Wednesday 6 November 2013

மனிதனின் வாழ்க்கையில்

மனிதனின் வாழ்க்கையில் விளையாட்டுப் பருவம், கல்வி கற்கும் பருவம், திருமணப் பருவம், குழந்தைகள் பெறுகின்ற பருவம், செல்வம் சேர்க்கும் பருவம், உலகம் சுற்றிப் பார்த்து, வாழ்க்கையை அனுபவிக்கும் பருவம், ஓய்வெடுக்கும் பருவம், இறுதி காலம் என்றவாறு பிரிக்கலாம்.
இவற்றில், இன்று மிகப் பெரிய போராட்டமாக இருப்பது கல்வி கற்கும் கால கட்டம். ஆம். ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, அக்குழந்தைக்கு எல்.கே.ஜி அட்மிஷனுக்கு கியூவில் நின்று, விண்ணப்பம் வாங்கி, முன்பதிவு செய்து கொள்ளும் அவசர போட்டி உலகத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சுருங்கச் சொன்னால், ப்ரீ ஸ்கூல் அட்மிஷன் முதல் போஸ்ட் கிராஜூவேட் அட்மிஷன் வரை இதே நிலை தான்.
கல்வியில் முன்னேறியவர்களுக்கு வேலை, செல்வம், திருமணம் இதெல்லாம் தானாகவே கிடைத்து விடுவதைக் காண்கின்றோம். மனிதர்களின் வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருப்பதே கல்வி தான். இத்தனை சக்தி வாய்ந்த கல்வியை முழுமையாகப் பெறுவதற்கு, மக்கள் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
பொதுவாக, கல்வி கற்கின்ற காலகட்டங்களை கீழ்க்காணுமாறு பிரித்துக் கொள்ளலாம்.
1. எல்.கே.ஜி, யு.கே.ஜி
2. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை
3. +1, +2
4. பட்டப்படிப்பு
5. உயர்  பட்டப்படிப்பு
6. ஆராய்ச்சிப் படிப்பு
இன்றைய  காலகட்டத்தில், பெற்றோர்களின் படிப்பு, அவர்களின் வேலை அல்லது தொழில், வேலை நேரம், மாத வருமானம் இப்படி ஏகப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தான் ஒரு குழந்தைக்கு  நல்ல பள்ளியில் எல்.கே.ஜி அட்மிஷன் கிடைக்கிறது. அதிலும் பெற்றோருக்கும், குழந்தைக்கும் தனித்தனியாக  இன்டர்வியூ வேறு நடக்கிறது.
குழந்தைகளின்  எல்.கே.ஜி அட்மிஷனுக்கே மூச்சு வாங்கும் பெற்றோர்கள், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள், அவர்கள் வளர்ந்து 10-ம் வகுப்புக்கு வந்து நிற்கிறார்கள். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், அடுத்த வீட்டுப் பையன்/பெண்ணை விட, அதிக மார்க் எடுக்க வைக்க பெரிய யாகமே செய்ய வேண்டியிருக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு, +1, +2-வில் எந்த குரூப் எடுப்பது என்ற  குழப்பம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள்  என்று பலரது ஆலோசனைகள் தந்த பெரிய குழப்பத்தில்,  தன் குழந்தையின் ஆர்வம் அடிபட்டுப் போக, +1, +2  அட்மிஷனும் அமோகமாக நடந்தேறுகிறது.
இதனைத்  தொடர்ந்து, கல்லூரியில் சேர்க்க மதிப்பெண்கள், காத்திருப்புகள், கவுன்சிலிங்குகள் என்று அடுத்தகட்டப் போராட்டம். எந்த குரூப் கிடைத்தால், காம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலை கிடைக்கும்? ஐந்திலக்க சம்பளம் கொடுக்கின்ற, எந்த மாதிரி அயல்நாட்டு நிறுவனங்கள் சார்ந்த ஐ.டி நிறுவனங்கள் காம்பஸ் இன்டர்வியூவிற்கு வருகிறார்கள்? எப்படி ஒரே வருடத்தில் வீடு, கார், வசதிகள் என்று வாழ்க்கையில் செட்டில் ஆகலாம்? இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஒரு வழியாக கல்லூரி அட்மிஷனும் நடந்தேறுகிறது.
இனிமையாக  கழிய வேண்டிய, மாணவ மாணவிகளின் கல்லூரிக் காலங்கள், காம்பஸ் இன்டர்வியூ டென்ஷனிலேயே கழிகிறது. காம்பஸ் இன்டர்வியூவில் பாஸ் செய்வதற்கு ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி, சாஃப்ட்வேர் லாஜிகல் பயிற்சி, சரளமாக உரையாடப் பயிற்சி, இன்டர்வியூ செய்பவர்கள் கேட்கின்ற எரிச்சலடைய வைக்கின்ற கேள்விகளுக்குக்  கோபப்படாமல் சிரிப்பதற்குக் கற்றுக் கொடுக்கும் சகிப்புத் தன்மைப் பயிற்சி...என்று ஏராளமான பயிற்சி வகுப்புகளுடன் இன்றைய இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கை களைகட்டுகிறது.
காம்பஸ் இன்டர்வியூ, அதைத் தொடர்ந்து ஐந்திலக்க சம்பளம் என்று பலவிதமான கனவுகள், கற்பனைகள். மேலும், பெற்றோர், உற்றோரின் ஆசைகள், எதிர்பார்ப்புகள்.  இதோடு  கூடவே, காம்பஸ் இன்டர்வியூவில் ஜெயிக்கா விட்டால் என்ன செய்வது? அற்பமாய் பார்க்கும் சக மாணவ மாணவிகள் கண்களில் இருந்து எப்படி தப்பிப்பது?  இதுபோன்ற மன அழுத்தங்களுடன், இன்றைய இளைஞர்களுக்கு  கலகலப்பாகக் கழிய வேண்டிய கல்லூரி வாழ்க்கை, போராட்ட வாழ்க்கையாகவே இருக்கிறது.
இதில் ஏதேனும் ஓரிடத்தில் சற்றே சருக்கினாலும், பெற்றோர் மற்றும் குழந்தைகள் என இருபாலருக்குமே கோபம், ஆத்திரம், மன அழுத்தம் தான்.

Tuesday 5 November 2013

TET RESULT PAPER II

Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Provisional Mark List for Paper II

TET RESULT FOR PAPER I

TET



டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடு

சென்னை: டி.இ.டி., தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் முதல் தாளுக்கான முடிவுகள் டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. டி.இ.டி., தேர்வின் இரண்டாம் தாள் முடிவு இன்று நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்தி 72 ஆயிரம் பேர் எழுதினர். 

Monday 4 November 2013

ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வெழுதுவோர் அறிய வேண்டியவை

தொடர்ச்சியாக பல வகைகளில் ஆங்கில மொழி பயிற்சியில் ஈடுபட்டால், ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற மொழித்திறன் சோதனை தேர்வுகளில் எளிதாக சாதித்து, வெளிநாட்டுப் படிப்பு மற்றும் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத நாட்டினர், ஆங்கிலத்தை நன்றாக கற்றுக்கொண்டுள்ளனரா என்பதை சோதிக்க, சர்வதேச அங்கீகாரத்துடன் நடத்தப்படும் சிலவகை ஆங்கிலத் திறன் கண்டறியும் தேர்வுகளில் முக்கியமானது IELTS. இத்தேர்வை எழுதும் மாணவர்கள், தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
இக்கட்டுரையின் மூலமாக, IELTS மதிப்பெண் முறை, பதிவுசெய்யும் முறை மற்றும் அதற்கு தயாராதல் உள்ளிட்ட பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
IELTS மதிப்பெண் இடும் முறை
IELTS டெஸ்ட் மதிப்பெண்களை வழங்க மற்றும் தெரிவிக்க, 9 - Band முறை பயன்படுத்தப்படுகிறது. கவனித்தல், வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் ஆகியவற்றுக்கு தனித்தனி band மதிப்பெண்களைப் பெறுவீர்கள் மற்றும் 1 முதல் 9 வரை, ஒட்டுமொத்த band மதிப்பெண், band scale அடிப்படையில் வழங்கப்படும்.
IELTS தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?
இத்தேர்வைப் பொறுத்தவரை, Pass அல்லது Fail என்ற சிஸ்டம் இல்லை. ஒவ்வொரு கல்வி நிறுவனமும், ஒரு தனி மனிதரின் திறமையை மதிப்பிட, தனக்கென ஒரு மதிப்பெண் வரையறையை வைத்திருக்கும். இதனடிப்படையிலேயே மாணவர் தேர்வு செய்யும் செயல்பாடு நடைபெறும்.
IELTS தேர்வெழுதும் அறைக்குள்  என்னென்ன கொண்டு செல்ல முடியும்?
ஒருவருடைய செல்லத்தக்க அசல் பாஸ்போர்ட், பேனா, பென்சில் மற்றும் ரப்பர் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்.
தேர்வு முடிவுகளைப் பெறுவது எப்போது?
நீங்கள் தேர்வெழுதிய 13 நாட்களுக்குப் பிறகு, உங்களின் தேர்வு முடிவுகள் படிவம், உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், இதனை ஆன்லைனிலும் பார்க்கலாம்.
மெயின் தேர்வு முடிந்ததில் இருந்து 13வது நாளில், நண்பகல் 12 மணியிலிருந்து www.britishcouncil.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
ஒரு தேர்வை எழுதிய பின்னர், மீண்டும் மறுதேர்வை எழுத, குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் ஆகும்?
இத்தேர்வை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானலும் எழுதலாம். அதற்கென்று எந்த உச்சவரம்பும் இல்லை. அதேசமயம், மறுதேர்வை எழுதும் முன்னதாக, இன்னும் நன்றாக படிப்பது நல்லது.
சில தேர்வு மையங்கள், தயார்படுத்துதல் படிப்புகள் மற்றும் மொழி வகுப்புகளை நடத்துகின்றன. மேலும், IELTS அதிகாரப்பூர்வ பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்தி, உங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இத்தேர்வுக்கு பதிவு செய்வது எப்படி?
இத்தேர்வுக்கு பதிவுசெய்ய 2 முறைகள் உள்ளன. www.britishcouncil.in என்ற வலைதளம் சென்று ஆன்லைன் முறையில் பதிவு செய்யலாம் மற்றும் அருகிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகம் அல்லது நூலகம் சென்று நேரடி முறையிலும் பதிவு செய்யலாம்.
IELTS தேர்வெழுதுவோருக்கான சில ஆலோசனைகள்
* குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு ஆங்கில செய்தித்தாளாவது படிக்க வேண்டும். ஆங்கில மொழிப் பயன்பாட்டிற்கு பெயர்பெற்ற செய்தித்தாளாக அது இருந்தால், இன்னும் நலம்.
* உங்களின் நண்பர்களிடம் அல்லது வீட்டில் உள்ளோரிடம், முடிந்தளவு ஆங்கிலத்திலேயே பேசினால், உங்களின் ஆங்கிலம் பேசும் திறன் சிறப்பான முறையில் வளர்ச்சியடையும்.
* நீங்கள் ஏதேனும் ஒரு பிடித்தமான தலைப்பை, ஒரு நாளைக்கு ஒன்று என்ற முறையில் தேர்வுசெய்து கொண்டு, அதைப்பற்றி குறைந்தபட்சம் ஒரு பக்கம், தினமும் ஆங்கிலத்தில் எழுதிப் பார்க்க வேண்டும். இதன்மூலம், உங்களின் எழுதும் திறன் சிறப்பான முறையில் வளர்ச்சியடையும்.
* Word Power Made Easy என்பன போன்ற புகழ்பெற்ற புத்தகங்களை வைத்துக்கொண்டு, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

ENTERTAINMENT

Berlin Philharmonic Orchestra
Digital Concert Hall

Moderated by Anil Srinivasan

Digital Concert
15.11.2013, 6.30 p.m.
Goethe-Institut Auditorium, 4 Rutland Gate 5 Street, Chennai
You are cordially invited to watch The Berlin Philharmonic, one of the best orchestras in the world, on the big screen at the Goethe-Institut Chennai. Experience these exceptional musicians for yourself by means of the orchestra’s virtual concert venue and our own state-of-the-art technology.
Anil Srinivasan, the most well-known classical pianist from Chennai, will give an introduction to every concert that we show. So enjoy with us the unique artistic work of the Berliner Philharmoniker and Sir Simon Rattle. 
Programme:          
Wolfgang Amadeus Mozart: Symphony  No 30 , No 40, No 41

Entry on invitation only. 













Noisy Mama: Indian Jazz-Rock

in Cooperation with The Hindu Friday Review Music Festival 2013

Concert
14.11.2013, 7.00 p.m.
Vivanta Taj Connemara, Binny Road, Chennai
Carola Grey: Percussion, vocal, Konnakol
John Anthony: Guitar
Palakkad Sreeram: Vocal, Flute, percussion
Biju Paulose: Keyboards
Napier Peter Naveen Kumar: Bass 


Enjoy the unique “Noisy Mama” blend of Indian Jazz-Rock, solid Jazz-Funk and Rock grooves, a sophisticated combination of Indian and Western rhythms. Originally founded by award-winning German drummer and composer Carola Grey as a jazz/fusion group in New York, the new Noisy Mama now includes some of the most amazing Indian musicians.
Carola’s compositions evoke Indian ragas as well as Western melody and harmony, bound together by her distinctive style of writing, playing and singing. With input from her fantastic cast of musicians, the two worlds are combined seemingly without effort. Together, the band creates a special sound that leaves audiences spellbound in India and Europe alike.
After receiving the Munich Music Award and producing their highly acclaimed album “Road to Goa” (NMP 2012), the band performed their first big shows in India earlier this year. Witness the beginning of a band that just might blow the music world away!

Entry on Invitation Only!











SOPHIE SCHOLL – Die letzten Tage
Dir: Marc Rothemund | 2005 | 116 min.

in Cooperation with Madras Film Society

Film
28.11.2013, 6.30 p.m.
Goethe-Institut Auditorium, 4 Rutland Gate 5 Street, Chennai
Spring 1943: Sophie and Hans Scholl are risking their lives working for the anti-Nazi resistance movement “Die weiβe Rose”. When they distribute leaflets against the National Socialist regime at Munich University, Sophie and her brother are arrested. The film adopts Sophie’s perspective to tell the story of her interrogations and imprisonment.
While working on the script, Rothemund and his team gained access to the protocol of Sophie Scholl’s interrogations. With this powerful new information, they were able to paint a picture of her impressive resolve and defiance in the face of mortal danger.

GOETHE-INSTITUT CHENNAI



Like the other Goethe-Instituts in India, the Goethe-Institut Chennai is known as Max Mueller Bhavan, named after the German Indologist Friedrich Max Mueller (1823 – 1900) who became famous for his work in Oxford on the ancient Indian texts and his impact on the study of Indian philology, history and religion.

The Goethe-Institut/Max Mueller Bhavan Chennai was founded in 1960. It offers language courses, organizes cultural events and has a Library.

Goethe-Institut Chennai is the contact point for anyone interested in German culture and for those who want to study or teach German. The language department offers a full range of language courses and official exams. In our multimedia classrooms, students not only learn German, but develop a more comprehensive understanding of German culture. Learning about German life and culture is an integral part of the language courses. Our students have free access to a DVD library and receive notice and invites to our cultural events. 

For over 50 years, the Goethe-Institut Chennai has been promoting an ongoing dialogue and exchange between Indian and German artists and experts in order to present German culture abroad and help shape a current understanding of Germany today. In order to achieve this goal, we collaborate extensively with our partners at the local universities (Anna University, IIT Madras etc).

The program department organizes a broad range of events and supports projects in the fields of film and new media, arts, theatre and dance, music, literature, architecture and more. Events take place in our auditorium as well as at partner venues. Beyond this, the Goethe-Institut arranges thematic trips to Germany for experts in the arts and media.

EMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி என்பதை காண

அன்புமிக்க ஆசிரிய பெருமக்களே! மாணவர்களின் ஆதார் அட்டை எண்ணை EMIS இல் உள்ளீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் ஆதார் அட்டை நகலினை பெற்று உள்ளீடு செய்யுங்கள். ஆதார் அட்டை நகலினை பள்ளியில் வைத்துக் கொள்ளுங்கள்.

C E O CHENNAI EMIS

UDISE form for 2013-14-uploaded on 28-10-13

Dear Headmasters and Principals,

This is a circular from Rashtriya Madhyamik Shiksha Abhiyan, District Project Office, Presidency Girls HSS, Egmore, Chennai -8, to the Headmasters and Principals of all types of High and Higher secondary schools, in Chennai.  I have attached the UDISE 2013-14 format , herewith.  Please download the format , fill up and have it as your copy. 

A meeting of the Headmasters and Principals will be organised soon. I request you to fill up the format that will be distributed to you in the meeting and submit the same to the ADPC, RMSA.

A power point presentation on tricky points will be uploaded soon in this site.

அண்ணாமலை பல்கலை: தொலையில் பல்வேறு படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை, தொழில் படிப்பு, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்பு குறித்து விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகிய தகவல்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 07ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்கள் பெற www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தேசிய சட்டப் பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு

தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், எம்.பில், பி.எச்டி படிப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒடிசாவில் இயங்கி வரும் தேசிய சட்டப் பல்கலையில், 2013-14 கல்வியாண்டில் எம்.பில், பி.எச்டி படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படிப்பில் சேர விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலையில் எல்.எல்.எம்.,யில் 55 சதவீது மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுகலை சட்டப் படிப்பு அல்லது அதற்கு தகுதியான படிப்பில் 55 சதவீத பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடத்தப்படுகின்றது.
கூடுதல் விவரங்களை அறிய தேசிய சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

அடுத்த 24 நேரத்தில் தென்னிந்தியாவில் மழை பெய்யும்

அடுத்த 24 நேரத்தில் தென்னிந்தியாவில் மழை பெய்யும்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: கடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை

குமரிக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆங்காங்கே கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஞாயிற்றுக்கிழமை மாலை கன்னியாகுமரி அருகே கடலில் நிலை கொண்டுள்ளது. அது மேலும் மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திங்கள்கிழமை அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யும். தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, ராயலசீமை, கர்நாடகம், தெற்கு உள் கர்நாடகம், லட்சத்தீவு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்துள்ளது. மிக அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 100 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்(மி.மீட்டரில்):
ராமநாதபுரம் (100), மைலாடி (கன்னியாகுமரி) 90, சாத்தான்குளம், சேரன்மகாதேவி 80, திருச்செந்தூர், பாபநாசம் 70, மணிமுத்தாறு, சாத்தனூர் அணை 60 நாகர்கோவில், பாம்பன், நாங்குநேரி 50 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போதிய மழை இல்லை:
வடகிழக்கு பருவமழை தொடங்கி 10 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இதுவரை போதிய மழை பெய்யவில்லை. கடந்த வாரம் வங்கக்கடலின் தென் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திரத்துக்குச் சென்றதால் அங்கு கன மழை பெய்து, பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
ஆனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில்தான் கனமழை பெய்தது. இந்த நிலையில், குமரி கடல் அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையாவது தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்குமா என்று எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே உள்ளது.

கனமழை: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்ககடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த குறைந்தழுத்த காற்று தாழ்வு நிலை நகர்ந்து தற்போது கன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்  என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என கல்வித்துறை இயக்குனர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

தொடர்மழை: விழுப்புரம் நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சம்பத் உத்தரவிட்டார்.
விடுமுறை அறிவிப்பு காலதாமதாக வெளியிடப்பட்டதால்,  காலையில் பள்ளிக்குக் கிளம்பிச் சென்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

SSA SPD

SSA SPD ஆய்வு கூட்ட அறிக்கை: நாள் 18.10.2013- மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன



HRSS HM PANEL

HRSS HM Panel Preparation Instruction & Forms as on 01.01.2014 - Click Here

CRC NOVEMBER 2013



*மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை-06.11.2013
உயர் தொடக்கநிலை-08.11.2013
*மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை-12.11.2013
உயர் தொடக்கநிலை-19.11.2013
*வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS"பயிற்சி.

தொடக்க நிலை-16.11.2013

உயர் தொடக்கநிலை-23.11.2013