Friday 28 June 2013

ஞாயிறு அறிவியல் பள்ளி தொடங்கும் முன்னாள் இஸ்ரோ வல்லுநர்

பெங்களூரில் ஜூலை 14-ம் தேதி, பள்ளி மாணர்களுக்கான ஞாயிறு அறிவியல் பள்ளியைத் தொடங்க இருப்பதாக, இஸ்ரோவிலின் முன்னாள் சூரியஒளி மின்சக்தி பிரிவு வல்லுநர் சுஜாதா விர்தே தெரிவித்துள்ளார்.
 பெங்களூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில், அறிவியலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மிகக் குறைவு. இதைப் போக்கும் வகையில், சிறுவர்களிடம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி குறி்த்த ஆர்வத்தையும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 14-ம் தேதி, ஞாயிறு அறிவியல் பள்ளியை பெங்களூரில் தொடங்க இருக்கிறேன். இதில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இப்பள்ளி, ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமைகளில், 2 மணி நேரம் மட்டுமே இயங்கும். இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, சூரிய சக்தி மின் சக்தியாக மாறும் விதம், மோட்டார் வாகனங்கள் இயங்கும் விதம், மின்னணு தொழில்நுட்பத்தில் சென்சார்கள் மூலம், கருவிகளை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்குதல், மாதிரி கருவிகள் செய்தல், புதிய படைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 9035865668 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.NEWS DINAMANI

No comments:

Post a Comment