Saturday 20 July 2013

மாற்றுத் திறனுடைய குழந்தைகள் பள்ளியின் சேர்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாற்றுத் திறனுடைய
குழந்தைகளை சிறப்புப் பள்ளியில் சேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளி முன்பு நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மாற்றுத் திறனுடைய குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வர வேண்டும். இவர்களின் வாழ்க்கைத் தரம் உயர தமிழக அரசு அனைத்து உதவிகளையும் இலவசமாக செய்து தருவதுடன், அனைத்து நடைமுறைகளையும் எளிமையாக்கியுள்ளது. நீங்கள் பிள்ளைகளைக் கொண்டு வந்து சேர்த்தால் போதும். இங்குள்ளவர்களே அனைத்து அரசின் நலத்திட்டங்களையும் பெற்றுத் தருவார்கள்.
இங்கு 0 முதல் 14 வயது வரையுள்ள மாற்றுத் திறுடையவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வித் திறன் பயிற்சி அளிக்கப்படும். பிசியோதெரபி நிபுணர்கள் மூலம் தேவையான பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். தேவைக்கேற்ப சிறப்பு உபகரணங்கள் வழங்கப்படும். தேவைப்படுவோருக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.0 வயதிலிருந்து 14 வயது வரையுள்ள மாற்றுத் திறனுடைய குழந்தைகள் தினக்கவனிப்பு மையம் மூலம் சேர்த்துக் கொள்ளப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.
பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மீண்டும் பள்ளியில் நிறைவு அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் சென்றன். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.பேரணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு, உதவி திட்ட அலுவலர் மாடசாமி, ஆசிரியப் பயிற்றுநர்கள் முருகுதிருநாவுக்கரசு, பெத்தனசாமி, உமாமகேஸ்வரி, வாசுகி, சுகந்திராசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2 comments: