Saturday 3 August 2013

கர்நாடகாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு பால் வழங்கும் திட்டம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு, வாரத்தில், மூன்று நாட்கள் இலவச பால் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
பால் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகையை, 2 ரூபாயிலிருந்து, 4 ரூபாயாக, கர்நாடக மாநில அரசு உயர்த்தியது. அதனால், கர்நாடகா மில்க் பெடரேஷனுக்கு, பால் உற்பத்தியாளர்கள், பால் சப்ளை செய்வது அதிகரித்தது.
தற்போது, அதிக சப்ளையால், பால் மீதமாவதை, அதிகாரிகள், அரசின் கவனத்து கொண்டு சென்றனர். மீதமாகும் பாலை, பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
கர்நாடகா மாநிலம், ஒசகோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு பால் வினியோகத்தை, அவர் நேற்று துவக்கி வைத்தார். ஆரம்பத்தில் பால் பவுடரிலிருந்து பால் தயாரித்து வழங்கவும், பின்னர், "பிளக்ஸி பாக்கெட்" மூலம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு, ஹூப்ளியை தவிர, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, 65 லட்சம் மாணவர்களுக்கும், அங்கன்வாடிகளில், 39 லட்சம் குழந்தைகளுக்கும் பால் வழங்கப்படும்.

No comments:

Post a Comment