Thursday 26 December 2013

7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்தியஅரசு ஜரூர்!


            மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. 
 

Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த!!!

         இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

Skype மென்பொருளின் புது வசதிகள்:

1. HD Video Calling – உங்களிடம் நல்ல வெப்கேமிரா, இணைய இணைப்பு இருப்பின் துல்லியமான வீடியோ காலிங் வசதியை அனுபவிக்கலாம்.

2. Facebook Integration – இந்த மென்பொருளில் Facebook இனை இணைத்ததன் மூலம் எண்ணற்ற பேஸ்புக் பயனர்களிடம் ஸ்கைப் இல்லாமலே அவர்களுக்குள் இலவசமாக வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் உங்கள் Facebook கணக்கில் சென்று உங்கள் நண்பர்களூடன் பேசலாம். பேஸ்புக்கில் இங்கிருந்தே உங்கள் Status ஐ அப்டேட் செய்யலாம். உங்கள் நண்பர்களின் தகவல்/செய்திகளை இங்கிருந்தே பார்த்துக் கொள்ளலாம்

3. Group Screen Sharing – ஒரே நேரத்தில் பலர் குழுவாக Conference Callசெய்யும் போது உங்கள் டெஸ்க்டாப்பையோ அல்லது ஒரு மென்பொருளையோ நண்பர்களும் பார்க்கும் படி செய்யலாம். இந்த வசதி பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

4. Custom Chat and Sms – இந்த மென்பொருளிலேயே சாதாரண Chatting வசதியும் இருக்கிறது. மேலும் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளையும் அனுப்பிக் கொள்ளலாம்.

5. Skype to Skype பேசுவதற்கு இலவசமாகவும் மற்ற தொலைபேசிகளுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

தரவிறக்கச்சுட்டி: http://www.skype.com/intl/en-us/get-skype/
(இங்கேயே லினக்ஸ், ஆண்ட்ராய்டு, ஐபோன் பதிப்புகளும் இருக்கிறது)

Skype மென்பொருளினை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்த

ஸ்கைப் மென்பொருளை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்திக் கொள்ள Language Translation Pack ஒன்றினை தமிழர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். கீழிருக்கும் சுட்டியில் சென்று அதனைத் தரவிறக்கவும்.

பின்னர் ஸ்கைப் மென்பொருளில் சென்று Tools -> Change Language என்ற மெனுவில் செல்லவும். அதில் கடைசியாக இருக்கும் Load Language Fileஎன்பதைக் கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கிய மொழிக்கோப்பினை தேர்வு செய்தால் போதும். உடனடியாக ஸ்கைப் மென்பொருள் முழுவதும் தமிழில் மாறிவிடும்.

தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் சரிபார்ப்பு

      தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. 
 
 
         இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு ஏற்கெனவே ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (மேல்நிலை) ராஜராஜேஸ்வரி அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


          அனைத்துப் பள்ளிகளும் வருகிற ஜன.1ம் தேதி முதல் 3ம் தேதி மாலைக்குள் ஆன்லைனில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பக்கங்களை ஜன.4ம் தேதிக்குள் அனைத்துப் பள்ளி களும் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும். திருத்தங்கள் எதுவும் இல்லையெனில் ‘சரி பார்ப்பு பெயர் பட்டியல் கவனத்துடன் சரி பார்க்கப்பட்டது, திருத்தங்கள் ஏதும் இல்லை‘ என பள்ளித் தலைமை ஆசிரியர் சான்றளித்து முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பக்கங்களை ஜன.7ம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பின்னர் பெயர், பிறந்த தேதி, பள்ளி போன்றவற்றில் சில சமயங்களில் அச்சுப் பிழைகள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையால் மதிப்பெண் சான்றுகளுடன் மாணவர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு ஓட வேண்டியுள்ளது. இதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் கால விரயமும் ஏற்படுகிறது. இதை தவிர்த்து எந்தப் பிழையும் இன்றி மதிப்பெண் பட்டியல் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வுக்கு "ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு

தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்மூலம் பதியாத பள்ளிகள்புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
        பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்புபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, டிச.,10 க்குள் ஆன்லைனில் பதியஅரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால்சில பள்ளிகள் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாத பள்ளிகள்சரிபார்ப்பு பெயர் பட்டியல் (நாமினல் ரோல்) பெறாத பள்ளிகள்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலைநாளைக்குள் சென்னை அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டுமெனதெரிவிக்கப்பட்டுள்ளது.


           மேலும், "ஆன்லைன்'ல் பதிவு செய்த பள்ளிகள்சரிபார்ப்பு பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், "இன்சியல்"மதம்இனம் ஆகியவற்றை சரிபார்த்து, 2014 ஜன.,4 ல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் "ஆன்லைன்மூலம்,ஜன.,1 முதல் ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் பட்டியலில் உள்ள திருத்தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும்,தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Key Answer

Half yearly Exam Key Answer for 6 - 11th Standard

New TET Study Materials



Thanks to Sree Vaishnavi Computers, Arni, T.V.Malai Dt.

9ம் ஆண்டு சுனாமி பேரழிவு நினைவு நாள்

9ம் ஆண்டு சுனாமி பேரழிவு நினைவு நாள்

2004ம் ஆண்டு இதே நாள், டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவில் வந்த பூகம்பம் அதைத்தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளை பிணக்காடாக்கிய சுனாமி பேரழிவு நடந்தேறியது, தமிழகமும் கடும் உயிரிழப்புகளை சந்தித்தது.

கடல்கோள் என்று சங்க இலக்கியங்களில் நினைவு கூறப்படும் இந்த பேரழிவுகளினால் பல நகரங்களை கடலுக்கு காவு கொடுத்து இழந்துள்ளது தமிழ் தேசம்.

# சுனாமி பேரழிவுகளில் இறந்து போன அனைத்து உயிர்களுக்கும் நினைவு கூர்ந்துaeeo s அஞ்சலி செலுத்துகிறோம்.

இய்க்குநர் எம்.சிவக்குமாரின் சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு நூல் வெளியீட்டு விழா

STUDENTS COMPETION


சேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக வாசிப்பு முகாம்-டிசம்பர், 28,29

சேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக வாசிப்பு முகாம்-டிசம்பர், 28,29




தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கும் முகாமாக நடத்தபடுகிறது. இதுவரை 8 முறை புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றுள்ளது. தற்போது ஒன்பதாவது முறையாக சேலத்தில் நடைபெறுகிறது. எனவே தங்களுக்கு தொடர்புடைய ஆசிரியர்களை இப்புத்தக வாசிப்பு முகாமில் பங்கு பெறச் செய்யும்படி கேட்டு கொள்கிறோம். இரண்டு நாள் முகாமில் ஒவ்வொரு அமர்விலும் கல்வியின் அரசியல், சமகாலக் கல்விக்கூட பிரச்சினைகள், வகுப்பறை ஜனநாயகம் என பல்வேறு தலைப்புகளில் கருத்தாளர்கள் கலந்துரையாடுகின்றனர்.

பங்கேற்கும் கல்வியாளர்கள்: பேராசிரியர் ச.மாடசாமி, பேரா.கே.ராஜீ, ஆயிஷா நடராஜன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேரா.விஜயகுமார், பேரா.என்.மணி


புத்தகம்:திருமிகு இரா நடராஜன் அவர்களின்  “இது யாருடைய வகுப்பறை

பதிவுக்கு:
1. திருமிகு நீலா, புத்தக வாசிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் – 97866 26273
2. திருமிகு பாலசரவணன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் – 94861 61283

நிகழ்ச்சி நடைபெறும் நாள்:
2013 டிசம்பர் 28ந் தேதி காலை 9.00 மணி முதல் 29ந் தேதி மாலை 05.00 மணி வரை.

நிகழ்ச்சி நடைபெறும்  இடம்:
சமுதாய கூடம், சேலம் உருக்காலை, கணபதி பாளையம். கேட் எண்.1
Admin Hall. Salem Steel Plant, Ganapathypalayam.

போக்குவரத்து:
1. சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ஜங்சன் இரண்டு இடங்களிலிருந்தும் தாரமங்கலம் செல்லும் அனைத்து டவுன் பஸ் மற்றும் ரூட் பஸ்ஸும் செல்லும்.
2. பஸ் நிறுத்தம் – சேலம் ஸ்டீல் பிளான்ட், முதல் கேட்.

தொடர்புக்கு:
1. திருமிகு ராமமூர்த்தி – 94864 86755,
2. திருமிகு பாலசரவணன் - 94861 61283, 89031 61283
3. திருமிகு K.P. சுரேஷ்குமார் – 94433 91777
4. திருமிகு மீனாட்சி சுந்திரம் – 75986 70004.

Wednesday 25 December 2013

HAPPY CHRISTMAS.....


RTE

RIGHT TO EDUCATION (RTE)
சார்ந்த தெளிவுரைகள்.

.    இலவச மற்றும் கட்டாய  கல்வி உரிமைச்சட்டம், 2009. (FREE AND  
       COMPULSARY EDUCATION ACT, 2009) மத்திய அரசு வெளியீடு.
                              Click Here to Download    

.    RTE Model Rules Under Right to Education Act 2009.
                              Click Here to Download4.    Right to Education Act, Tamil Version. ( தமிழகத்தில் இச்சட்ட வரைவு 
       விதிகள் நிறைவு செய்வதற்கு முன்னர் கருத்து கேட்புக்காக 
       வெளியிடப்பட்ட தொகுப்பு)
                              Click Here to Download      

.    Right to Education 2009, Clarification on Provisions.
                              Click Here to Download

.   Guidelines regarding deployment of teachers for Elections.
                              Click Here to Download
.   Central Government authorises NCTE as Academic authority.
                             Click Here to Download 


எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்

 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "-வித்யாதிட்டம் மாநிலத்தில்முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளதுபுதுச்சேரியில் உள்ளபிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்.,மூலம் தகவல் தெரிவிக்கும்
திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்கள் "ஆப்சென்ட்ஆனாலோதாமதமாகவந்தாலோபெற்றோர்களின் மொபைல் போனுக்குபள்ளியில் இருந்து தகவல்பறக்கும்.மேலும்ரேங்க் கார்டு வழங்குவதுபெற்றோர் சந்திப்பு கூட்டம்விடுமுறைபோன்ற விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.சிலபள்ளிகளில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள்தினசரி தேர்வில்எடுத்த மார்க் போன்ற தகவல்களும் எஸ்.எம்எஸ்., மூலம் பெற்றோர்களுக்குதெரிவிக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம்மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் "கட்"அடித்தால் உடனடியாக தகவல் தெரிந்து கண்டிக்க முடியும் என்பதால்இத்திட்டம்,பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.எஸ்.எம்.எஸ்., மூலம்தகவல் தெரிவிக்கும் திட்டத்தை அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளதுஇதையடுத்து, "-வித்யாஎன்றபெயரில் இந்த திட்டம்முதன் முறையாக ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படஉள்ளது.முதற்கட்டமாக ஏனாம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசுஆங்கில உயர்நிலைப்பள்ளிகிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசுஉயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், "-வித்யாசெயல்பாட்டுக்குவருகிறது.மத்திய அரசு திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித்திட்டம்உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள, "-வித்யாதிட்டப் பணிகளில்ஏனாமில் உள்ள தேசிய தகவல் மைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இருபள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல்போன் உள்ளிட்ட விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முழு வீச்சில்நடந்து வருகிறதுஇரு பள்ளிகளை தொடர்ந்து ஏனாமில் உள்ள மற்ற பள்ளிகளில்இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதைதொடர்ந்துமாநிலம்முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், "-வித்யாதிட்டத்தை அமல்படுத்த புதுச்சேரிஅரசு திட்டமிட்டுள்ளது

10 12 nominal roll

24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்


ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 இந்தியன் ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி அவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராவது பயணத்தை மேற்க்கொள்ள முடியும். இதற்காக குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே ரயில் நிலைய மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை கொடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் போன்ற விழாக்களுக்கு குழுவாக செல்பவர்களது டிக்கெட்டுகளையும் மாற்றிக் கொள்ள இற்த திட்டம் அனுமதிக்கின்றது. பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்களும் இந்த வசதியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட அரசு ஊழியர் செல்ல முடியாத போது வேறொரு ஊழியரின் பெயரில் அவரது டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம்.

பயணம் செய்ய உள்ள ஊழியரின் உயர் அதிகாரி மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டை அந்த கல்வி நிறுவனத்தின் முதல்வரின் ஒப்புதலோடு வேறொரு மாணவருக்கு மாற்றிக் கொள்ள முடியும். மாணவர்களின் டிக்கெட்டுகளை மாற்ற ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை - பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கருக்கான வினா வங்கி

பட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்தாய்வு

எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது.

 எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது. பணம் செலுத்துதல், பதிவு உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு. எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

         மத்திய அரசின், 100க்கும் மேற்பட்ட துறைகளில், மொபைல் மூலமான நிர்வாகத்தை அமலாக்கும், பரீட்சார்த்த திட்டம், நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதன்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், 241 அப்ளிகேஷன்ஸ் வசதி, நேற்று பரிசோதனை அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. இதன்படி, தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி, டைரக்டரி சர்வீஸ் ஆகியவற்றில், இத்திட்டம் முதல் கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. "மொபைல் சேவா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து, மத்திய அரசின், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர், சத்ய நாராயணா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின், டிக்கெட் உறுதியானதும், மொபைல் போனுக்கு வரும், எஸ்.எம்.எஸ்., தகவல், முழு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 
 
          இதை பின்பற்றி, அரசு துறைகளில், எஸ்.எம்.எஸ்., தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. மொபைல் போன் மூலமான, இ கவர்னன்ஸ் நடைமுறை, படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது, டிஜிட்டல் முறையில் கையெப்பமிடப்பட்ட சான்றிதழ்கள், ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதே பாணியில், மொபைல் போன் மூலம் அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ்., தகவல்களும், தகுந்த ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. அனைத்து அரசு துறைகளிலும், டிஜிட்டல் கையெழுத்துகள் ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை, நாங்கள் துவக்கியுள்ளோம். இது நடைமுறைக்கு வந்ததும், பொதுமக்களுக்கு, இந்த சேவையின் மூலம், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். விண்ணப்பம் பெறப்பட்டதற்கான தகவல், விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான தகவல் ஆகியவை, எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்பி வைக்கப்படும். இதன் பயனாக, அரசு அலுவலகங்களில், பேப்பர் பயன்பாட்டை குறைக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்

Department Exam - Materials

விடுதி மாணவர் சித்ரவதை: மாவட்ட பாதுகாப்பு அலுவலர் விசாரணை

அரசு குழந்தைகள் இல்லத்தில், மாணவரை அடித்து சித்ரவதை செய்தது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்தினார்.


தஞ்சை மகளிர் போலீஸ் நிலையம் அருகே உள்ள குழந்தைகள் இல்லத்தில் 86 பேர் தங்கிப் படிக்கின்றனர். இதில் 46 பேர் இல்ல வளாக பள்ளியிலும், 40 பேர் வெளி பள்ளிகளிலும் படிக்கின்றனர்.

தஞ்சையைச் சேர்ந்த மூர்த்தி மகன் சாந்தகுமார், 15 என்ற மாணவர், குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்து வருகிறார். நேற்று முன்தினம், இவரை இல்ல துப்புரவு பணியாளர் ரமேஷ் அடித்துள்ளார். தொடர்ந்து உதவி கண்காணிப்பாளர் கணபதி, ஆசிரியர் ஜெய்சங்கர் ஆகியோரும் சேர்ந்து, மாணவரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள், போலீசில் புகார் செய்துள்ளனர். தஞ்சை கலெக்டர் சுப்பையன் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் கூறுகையில், "மாணவர் சாந்தகுமாரை, துப்புரவு பணியாளர் உட்பட மூன்று பேர் அடித்துள்ளனர். கலெக்டர் உத்தரவில், விசாரணை நடத்தியுள்ளேன். விசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்" என்றார்

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்ததற்கான ஆணை

DEE - INCENTIVE ORDER FOR MIDDLE SCHOOL HM REG ORDER CLICK HERE...

ஆணை பகிர்வு : திரு.செல்வராஜ் கந்தசாமி, துணை பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்பு பெயர் பட்டியல் (CHECK LIST) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள்

அ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியல் சரிபார்த்து திருத்தங்களை அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் 01.01.2014 முதல் 03.01.2014 வரை மேற்கொள்ள உத்தரவு