Wednesday, 26 June 2013

தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை

தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலைஜூன் 26,2013,14:55 IST

எழுத்தின் அளவு :


மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட வேண்டும். புத்தகத்தில் உள்ளதையே எழுத வேண்டும். முழு மதிப்பெண்ணை எடுத்தால்தான், நினைத்த மேற்படிப்பை படிக்க முடியும்.
இந்த கல்விமுறையால், மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களுக்கு அளவேயில்லை. வெறுமனே அரசு தேர்வுகளுக்கு தயாராகும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மன அழுத்தம் ஏற்படுவதில்லை. கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள், தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்கள் உள்பட, அனைத்து தரப்பாருக்குமே, படிப்பு தொடர்பான மன அழுத்தங்கள் உண்டு.
எனவே, இங்கே படிப்பது என்பதுதான் முக்கிய அம்சம். அது பள்ளியா, கல்லூரியா, தொலைநிலைக் கல்வியா அல்லது போட்டித் தேர்வுக்கு படிப்பதா என்பது விஷயமல்ல. தேர்வுக்கு படிக்கும் டென்ஷனிலிருந்து விடுபடுவதற்கு பல மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இக்கட்டுரை, சிறப்பான முறையில் எப்படியெல்லாம் படிக்கலாம் என்று அலசுகிறது.
பொருத்தமான நேரம்
படிப்பதற்கென்று, இதுதான் பொருத்தமான நேரம் என்பதெல்லாம் இல்லை. நமக்கு எந்த நேரம் வசதியாகவும், உற்சாகமாகவும் படுகிறதோ, அந்த நேரத்தையே, படிப்பதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, இரவு 10.30 மணிக்குமேல் உலகம் அமைதியாக இருக்கும். சிலருக்கு அந்த நேரம் மிகவும் பிடிக்கும்.
சிலருக்கு அதிகாலை 3 மணி அல்லது 4 மணிக்கு எழுந்து படிப்பது பிடிக்கும். சிலருக்கு, நண்பகல் வேளையில் படிப்பது பிடிக்கும். எனவே, இது அவரவர் உடல்நிலையையும், விருப்பத்தையும் பொறுத்தது. இதுதான் சிறந்த நேரம் என்றெல்லாம் எதுவும் இல்லை.
ஆரம்பத்திலிருந்தே படிக்கத் தொடங்குதல்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, தினந்தோறும் தங்களின் பாடங்கள் வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தப்படுவதால், அவர்களுக்கு பெரியளவில் பிரச்சினையில்லை. ஆனால், தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்கள், தேர்வு நெருங்கும் நேரம்வரை அலட்சியமாக விட்டுவிடுவார்கள். தங்களின் புத்தகங்களையே தொட மாட்டார்கள். தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன எனும் நிலை வரும்போதுதான், அவர்களின் பலர் படிக்கவே தொடங்குகின்றனர்.
இதனால், பலர், மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தொலைநிலைத் தேர்வை வெறுமனே நிறைவுசெய்ய வேண்டும் என்று எழுதுகிறவர்களைவிட, அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைப் படிப்பிற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே, ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களை படிக்கத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் இறுதி நேரத்தில் திருப்புதலை மேற்கொண்டு, சிறப்பாக எழுதி, அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.
போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். ஆரம்பம் முதலே கடினமாக படித்தால் மட்டுமே, அவற்றில் வெற்றிபெற முடியும்.
திட்டம் வகுத்தல்
என்னதான் கடினமாக உழைத்தாலும், திட்டமிட்டு உழைப்பவனே வெற்றியடைவான் என்பது பிரபலமான அறிவுரை மொழி. அதற்கேற்ப, என்னதான் அதிகநேரம் படித்தாலும், திட்டமிட்டு, தெளிவான புரிதலுடன் படித்தால்தான் பயன் கிடைக்கும். இந்த நாளுக்குள் இந்தப் பாடத்தை முடித்துவிட வேண்டும் மற்றும் இதை இத்தனைமுறை திரும்ப திரும்ப படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், எதற்கு எதைப் படித்தோம் என்று குழம்பி, தேர்வை எழுதுகையில், பலவற்றை மறந்து, சொதப்பி விடுவோம். எனவே, திட்டமிட்டு சிறப்பாக படித்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமானவற்றை குறிப்பிடல்
படிக்கும்போது முக்கியமான பாயின்டுகள் என்று தோன்றுபவைகளை பென்சிலின் மூலம் அடிக்கோடிட்டுக் கொண்டால், அவற்றை திரும்ப படிக்கும்போது எளிமையாக இருக்கும். மேலும், ஆங்கிலம் போன்ற வேற்றுமொழிகளில் பாடங்களைப் படிக்கையில், பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கும். எனவே, அதற்கான அர்த்தங்களை, அந்தந்த பக்கங்களிலேயே எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், நன்றாக புரிந்து படிக்க முடியும்.
போதுமான இடைவெளி
படிக்கையில், தொடர்ந்து பல மணிநேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கையில், சோர்வு ஏற்படுவதை தவிர்ப்பது கடினம். எனவே, தேவைப்படும் நேரத்தில், சிறிய சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து உட்கார்ந்தே படித்தால், சிறிதுநேரம் நடந்துகொண்டு படிக்கலாம். சிறிதுநேரம் கீழே அமர்ந்துகொண்டோ, எழுத்து மேசை பயன்படுத்தியோ அல்லது மேசை பயன்படுத்தியோ, இவ்வாறு மாறி மாறி செயல்பட்டு, நமது சோர்வை விரட்டலாம்.
வழக்கமாக படுக்கும் கட்டிலின் மீது, இரவில் அமர்ந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், பலருக்கு, இரவில் அதன்மீது அமர்ந்து படிக்கையில், விரைவில் தூக்க உணர்வு ஏற்படும்.
எவ்வளவு மதிப்பெண்?
தேர்வுக்கு படிக்கும்போதே, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்தால்போதும், 60 எடுத்தால்போதும் அல்லது 80 எடுத்தால்போதும் என்று நினைத்துப் படிப்பது பெரும் தவறு.
முடிந்தவரை, அனைத்து விஷயங்களையும் படிக்க வேண்டும். முழு மதிப்பெண்களுக்கு குறிவைத்து எழுத வேண்டும். அதேசமயம், Objective type தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண் உள்ள தேர்வுகளை எழுதுகையில் கவனமாக செயல்பட வேண்டும். மற்றபடி, இதர விரிவான எழுத்துத் தேர்வுகளில், முழு மதிப்பெண்களுக்கும் எழுத வேண்டும்.
அடுத்தவரை பின்பற்ற முயல வேண்டாம்
உங்களின் நண்பர் படிக்கும் முறை உங்களுக்கு ஒத்துவரலாம் அல்லது ஒத்துவராமல் போகலாம். உங்களின் நண்பர் அதிக மதிப்பெண்களைப் பெறுபவராகவும் இருக்கலாம். ஆனால், அதற்காக அவரையேப் பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்களுக்கு ஒத்துவராத முறையினால், உங்கள் படித்தல் செயல்பாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புண்டு.
எனவே, எந்தமுறையில் படித்தால் உங்களுக்கு விரைவில் சோர்வு ஏற்படாதோ, எளிதில் கிரகிக்க முடியுமோ, அதிகளவு படிக்க முடியுமோ, அந்த முறையையே பின்பற்றி, வெற்றிபெற முயற்சிக்க வேண்டும்.--dinamalar

பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல்வர்

தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் இன்று மடிக்கணினி வழங்கி பாராட்டினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகத்தில், 2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 201 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் தமிழக முதல்வர்.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு ரொக்க பரிசுகள் வழங்கி பாராட்டுவதோடு, அவர்களின் மேற்படிப்புகளுக்காகும் செலவினையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.
2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 9 மாணவிகள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 50 மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 129 மாணவ மாணவிகள், என மொத்தம் 188 மாணவ மாணவிகள்; 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 2 பேர் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 9 மாணவ மாணவிகள், என மொத்தம் 13 மாணவ மாணவிகள்; என மொத்தம், 201 மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கியதோடு, “உங்கள் சாதனைகளைக் கண்டு உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படுவதைப் போல, தமிழக அரசும் குறிப்பாக நானும் உங்கள் சாதனைக்காக மிகவும் பெருமிதம் அடைகிறேன்; உங்கள் அனைவருக்கும் நல்ல ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என்று மனதார வாழ்த்தினார்.
முதல்வரிடம் இருந்து பாராட்டோடு, மடிக்கணினிகளையும் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் தங்களைப் பாராட்டி மடிக்கணினிகளை வழங்கி ஊக்குவித்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
br‹id Kj‹ik¡ fšé mYtyç‹ brašKiwfŸ, br‹id-15
e.f.v©.2980/M2/2013,  ehŸ. 26.06.2013

bghUŸ:

gŸë¡ fšé¤Jiw – 2013-2014« fšé M©oš khzt/ khzéfS¡F Ïytr ngUªJ gaz m£il éiuªJ tH§Ftj‰Fça elto¡if nk‰bfhŸs mid¤J tif gŸë¤ jiyik MÁça®fS¡F m¿Îiu tH§Fjš rh®ò.

gh®it:
1.
br‹id-6, jäœehL gŸë¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ e.f.v©.035405/v«/Ï2/2013, ehŸ.22.06.2013.

2.
Ï›tYtyf  brašKiwfŸ e.f.v©.2980/M2/2013,ehŸ. 24.06.2013
-----
gh®it 2-š  fhQ« Ï›tYtyf brašKiwfë‹ bjhl®¢Áahf br‹id kht£l mid¤J MŒÎ  mYty®fŸ j§fŸ fšé kht£l¤ij rh®ªj gŸë¤ jiyik MÁça®fë‹ T£l¤Âid cldoahf el¤Â  Ïytr ngUªJ gaz m£il¡fhd é©z¥g§fis 27.06.2013 ¡FŸ khefu ngh¡Ftu¤J¡ fHf¤Â‰F  rk®¥Ã¤J cldoahf Ïytr ngUªJ gaz m£ilæid bgw jiyik MÁça®fS¡F  m¿Îiu tH§FkhW bjçé¡f¥gL»wJ.   
Ï¥bghUŸ rh®ªj étu m¿¡ifæid Ïiz¥Ãš F¿¥Ãl¥g£LŸs got¤Âš  ó®¤Â brŒJ 27.06.2013 khiy 5.00 kâ¡FŸ Kj‹ik¡ fšé mYtyf¤Â‰F  ä‹ mŠrš _y« mD¥Ãit¡f  mid¤J MŒÎ mYty®fS¡F«  m¿é¡fyh»wJ.
 Ï¥bghUŸ rh®ghd m¿¡ifæid gŸë¡ fšé Ïa¡FeU¡F clD¡Fl‹ mD¥Ãit¡f nt©oÍŸsjhš Ïš v›éj fhyjhkjä‹¿ mD¥Ã it¡f  m¿é¥gJl‹ fhyjhkj« V‰go‹ ËéisÎfS¡F rh®ªj MŒÎ  mYty®fns KG¥bghW¥ng‰f neçL« v‹W m¿é¡fyh»wJ.

Ïiz¥ò:got«.
               Kj‹ik¡ fšé mYty®
      br‹id.
bgWe®:1)mid¤J  kht£l¡ fšé  mYty®fŸ, br‹id kht£l«.
              2) M§»nyh/bk£ç¡/kht£l¤ bjhl¡f¡ fšé mYty®, br‹id kht£l«.


மதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்

மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின் துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
 
மதுரையில் காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் ஒரே நேரத்தில் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நெரிசலை தவிர்ப்பதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மதுரையில் உள்ள 61 பள்ளிகளின் துவக்க நேரத்தை காலை 8:30 மணிக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி கௌரவிப்பு

http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr260613g.jpg 

Tuesday, 25 June 2013

மருத்துவம் சாரா பட்ட படிப்பிற்கு விண்ணப்பம் விநியோகம்

சென்னை மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சாரா பட்ட படிப்பிற்கு 2013-14ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பப்படிவங்கள் இன்று காலை 10 மணி முதல் விநியோகிக்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை ஜூலை 05 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் Secretary. Selection Committee, Kilpauk, Chennai -10  என்னும் பெயரில் பெறப்பட்ட ரூ.350க்கான காசோலையை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் அரசு அலுவலர்களால் சான்றொப்பமிடப்பட்ட தங்களது ஜாதி சான்றிதழ்களின் இரு நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்,
+2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், அல்லது கணிதம் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பி.எஸ்சி.,(நர்சிங்), பி.பார்ம். பிபிடி, பி.ஏ.எஸ்.எல்.பி, பி.எஸ்சி(ரேடியாலஜி அன்ட் இமேஜிங் டெக்னாலஜி), பி.எஸ்சி., (ரேடியேஷன் டெக்னாலஜி), பிஒடி(ஆகுபேஷனல் தெரபி) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் கலந்தாய்வு: 3 நாட்களில் 6940 பேர் ஒதுக்கீடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் ஜூன் 23ம் தேதி நிலவரப்படி, 6490 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 8657 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 6940 மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இவற்றில் 1690 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. அதே சமயம் கலந்தாவில் பங்கேற்றும் எந்த கல்லூரியும் தேர்வு செய்யாதவர்கள் 27 பேர் ஆகும்.
கலந்தாய்வு குறித்த தகவல்களுக்கு www.annauniv.edu/tnea2013/press.html என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Monday, 24 June 2013

BUS PASS

br‹id Kj‹ik¡ fšé mYtyç‹ brašKiwfŸ, br‹id-15
e.f.v©.2980/M2/2013,  ehŸ. 24.06.2013

bghUŸ:

gŸë¡ fšé¤Jiw – 2013-2014« fšé M©oš khzt/ khzéfS¡F Ïytr ngUªJ gaz m£il éiuªJ tH§Ftj‰Fça elto¡if nk‰bfhŸs mid¤J tif gŸë¤ jiyik MÁça®fS¡F m¿Îiu tH§Fjš rh®ò.

gh®it:

br‹id-6, jäœehL gŸë¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ e.f.v©.035405/v«/Ï2/2013, ehŸ.22.06.2013.
-----
gh®itæš fhQ«    gŸë¡ fšé Ïa¡Feç‹ brašKiw¡»z§f, 2013-2014 M« fšé M©o‰fhd Ïytr ngUªJ gaz m£ilfŸ mid¤J muR k‰W« muR cjé bgW« gŸëfëš gæY« khzt®fS¡F 2013-2014 M« fšéah©oš  Ïytr ngUªJ gaz m£ilfis 26.06.2012  khiy 5.00 kâ¡FŸ  Correction list k‰W«  òÂa khzt®fS¡F, òÂa got« k‰W« ngh£nlh Ïiz¤J  (mid¤J tF¥òfS¡F«) ngh¡Ftu¤J¡ fHf nfh£l mYtyU¡F cldoahf vªj fhuz¤ij¡bfh©L Ïš Rz¡f« fh£lhkš mid¤J muR/muR cjébgW« gŸë¤  jiyik MÁça®fŸ cldo elto¡if vL¡f nt©L« v‹W« bjçé¡f¥gL»wJ.
Ï¥bghUŸ rh®ªj étu m¿¡ifæid Ïiz¥Ãš F¿¥Ãl¥g£LŸs got¤Âš  ÂdK« khiy 3.00 kâ¡FŸ mªjªj  kht£l¡ fšé mYtyf¤Â‰F ä‹ mŠrš _y« mD¥Ãit¡fΫ mid¤J tif gŸë¤ jiyik MÁça®fS¡F« m¿é¡fyh»wJ.
 Ï¥bghUŸ rh®ghd m¿¡ifæid gŸë¡ fšé Ïa¡FeU¡F clD¡Fl‹ mD¥Ãit¡f nt©oÍŸsjhš Ïš v›éj fhyjhkjä‹¿ m¿¡ifæid ä‹ mŠrš _y« 4.00 kâ¡FŸ mD¥Ã it¡f kht£l¡ fšé mYtyU¡F  m¿é¥gJl‹ fhyjhkj« V‰go‹ ËéisÎfS¡F rh®ªj MŒÎ  mYty®fns KG¥bghW¥ng‰f neçL« v‹W m¿é¡fyh»wJ.

Ïiz¥ò:got«.
               Kj‹ik¡ fšé mYty®
      br‹id.
bgWe®:1)mid¤J  kht£l¡ fšé  mYty®fŸ, br‹id kht£l«.
              2) M§»nyh/bk£ç¡/kht£l¤ bjhl¡f¡ fšé mYty®, br‹id kht£l«.

efš:     mid¤Jtif gŸë¤ jiyikahÁça®fŸ, br‹id kht£l«.

பாடவேளையில்தான் மாற்றம்; பள்ளி நேரத்தில் அல்ல

பள்ளிகளின் வேலை நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு யோகா, தியானம், நீதி போதனைகள், உடல் நலம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை கற்றுத்தரும் வகையில் பாடவேளை நேரத்தில் மட்டுமே மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பள்ளி வேலை நேரம் தொடர்பாக கடந்த 2 நாள்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
பள்ளிகளில் பாடவேளை நேரம் 45 நிமிஷங்களிலிருந்து 40 நிமிஷங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளி வேலை நாள்கள் மற்றும் விடுமுறை நாள்கள், பாடவேளை நேரங்களில் மாற்றம், காலை வழிபாட்டு முறை, உறுதிமொழிகள் ஏற்பு போன்றவை தொடர்பாக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்க பள்ளி நாட்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்காட்டி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இரண்டு நாள்களுக்கு முன்பாக அனுப்பப்பட்டது.
இதில் பள்ளிகளின் கால அட்டவணை என்ற பெயரில் பள்ளி தொடங்கும் நேரம், ஒவ்வொரு பாடவேளைக்கும் ஒதுக்க வேண்டிய நேரம், யோகா, சுகாதார கல்வி உள்ளிட்ட பாட இணைச் செயல்பாடுகள், மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அட்டவணையில் பள்ளி தொடங்கும் நேரம் காலை 9.30 மணி என்பதற்குப் பதிலாக காலை 9 மணி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளி வேலை நேரம் மாறுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது மாதிரி கால அட்டவணை மட்டுமே. பள்ளிகளின் நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பள்ளி மாணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். நீதிபோதனை, உடல் நலக் கல்வி, கலைக் கல்வி, வாழ்க்கைக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத்தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
யோகா, தியானப் பயிற்சிகள், எளிய உடற்பயிற்சிகள் மற்றும் நீதிபோதனை, மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள் போன்றவற்றுக்காக பாடவேளைகளில் 5 நிமிஷங்கள் குறைக்கப்பட்டன.
மதிய இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகளாக வாய்ப்பாடு சொல்லுதல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதைக் கேட்டு எழுதுதல், வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை இறுதி வகுப்பில் மாணவர்களின் படைப்பாற்றல் செயல்பாடுகளில் ஈடுபட மாணவர்களுக்கு ஊக்கம் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாத இறுதி வெள்ளிக்கிழமைகளில் கடந்த மாதத்தில் மாணவர் தயாரித்த தனித்திறன், படைப்பாற்றல்கள், வகுப்பு மாதிரித் தேர்வுகளின் மதிப்பெண்களை பெற்றோரை வரவழைத்து கலந்தாய்வு செய்தல் போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தன.
இதனை செயல்படுத்த பாடவேளை நேரங்களில் மாற்றம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கூறினர். அதனால், அவர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து பாடவேளைகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதற்காக மாதிரி பாட காலஅட்டவணையும் தயார் செய்யப்பட்டது.
இதேபோன்று பாடவேளை நேரங்களை பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரத்திற்குட்பட்டு மாற்றியமைத்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பாடவேளை கால அட்டவணையில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன.
எனவே தற்பொழுது வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தியாகும். பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பள்ளிகள் வழக்கமாக தற்பொழுது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும் என கே.தேவராஜன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்கள்
* வரும் கல்வியாண்டில் (2013-14) பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள செயல்பாடுகள்:
* பாடவேளை 45 நிமிஷங்களிலிருந்து 40 நிமிஷங்களாகக் குறைப்பு.
* இறைவணக்கம் முடிந்த பிறகு 5 நிமிஷங்கள் தியானம்.
* மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிஷங்களுக்கு முன்னதாக 15 நிமிஷங்கள் எளிய யோகா பயிற்சி.
* அடுத்த 15 நிமிஷங்களில் நீதிபோதனை, நன்னெறி கதைகள், மதச்சார்பின்மை, சமத்துவ சமுதாயம், உடல் நலம் மற்றும் சுகாதாரக் கல்வி, நாட்டுப்புறக்கலைகளைப் பற்றி அறிய கலைக் கல்வி, பொம்மை செய்தல், பூ வேலைப்பாடு, மணி வேலைப்பாடு, வாழ்க்கைக் கல்வி, மன அழுத்தத்தைத் தவிர்த்தல், சுற்றுச்சூழல் கல்வி, முதலுதவி, தற்காப்புப் பயிற்சிகள்.
* மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகளுக்கு 15 நிமிஷங்கள் (வாய்ப்பாட்டைச் சொல்லுதல், தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் செய்யுதல், 6 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைத்தல், 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நிமிஷங்கள் பொது அறிவு சம்பந்தமாகப் பேசுதல், குழு உரையாடல் போன்றவை).
* வார இறுதிநாளான வெள்ளிக்கிழமையின் இறுதி ஒரு மணி நேரம் பேசுதல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழிகள் கூறுதல், பழமொழி கூறுதல், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகள்.
* ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமையில் மாணவர்களின் படைப்பாற்றல்கள் மற்றும் வகுப்பு மாதிரித் தேர்வுகளின் மதிப்பெண்களை பெற்றோருடன் ஆலோசனை செய்தல்.
* வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 20 நிமிஷங்கள் இறைவணக்கக்
கூட்டம்.

Sunday, 23 June 2013

திருத்தப்பட வேண்டியவர்கள்

சென்ற மாதம்  சென்னை பிராட்வேயில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற  அருணாசாய்ராம் தமிழிசைக்கச்சேரி கேட்கப் போயிருந்தேன், நான் அருணாசாய்ராமின் தீவிர ரசிகன், சென்னையில் அவர்களது கச்சேரி எங்கே நடந்தாலும் போய்விடுவேன்,
அன்றைக்கு அரங்கு நிரம்பிய கூட்டம்,  ஒரு ரசிகர் எழுந்து சாய்பாபாவை பற்றி ஒரு பாட்டுப் பாட வேண்டும் என்று சப்தமாகக் கேட்டார்,  அருணா சாய்ராம் சிரித்தபடியே பார்க்கிறேன் என்று சொன்னார், அடுத்தபாடல் பாடி முடித்தவுடன் அதே ரசிகர் எழுந்து, சாய்பாபா பாட்டு என்று உரத்துக் கத்தினார்,
அருணாவிடம் அதே புன்னகை தான் மீண்டும் வெளிப்பட்டது, மூன்றாவது பாட்டு முடிந்தவுடன் அந்த நபர் எழுந்து கத்துவார் என்று மொத்த கூட்டமும் எதிர்பார்த்தது, அவர் இந்த முறை முன்வரிசைக்குப் போய் ஆத்திரமான குரலில் சாய்பாபா பாட்டு பாடியே ஆகணும் என்றார்
அந்தப் பாட்டின் பிரதி கைவசமில்லை என்று பதில் சொன்னார் அருணா சாய்ராம், அந்த நபர் விடுவதாக இல்லை, கத்திக் கொண்டேயிருந்தார், ஒட்டுமொத்த இசைநிகழ்வின் அமைதியை, அலாதியான அனுபவத்தை அந்த ஒரு நபர் தனது செயலால் முழுமையாகச் சிதறடித்துவிட்டார்,
இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாட்டுக் கேட்பது டூரிங் தியேட்டரில் அவதார் படம் பார்ப்பது போன்றது, பாடுகிறவர் கண்முன்னே தெரிவார், ஆனால் பாட்டு எங்கோ பல மைல் தூரத்தில் இருந்துகேட்பது போலிருக்கும்,
இத்தனை குளறுபடிகளையும் தாண்டிய மாயவசீகரம் அருணா சாய்ராமின் குரல், அது ஒரு தூய வெளிச்சம், அந்த வெளிச்சத்தில் நம்மைக் கரைத்துக் கொண்டுவிடுவது பாக்கியம்,
அருணா சாய்ராமின் புன்னகை அலாதியானது, பாடும் போது அவரது முகபாவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதில் தான் எத்தனை மாற்றங்கள்
பெருகிவிழும் அருவியின் அடியில் நிற்கும் போது ஏற்படும் பரவசமூட்டும் சிலிர்ப்பும், உடலற்றுப்போய் நீரோடு நீராகிவிடுவது போன்று உணர்வதும் அருணா சாய்ராம் பாடும் போதும் ஏற்படுகிறது,
காண வேண்டாமோ, இரு கண் இருக்கும் போது விண்ணுயர் கோபுரம் என்ற பாடல் எனக்கு விருப்பமான ஒன்று, அதை அருணா பாடும் போது மனது கனமேறி விம்மத் துவங்கிவிடுகிறது, என்னை விட என் மனைவி அருணா சாய்ராமினைத் தீவிரமாகக் கேட்பவள், ஆகவே அன்றைக்கு நாங்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம்,
அப்போது எதிர்வரிசையில் இருந்த பெண்ணின் செல்போன் அடிக்கவே கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தேன், அந்தப் பெண்  பாடலுக்கு தலையாட்டியபடியே ஏதோ வேலை செய்து கொண்டிருப்பதைக் கவனித்தேன், என்ன செய்கிறார் என்று உற்றுபார்த்த போது பள்ளி பிள்ளைகளின் பரிட்சைப் பேப்பர்களைத் திருத்திக் கொண்டிருந்தார்.
எனக்கு திகைப்பாக இருந்தது, கஷ்டப்பட்டு மாணவர்கள் படித்து பரிட்சை எழுதித் தந்தால் அந்தப் பேப்பர்களை இப்படி அலட்சியமாக பாட்டுக் கேட்டுக் கொண்டு கடகடவென புரட்டி சிவப்பு மசிப் பேனாவால் மார்க் போடுகிறாரே என்று ஆத்திரமாக வந்தது,
அந்தப் பெண்ணிற்கு நாற்பது வயதிருக்க கூடும், நான் பார்ப்பதைக் கவனித்தபடியே புன்னகை செய்தார், அவரது மடியில் இன்னொரு பேப்பர் கட்டு பிரிக்கபடாமல் இருந்தது, பள்ளிமுடிந்து அப்படியே கச்சேரிக்கு வந்திருக்கிறார் என்பது புரிந்தது, இசையில் அவர் காட்டும் ஆர்வம் இவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்றால், மாணவர்கள் படிப்பு விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை அலட்சியம், அந்தப் பெண் பேப்பரை விடுவிடுவென புரட்டி மார்க் போட்டபடியே ஆனந்தமாகத் தலையாட்டி பாட்டினை ரசித்துக் கொண்டிருந்தார்
பரிட்சை பேப்பரை இப்படி அவசர கோலத்தில் திருத்துவதைப் பார்த்த பிறகு என்னால் கச்சேரியைக் கேட்க முடியவில்லை, இத்தனை பேர் தன்னைப் பார்க்கிறார்களே என்று கூட அந்தப் பெண் கூச்சப்படவில்லை, அப்படியானால் இப்படி பேருந்து பயணத்தில், பூங்காவில், சினிமாத் தியேட்டரில், கச்சேரி நடுவில் பேப்பர் திருத்துவது ஒன்றும் தப்பில்லை என்று நினைக்கிறாரோ என்று மனது அந்தப் பிரச்சனையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த்து,
கச்சேரி முடிவதற்குள் அவர் இரண்டு கட்டுப் பேப்பரையும் திருத்தி முடித்திருந்தார்,  என்னால் அந்த செயலைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, ஆசிரியர் பணியில் இருக்கும் எனது நண்பருக்கு உடனே போன் செய்து புலம்பினேன், அவர் சிரித்தபடியே சொன்னார்
இது ஒன்றும் புதியதில்லை சார், எனது நண்பர் ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றுகிறார், அவர் தனது வகுப்பு மாணவர்கள் எழுதும் பரிட்சை பேப்பரை வீட்டில் கொண்டுவந்து போட்டுவிடுவார், பேப்பரைத் திருத்தி மார்க் போடுவது அவரது மனைவியின் வேலை, ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு போயிருந்தேன், ஆறாவது வகுப்பு படிக்கும் மகள், பத்தாம் வகுப்பு பேப்பரை திருத்திக் கொண்டிருக்கிறாள், ஏன் சார் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு எந்த ஒரு மாணவனையும் நான் பெயில் ஆக்குவதில்லை, மற்றபடி இவ்வளவு பரிட்சைப் பேப்பர்களைத் திருத்த ஏது நேரம், அதான் இப்படி  என்று அமைதியாகப் பதில் சொன்னார்
இவராவது பரவாயில்லை, இன்னொரு ஆசிரியர் மாணவர்களின் பரிட்சை பேப்பர்களை பைக்கில் செல்லும் போது வழியில் எங்கோ தவறவிட்டுவிட்டார், அந்த ஐம்பது மாணவர்களுக்கும் அவருக்குத் தோன்றிய மதிப்பெண்ணை குத்துமதிப்பாகப் போட்டுவிட்டதோடு தலைமை ஆசிரியர் வசம் இந்தச் செய்தி போய்சேரவிடாமல் மாணவர்களை மிரட்டி ஒடுக்கிவிட்டார்,  இப்படி ஊருக்கு நூறு சம்பவங்கள் நடக்கின்றன என்றார்
