Tuesday 6 August 2013

போலி ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அனுமதி சீட்டு பெறாமல் பள்ளி பணிக்காக என போலியாக "ஸ்டிக்கர்" ஒட்டப்பட்டு வலம் வரும் தனியார் வாகனங்களால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது.
சென்னையில், டிரைவரின் அஜாக்கிரதையால் பள்ளி மாணவி பலியானார். இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளி பணிக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு கெடுபிடியாக கண்காணிக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் 330 வாகனங்கள், பள்ளி பணிக்காக இயக்கப்படுகின்றன.
சில வாகனங்களின் கண்ணாடியில் "பள்ளி பணிக்காக" என்ற மஞ்சள் நிற ஸ்டிக்கர் ஒட்ட்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் நிலை என்ன? என தெரியாமல் மாணவர்கள் பயணிப்பதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர் காத்தலிங்கன் கூறியதாவது:
"ஆய்வின்போது, குறைபாடு இருப்பின் அனுமதி சீட்டு மறுக்கப்படும். தனியாரால் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் முறையாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வுக்கு பின், இதுபோன்ற வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும்.
2013 ஏப்., 1ம் தேதி முதல் பெர்மிட், எப்.சி., ஓட்டுனர் உரிமம் அல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தோம். அனுமதி சீட்டு இன்றி பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டால் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment