Friday 12 July 2013

அனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்ஜூலை 11,2013,10:18 IST

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் அனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் தனியார் பள்ளி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றும் அறியாத ஏராளமான பிஞ்சுகள் கருகின. இச்சம்பவம் உலகையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து, உஷாரான தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும், பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து கிடுக்கிப்பிடி போட்டனர்.
பொதுவாக பெரும்பாலான பள்ளிகளில் போதிய கட்டட வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், பல பகுதிகளில் பழுதடைந்த கட்டடங்களில் பள்ளிகள் இயங்குகின்றன. போதிய கழிவறை, பாதுகாப்புச் சாதனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை.
போதிய அளவு பள்ளி வாகன வசதிகள் ஏற்படுத்தாமல், அதிக மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் அவல நிலையும் பல பகுதிகளில் காணப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் ஆய்வின் போது அதிகாரிகளின் உதவியுடன் சரிகட்டப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. மேலும், அனுமதி பெறாத கட்டடங்களிலும் வகுப்புகள் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களால், மாணவர்களுக்கு பாதுகாப்பு இன்மையும், எதிர்காலம் கேள்விக்குறியாகவும் உள்ளது.
இந்நிலையில், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரான்சிஸ், நல்லூர் பஞ்., சில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அனுமதி பெறாத கட்டத்தில் செயல்படுகிறது. வீடுகள், கடைகள் போன்றவை கூட அனுமதி பெறாமல் கட்டப்பட்டால், விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளிக் கட்டடத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
இங்கு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி அனுமதி இன்றி செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரான்சிஸ் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.
மேலும், அனுமதி பெறாத கட்டடத்தில் பள்ளி இயங்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.BY DINAMALAR

No comments:

Post a Comment