பரிட்சைப் பேப்பர்களைத் திருத்துவதில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் குளறுபடிகளைப் பற்றி அவர் பேசப்பேச எனக்கு ரத்தம் கொதிக்கத் துவங்கியது, அவர் சொன்னதில் பாதியை என்னால் நம்பவே முடியவில்லை, இவ்வளவு மோசமாகத் தான் நமது கல்வித்துறை செயல்படுகிறதா என்று ஆத்திரமாக வந்தது.
மறுநாள் எனக்கு தெரிந்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவனின் பரிட்சைப் பேப்பர்களை வாங்கிப் புரட்டிப்பார்த்தேன், ஒரே கேள்விக்கு இரண்டு முறை ஆசிரியர் மார்க் போட்டிருக்கிறார், ஒரு கேள்விக்கு மாணவன் எழுதிய பதிலைப் படிக்காமல் பத்திற்கு இரண்டு மதிப்பெண் போட்டிருக்கிறார், இத்துடன் அந்த பேப்பரில் யாரோ ஒருவரின் செல்போன் நம்பரை குறித்து வட்டம் போட்டு வைத்திருக்கிறார், இது தான் பரிட்சை பேப்பர் திருத்தும் லட்சணம் என்பது வருத்தம் தருவதாக இருந்தது,
அன்றிரவு எனக்குத் தெரிந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்குப் போன் செய்து பரிட்சை பேப்பர் திருத்துவதன் பின்னுள்ள பிரச்சனைகளைப் பற்றிக் கேட்டபோது அவர் சிரித்தபடியே சொன்னார்
அது டீச்சரோட மனநிலையைப் பொறுத்தது சார், பலநேரங்கள் பதிலைப் படிக்காமலே மார்க் போட்ருவாங்க, மார்க் டோட்டல் போடுறதுல பலருக்கு பிரச்சனை, பத்து இருபது மார்க் விடுதல் வந்துவிடும், அதை மாணவர்கள் திருத்தச் சொன்னால் ஆசிரியர்கள் கோபப்படுகிறார்கள், இப்போது உள்ள பல ஆசிரியர்களுக்குச் சுத்தமாகப் பொறுமை கிடையாது, ஒன்றிரண்டு ஆசிரியர்கள் தான் மாணவர்கள் நலனில் உண்மையாக அக்கறை காட்டுகிறார்கள், மற்றபடி பேப்பர் திருத்தக் கிடைக்கிற காசுக்குத் தான் வேலை செய்கிறார்கள்,
பரிட்சைப் பேப்பர்களை எப்படித் திருத்துவது என்பதற்கு இவர்களுக்கு பயிற்சியே கிடையாது., அதற்கென ஆண்டிற்கு ஒரு முறை சிறப்பு பயிற்சிகள் ஏதாவது நடத்தலாம், அதைப்பற்றி  எல்லாம் கல்வித்துறையில் யாருக்கு அக்கறை இருக்கிறது என்று சலித்துக் கொண்டார்
அப்படியானல் மாணவர்கள் விழுந்துவிழுந்து படித்துப் பரிட்சை எழுதுவது வெறும் கண்துடைப்பு நாடகம் தானா என்று கேட்டேன்
அப்படி முழுமையாக ஒதுக்கிவிட முடியாது, தவறு சிஸ்டம் மீது இருக்கிறது, அதை சில ஆசிரியர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறினார்,
எப்படி என்று கேட்டேன்
ஒரு வகுப்பிற்கு நூறு மாணவர்கள் வரை பள்ளி நிர்வாகம் சேர்த்துவிடுகிறார்கள், மாணவர்களின் பரிட்சைப் பேப்பரை ஆசிரியர் திருத்துவதற்கு போதுமான நேரம் அளிக்கபடுவதில்லை, பல தனியார் பள்ளிகளில் பரிட்சை நடந்த மறுநாளே பேப்பர் திருத்தித்தரப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள், பணிச்சுமை காரணமாக ஆசிரியர்களால் பேப்பர் திருத்துவதில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை, என்றார்.
இந்தப் பதில்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, நமது கல்விமுறையில் உடனடியாக மாற்றம் கொண்டுவர வேண்டியது பரிட்சைக்கு எப்படிக் கேள்விகள் கேட்பது, அதை எப்படித் திருத்துவது என்பதைப்பற்றியே,
இன்று நாம் நடைமுறையில் வைத்துள்ள பரிட்சை முறை மிகவும் அபத்தமான ஒன்று,
ஒரு மார்க், இரண்டு மார்க், ஐந்து மார்க், பத்து மார்க், வரைபடம், மனப்பாடப் பாட்டு என்று கேள்வி கேட்கும் வகைப்பாடு அரதப்பழைய முறை, பிரிட்டீஷ் கல்வியாளர்கள் அறிமுகப்படுத்திய முறையை அப்படியே நகலெடுத்து வருகிறோம், அத்துடன் இந்த முறையில் மாணவர்களின் கற்றல்திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியாது,  இதனால் மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாற்றி வருகிறோம்
சமீபமாக பிளஸ் 2 மாணவர்களுக்குக் காலாண்டு மற்றும் அரையாண்டு பரிட்சைகள்  மாநிலம் முழுவதும் ஒன்று போல நடத்தப்படுகின்றன, ஆனால் பெரும்பான்மை சிறுநகரங்கள், மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பரிடசைக்குரிய பாடங்களில் பாதி நடத்தபடாத காரணத்தால் மாணவர்கள் பொது கேள்விதாளைக் கண்டு மிரண்டு போய்விடுகிறார்கள்,
பொதுக் கேள்விதாளை அறிமுகம் செய்த அரசு பரிட்சைப் பேப்பரைத் திருத்துவதை உள்ளுக்குள்ளாகவே முடித்துக் கொள்கிறது, ஆகவே எந்த நோக்கத்திற்காக இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை
பெரும்பான்மை பள்ளிகளில் தமிழ் இலக்கணம் கற்றுதரப்படுவதேயில்லை, ஆகவே மாணவர்கள் இலக்கணம் சம்பந்தமான கேள்விகளை அப்படியே மனப்பாடம் செய்து விழுங்கிக் கொள்கிறார்கள், அல்லது அந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிடுகிறார்கள்,
பள்ளி ஆசிரியர்கள் பரிட்சைப் பேப்பர்களை முறையாக திருத்தியிருக்கிறார்களா என்று கவனிப்பதற்கு எந்தப் பள்ளியிலும் தனியாக ஒரு கமிட்டி இருப்பதாக நான் அறியவேயில்லை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை இன்றைக்கும் ஆசிரியர்கள் உனது பிராக்டிகல் மார்க் எனது கையில் தானிருக்கிறது, என்னை முறைத்துக் கொண்டால் உனது படிப்பு காலி என்று எச்சரிப்பதை காண முடிகிறது
கல்வியை வணிகமாக்கிச் சீரழித்துவிட்ட சூழலில் பரிட்சை பேப்பர்களை திருத்துவதைப் பொழுதுபோகாமல் ஆடும் புதிர்விளையாட்டினைப் போல ஆசிரியர்கள் மாற்றிவருவது வேதனைக்குரிய விஷயம்,
இப்படி அலட்சியமாகப் பரிட்சை பேப்பர்களைத் திருத்தும் ஆசிரியர்களை எப்படி, யார் திருத்துவது என்றுதான் புரியவில்லை. ஆனால் இதை இப்படியே அனுமதித்தால் நமது கல்விமுறை முற்றிலும் நாசமாகிவிடும் என்பதை மட்டும் தெளிவாக உணர முடிகிறது.
••••

இதயத்தோடு உறவாடும் தமிழ் ஒளி"சீரற்ற சமுதாயம் எதற்கு?-வாழ்வின் / சிறுமைகளை நொறுக்குவதில் தயங்க வேண்டாம்" -என அறைகூவியவன் மட்டுமல்ல அவன் எழுத்துகள் முழுமையும் அதற்காகஅர்ப்பணிக்கப்பட்டவையே!

 "அந்தி சிரித்திடும் போதிலே - உன்றன் / ஆசை பிறந்திடும் ஆயினும் / சந்தியில் வீதியின்ஓரத்தில் - ஒரு / சாக்கடையின் புழுப் போலவே / நொந்து நெளிந்திடும் ஏழைகள் - எனை /நோக்கி அழுதனர் காணடி!/எவ்விதம் இதைச் சொல்லுவேன் - அடிஎவ்விதம் துன்பத்தைஆற்றுவேன் "இப்படி காதல் மயக்கும் வேளையிலும் ஏழை துயர் எண்ணிக் கதறிய தமிழ்ஒளி போல் கவிஞர் வேறுண்டோ?

 "இக்கணந் தொட்டு நம் ஆசையும் - காதல் / இன்பமும் மக்களின் தொண்டடிஎனஅக்கவிதையின் இறுதியில் வெற்றுப் பிரகடனம் செய்தவன் அல்லன் தமிழ் ஒளிசொந்தவாழ்வில் காதலில் தோற்றான் - உளம் துடித்தான் ஆயினும் லட்சிய வாழ்வில் அவன்தோற்கவில்லைஅவனது கவிதைகள் இப்போதும் ரத்தமும் சதையுமாய் உயிர்த்துடிப்புடன்நம்மோடு உறவாடுவதே சாட்சி.

மூளையோடு உரையாடுவது கட்டுரைஇதயத்தோடு உறவாடுவது கவிதை.எக்காலத்திலும்இதுவே வரையப்படாத இலக்கணம்.தமிழ் ஒளி தனி வார்ப்புபாரதிதாசன் பரம்பரையில்வந்த தனி வார்ப்பு.அவன் கவிதைகள் இதயத்தோடு உறவாடுவதோடு நில்லாதுஇரத்தத்தைசூடேற்றும்நரம்புகளை முறுக்கேறச் செய்யும்.எங்கும் புதுக் குரல் சங்கம் இசைக்கும்.சத்திய தேவதை நர்த்தனமிட சர்வதேசிய சங்கீதம் ஒலிக்கும்

 "கந்தல் உடுத்திய கந்தன் மகிழ்கிறான் / கண்ணை உயர்த்தி இவ்விண்ணை அளக்கிறான் /வெந்திடும் வாழ்வில் ஊற்றப் புதுமழை / வேகமதாய் முகில் வந்து குவியுது"- அதுவே தமிழ்ஒளி கவிதை.

இவன் அரசியலை வெறுத்தவனில்லைஅரசியலில் ஜனித்தவன்சமூகம் விடுதலைபெறஅரசியலை சரியான திசையில் நகர்த்த முயன்றவன்.தடுமாற்றங்கள் எல்லோருக்கும்வரும்இவனுக்கும் வந்தது.ஆயினும்தடம்பதிக்கும் கவிதைகள் இவன் வர்க்க ஞானத்தின்சூரியதகிப்பை சொல்லிக்கொண்டே இருக்கும்.

“ புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளி கடிதம்!” என்ற கவிதை அதற்கோர்சான்றுபோராட்ட களத்தில் //எங்கள் குடிசைகளில் எமன் கூத்து! சாக்காடு! / வெங்குருதி வெள்ளம்! மரண வெடியோசை! / சூழ்ந்த இருளில், தியாகச் சுடர் எடுத்தோம் / சூழ்ந்த இருள் தன்னைச் சுட்டெரித்தோம் தியாகத்தால்" - என பொங்குவார் தமிழ் ஒளி.

1930 ஜுலையில் பாட்டாளிகள் மீது பிரெஞ்சு ஆதிக்கம் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையில் 12 பேர் உயிரிழந்தனர். அதே சமயம் உதட்டில் சோஷலிசம் பேசிய சிலர் துரோகம் செய்தனர். அதையொட்டியே இந்தக் கவிதைக் கடிதம் எழுதினார் தமிழ் ஒளி. அதில் பாடுவார்  " புதுவை பாட்டாளிவர்க்கமே!/ உன்னுடைய கைகளில் எஃகின் உரமுண்டு / மன்னர்களை ஓட்டும் மகத்தான சக்தி உண்டு / சோஷலிசம் பேசி சுரண்டலுக்குக் கால்பிடிப்போர் / வேஷம் கிழித்தெறியும் வீரமுண்டு ; வன்மையுண்டு! / அன்று புரிந்த சமர் ஆற்றல் உணர்ந்திடுக!/ இன்றைக்கே போர்முரசம் எண்டிசையும் கேட்கட்டும் " - இப்படி நம்பிக்கையும் தெம்பும் அளித்த கவிதைப் போராளி தமிழ் ஒளி.

மே தினமே வருக, மேதின ரோஜாக்கள் போன்ற கவிதைகள் எக்காலத்திலும் சாகாவரம் பெற்றவை. இந்தித் திணிப்பு போர்க்களத்தில் இவரது கவிதை முழக்கம் கூர்மையானது. உலகின்சொந்தக்காரன் எனினும் மொழியினைக் காப்பதில் முன்னிற்பது முரண்பாடல்ல. இயல்பானது. தேவையானது. ஆயினும் தனித்தமிழ் நாடு என்கிற கவிஞரின் அரசியலில் எமக்கு மாறுபாடு உண்டு. காலம்தான் கவிஞனையும் படைக்கிறது. காலத்தின் சுரபேதங்கள் கவிதையிலும் எதிரொலிக்கத்தான் செய்யும்.

" வாழையென உழைப்பென்னும் பலனையீந்து / மரணமெனும் சூறைவரும் வழியில் நின்றான் " விவசாயி அவன் படும் துயருக்கு பதில் எங்கே என கவிஞர் துடித்தெழுப்பிய கேள்விகளுக்கு இன்றுவரை சுதந்திர பாரதம் விடைகாண வில்லையே என்கிற பெரும் கவலை மேலிடுகிறது.
  "ஊன்று கோல் கைவிட்டு நழுவி வீழ / உயிர் நரம்பைப் பசியின்வாள் அறுத்துப்போட / ஈன்ற தாய் தந்தையரும் தன் முன்னோரும் / இடர்பட்டு வீழ்ந்திட்ட இருளில் வீழ்ந்தான் "என்று கவிஞர் குமுறி உரைத்தது இன்றும் தொடர்கிறதே! விடிவுக்கு வழி யாது ? 

