Saturday 20 July 2013

ஈரோட்டில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 26–ந்தேதி நடக்கிறது

மாற்றுத்திறனாளிகளை விளையாட்டில் ஊக்கப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடைபெற உள்ளது. கடந்த 18–ந்தேதி நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டிருந்த இந்த விளையாட்டு போட்டிகள் வருகிற 26–ந்தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
கை, கால் ஊனமுற்றவர்களுக்கு இறகுப்பந்து, மேஜைப்பந்து ஆகிய 2 போட்டிகள் உள்ளன. இதில் இறகுப்பந்து போட்டியில் தனிநபர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கண் பார்வையற்றோர் மற்றும் குறைந்த அளவிலான கண் பார்வை உடையவர்களுக்கு கையுந்து பந்து போட்டியும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதவர்களுக்கு கபடி போட்டியும் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்பட உள்ளது.
விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் தகுந்த சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். வயது வரம்பு கிடையாது. இதுகுறித்த தகவல்களை மேலும் அறிந்து கொள்ள ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி கா.கனகராஜை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment