Wednesday 10 July 2013

உரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை 48 மணி நேரத்தில் பெறலாம்

சென்னை : ‘உரிய கட்டணத்தை செலுத்தி, 48 மணி நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டையை  பெறலாம்‘ என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான விக்ரம் கபூர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான, வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கான மையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகியவைகளில் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட மையங்களில் தொடர்புடைய சட்டப்பேரவை தொகுதிகளின் விவரம் வருமாறு:

சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதியை சேர்ந்தவர்கள் வாக்காளர் பதிவு மையத்தில் உள்ள அலுவலரை தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், பதிவுகளை திருத்தம் செய்தல் மற்றும் வாக்காளர் அட்டை பெறு தல் தொடர்பான உரிய படிவங்களை பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை மையங்களில் வழங்கி ஒப்புகை பெற்று கொள்ளலாம். இந்த மையங்களில் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் ‘001சி‘ உடன் உரிய கட்டணத்தினை செலுத்தி 48 மணி நேரத்திற்குள் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம். மண்டல அலுவலங்களில் உள்ள இந்த மையங்களில் மட்டுமே அணுகி சரியான விவரங்களையும், படிவங்களை யும் பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment