Monday 22 July 2013

அங்கீகாரம் இல்லாத8 பள்ளிகளுக்கு "சீல்'

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத, 8 தொடக்க பள்ளிகளுக்கு கல்வித்துறையினர் சீல் வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில், 384 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் அரசு அனுமதியுடன் செயல்படுகிறது. மேலும், பல பள்ளிகள் அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக கல்வித் துறைக்கு புகார்கள் வந்தது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து, அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த சோளிங்கர் மேட்டூர், ஸ்ரீ சாய் பாபா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, ஒடுக்கத்தூர் சரஸ்வதி வித்யாலயா மழலையர் பள்ளி, ஜோலார்பேட்டை மண்டல வாடி பத்மஸ்ரீ மழலயர் பள்ளி, திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் ராம கிருஷ்ணா மழலயர் பள்ளி, திருப்பத்தூர் அடுத்த பாப்பனூர் வெற்றி விகாஸ் மழலயர் பள்ளி, கந்திலி செவ்வாத்தூர் சன் பீம் பள்ளி, திமிரி மாம்பாக்கம் அருணாசலம் மழலயர் பள்ளிகள், வேலூர் மாவட்ட தொடக்கக் கல்விதுறையினர் நேற்று, மூடி சீல் வைத்தனர்.இப்பள்ளிகளில் படித்த, 1,200 மாணவ, மாணவிகள் வேறு பள்ளிகளில் சேர்க்க கல்வித் துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment