Wednesday 25 December 2013

விடுதி மாணவர் சித்ரவதை: மாவட்ட பாதுகாப்பு அலுவலர் விசாரணை

அரசு குழந்தைகள் இல்லத்தில், மாணவரை அடித்து சித்ரவதை செய்தது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்தினார்.


தஞ்சை மகளிர் போலீஸ் நிலையம் அருகே உள்ள குழந்தைகள் இல்லத்தில் 86 பேர் தங்கிப் படிக்கின்றனர். இதில் 46 பேர் இல்ல வளாக பள்ளியிலும், 40 பேர் வெளி பள்ளிகளிலும் படிக்கின்றனர்.

தஞ்சையைச் சேர்ந்த மூர்த்தி மகன் சாந்தகுமார், 15 என்ற மாணவர், குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்து வருகிறார். நேற்று முன்தினம், இவரை இல்ல துப்புரவு பணியாளர் ரமேஷ் அடித்துள்ளார். தொடர்ந்து உதவி கண்காணிப்பாளர் கணபதி, ஆசிரியர் ஜெய்சங்கர் ஆகியோரும் சேர்ந்து, மாணவரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள், போலீசில் புகார் செய்துள்ளனர். தஞ்சை கலெக்டர் சுப்பையன் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் கூறுகையில், "மாணவர் சாந்தகுமாரை, துப்புரவு பணியாளர் உட்பட மூன்று பேர் அடித்துள்ளனர். கலெக்டர் உத்தரவில், விசாரணை நடத்தியுள்ளேன். விசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்" என்றார்

No comments:

Post a Comment