாரத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து பாடவேளைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட "லேப்டாப்" அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் கற்பிக்கவேண்டும்" என்று ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக் கல்வித்துறைக்கு உட்பட்ட 8026 நடுநிலைப்பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 
மேலும், "அனைவருக்கும் கல்வி இயக்கம்" சார்பிலும் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட கணினிகள், அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்துவது கிடையாது என்று புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவர்களின் கற்பித்தல் பணிக்கு ஆசிரியர்கள் கட்டாயம் அரசு துறையால் வழங்கப்பட்ட கணினி, மடிக்கணினி பயன்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவுரைகள் பாடவாரியாக தொகுத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையின் உத்தரவின்படி, வாரத்துக்கு குறைந்தது ஐந்து பாடவேளைகளில், குறுந்தகடுகள் துணையோடும், இணையதளங்களில் இருந்து பாடம் சார்ந்த வீடியோக்கள் மற்றும் பவர் பாயின்ட்டுகளை பதிவிறக்கம் செய்து 3டி, அனிமேஷன் உள்ளிட்ட முறைகளில், லேப்டாப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கவேண்டும்.
கோவை மாவட்டத்தில், 244 நடுநிலைப் பள்ளிகளுக்கு மடிக்கணினி மற்றும் கணினி வழங்கப்பட்டுள்ளது. இக்கணினி பயன்பாடு கற்பித்தல் முறையில் கட்டாயம் என்ற தகவல் அனுப்பப்பட்டு பள்ளி கற்பித்தல் முறையை மாவட்ட தொடக்கல்வி அலுவலக மேற்பார்வையில் கண்காணிக்கப்படுகிறது. உணவு இடைவேளைக்கு முன்பு, அல்லது பின்பு உள்ள பாடவகுப்புகளை கணினி வழி கற்பித்தல் முறைக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரும்பியதை தேர்ந்தெடுக்கும் தலைமுறை: டாக்டர்களின் குழந்தை இன்ஜினியர்

ஒவ்வொரு மாணவருக்கும் ஐ.ஐ.டி., யில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டுமெனில் ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு ஆகிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். இது பின் தங்கிய, கிராமப்புற மாணவர்களுக்கு கடினமானது. இதையும் மீறி நிறைய மாணவர்கள் சாதிக்கின்றனர்.

ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்-thina malar seithi

சென்னை: தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Monday 22 July 2013

CCE - ENGLISH MEDIUM - MODULE FOR ENGLISH MEDIUM TEACHERS FOR STD - I

விருது - தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் -களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "சிறந்த செயல்பாடுகளுக்கான விருது 2013" தகுதியுடையோர் விண்ணபங்களை 23.07.2013க்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

புத்தகம் வளர்ச்சிக்கு அஸ்திவாரம்

இணைய தளம், மொபைல் போன் என நவீன தொழில்நுட்பத்தின் வீச்சால், தகவல் பரிமாற்றம் வளர்ந்துள்ளது. எனினும், வாசிக்கும் பழக்கத்தின் நுட்பமான பயனை, அனுபவிப்பவர் மட்டுமே அறிவர்.

அரசு பள்ளிகளை தொழிற்சாலை நிறுவனங்கள் தத்தெடுப்பு:சரியும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புது முயற்சி

காஞ்சிபுரம்:அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களை உயர்த்தும் வகையில், பள்ளிகளை தொழிற்சாலைகள் தத் தெடுப்பதற்கு, வரவேற்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.

அங்கீகாரம் இல்லாத8 பள்ளிகளுக்கு "சீல்'

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத, 8 தொடக்க பள்ளிகளுக்கு கல்வித்துறையினர் சீல் வைத்தனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1.59 லட்சம் பேர் எழுதினர்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) எழுதினர்.

Sunday 21 July 2013

வாரத்துக்கு 5 பாடவேளைகளில் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் நடத்த வேண்டும்

நடுநிலைப் பள்ளிகளில் வாரத்துக்கு குறைந்தபட்சம் 5 பாடவேளைகளில் கம்ப்யூட்டர், லேப்-டாப்களை பயன்படுத்தி பாடம் நடத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 90 ஆயிரம் அதிகரிப்பு

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 90 ஆயிரம் அதிகரித்துள்ளதாக தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.