Tuesday 23 July 2013

விரும்பியதை தேர்ந்தெடுக்கும் தலைமுறை: டாக்டர்களின் குழந்தை இன்ஜினியர்

ஒவ்வொரு மாணவருக்கும் ஐ.ஐ.டி., யில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டுமெனில் ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு ஆகிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். இது பின் தங்கிய, கிராமப்புற மாணவர்களுக்கு கடினமானது. இதையும் மீறி நிறைய மாணவர்கள் சாதிக்கின்றனர்.

இந்நிலையில், நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, ஐ.ஐ.டி.,யில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், எத்தகைய சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். அவர்களது பெற்றோர் எந்த துறையில் இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோரின் குழந்தைகள். அதே வேளை, தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகள் சொற்ப அளவுக்கே உள்ளனர். இன்ஜினியர்களின் குழந்தைகளை விட, டாக்டர்களின் குழந்தைகள், அதிகளவில் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.
சமீபத்தில் நடந்த ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு 5.06 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் வெற்றி சதவீம் வெறும் 5.8 சதவீதம் பேர் தான். ஐ.ஐ.டி.,களில் மொத்த இடங்கள் 9,885. வெற்றி பெற்றவர்களில் 9.92 சதவீதம் பேர், டாக்டர்களின் குழந்தைகள்.
இதற்கு அடுத்து அரசு ஊழியர்களின் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாக, ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் குழந்தைகளும், குறிப்பிடத்தக்க அளவில் சாதித்துள்ளனர். இவர்களது சதவீதம் 5.21 சதவீதம்.
இது குறித்து ஐ.ஐ.டி., (அட்வான்ஸ்டு) தலைவர் எச்.சி.குப்தா கூறியதாவது: "குழந்தைகளுக்கு அரசு ஊழியர்கள், பாதுகாப்பான எதிர்காலத்தை திட்டமிட்டு செய்து தருகின்றனர். இன்ஜினியர்களை விட டாக்டர்கள், குழந்தைகளை இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்ய வைக்கின்றனர். காரணம் டாக்டர் படிப்பை முடித்து பணியை தொடர்வதற்கு, 9 ஆண்டுகள் ஆகின்றன. இன்ஜினியரிங்கில் படிக்கும் மாணவர்கள் நான்கு ஆண்டுகளில் பணியில் சேர்ந்து விடுகின்றனர். இது தான் இன்ஜினியரிங் படிப்பை டாக்டர்கள் தேர்வு செய்ய காரணம்" என்றார்

No comments:

Post a Comment