" வேர்வையின் நன்மை விளைய உழைத்தவர் / வீறுடன் எழுவர்- ' வர்க்கப் / போர் இட' என்று புரட்சி முரசு / புவியில் ஒலிப்பது கேள் "- என திசைகாட்டும் கருவியாய் சுடர்கிறார் தமிழ் ஒளி.

கவிஞர்தம் பெருமை சொல்லிக் கொண்டே போகலாம்.  " ஞான ரதமேறி நாலுதிசை போற்ற வந்தாய்,/ ஊனமொடு நாங்களுனை ஓட்டினோம் தென்றிசைக்கு!/…../ வாசற் கதவடைத்து வாயடைத்துக் காதடைத்துத்/ தேசுடைய யாழைத் தெருவில் உடைத்தெறிந்தோம் " என பாரதிக்கு நாம் செய்த கேட்டை தமிழ் ஒளி வேதனை கொப்பளிக்கத் தீட்டினான். நாம் அதையே இப்போது தமிழ் ஒளிக்கு சொல்ல வேண்டியுள்ளதை காலத்தின் குற்றம் என்பதா? தமிழ் சமூகத்தின் அவலம் என்பதா ?

ஆயினும்  " பாட உனதுபுகழ் பாவலர்கள் வந்துற்றோம்! / நாட உனதுநெறி நல்லவர்கள் வந்துற்றோம்! "- இப்படி பாரதிக்கு தமிழ் ஒளி கொடுத்த உறுதியை இப்போது நாமும் தமிழ் ஒளிக்குத் தருவோம்.

தமிழ் ஒளி ! உனது கவிதையின் உயிராற்றலும்,தோழர்கள் துணைவலிமையும் இருக்க உனக்கு மரணமில்லை ஒருபோதும்! காலமழையில் கரைந்து போகாத எரிமலையே உனது கவிதைகள்.
அறிவியல்  உண்மைகளின் நெடும்பயணம் 
 
சு.பொ.அகத்தியலிங்கம்.
 
 
     தமிழுக்கு    புதிதாக  வந்துள்ள   காத்திர        மான  வரவு  இந்நூல்.    A Short   History   of  Nearly  Everything      என்கிற ஆங்கில  நூலின் தமிழாக்கம்.கிட்டத் தட்ட அனைத்தின் சுருக்கமான வரலாறுஎன்பதே ஆங்கில நூலின் தலைப்பு. புரிதலுக்காகவும்  - தமிழ் வாசகர் பரப்பைச் சென்ற டைவதற்காகவும் - அனைத்தையும் குறித்த சுருக்க மான வரலாறு;மனித  அறிவுத் தேட லின் முழுக்கதை   என  விரிந்த தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன் . நன்று. 
 
ஆறு பாகங்கள் , 30 அத்தியாயங்கள் , 640 பக்கங்களில் பிரபஞ்சம் குறித்த -  பிரபஞ்சத்திலுள்ள அனைத்தை யும் குறித்த - உயிரினம் குறித்த  - மனிதன் குறித்த - சரியான  உண்மைகளைச் சென்றடைய அறிவியல் உலகம்  நடத்திய நெடிய வரலாற்றுப் பயணத்தின் கதையே இந்நூல்.    
 
அது மட்டுமா? இந்த நூல் உருவான வரலாறே வியப் பூட்டக்கூடியது. முதல் இரண்டு அத்தியாயங்களுக் காக 19000 கி..மீ .பயணம். 17 அகழ்வாராய்ச்சிப் பகுதிகளுக்கு நேரடி விஜயம் . மேலும் டார்வின் பற்றி எழுத காலோப்பாகஸ் தீவுகளுக்கு 178 நாள் பயணம். கடல் உயிரி பற்றி அறிய 176 அருங்காட்சியகங்களில் விவர சேகரிப்பு. 200 வாழும் விஞ்ஞானிகளுடன் நேர்முக உரையாடல் . இப்படி பெரும் தேடலும் உழைப்பும் தன்னகத்தே கொண்டது இந்நூல். இதற்காக அவர் படித்த புத்தகங்கள் திரட்டிய தரவுகள் என அனைத் தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
 
சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் , வாயு மற்றும் தூசியைக் கொண்ட ஒரு மாபெரும் சுழல், 2400கி.மீ குறுக்காக விசும்பில் நாம் இப்போது இருக் கிற இடத்தில் திரண்டு ஒருங்கிணைந்து புவியான செய்திமுதல் ; 440 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புவியி லிருந்து பிய்ந்து நிலா உருவான கதை என  பிரபஞ் சத்தில் தொலைந்து போனது  என்கிற முதல் பாகம் மீவெடிப்பு குறித்து பேசுகிறது . சுமார் 1450 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை அறிவியல் எப்படிக் கண்டடைந்தது என்பது மிகவும் ஆர்வமூட்டக்கூடி யது .
 
மண்ணியலும் வேதியலும் எப்போது அறிவிய லின் முன்னணிக்கு வந்தது; டைனசார் கண்டு பிடிக்க நடந்த பெரும் போராட்டம் எவ்வாறு நிகழ்ந்தது;  தோல்விகளும், ஏமாற்றங்களும், பலிகளும்,பழிவாங்கல்களும், அறிவியல் வரலாற்றிலும் ஊடாடி இருக்கிறது ; இவற்றை எல்லாம்  புவியின் அளவு என்கிற இரண்டாவது பாகம் நயம்பட உரைக் கிறது. ஆங்கிலம் தெரியா மல் ஸ்வீடன் மொழியில் எழுதியதால் ஷீலேவுக்கு அவர் ஆக்ஸிசனைக் கண்டுபிடித்த புகழ் கிடைக்க வில்லை. குளோரினை ஷீலேவே கண்டு பிடித்திருந்தாலும் 36 ஆண்டுகளுக்கு பிறகு கண்டு பிடித்த ஹம்ப்ரி டேவிக்கே அந்த பெருமை சேர்ந்தது என்கிற உண்மை நம்மைச் சுடுகிறது .
 
அறிவியல் மேதை நியூட்டன் உட்பட பல அறிவி யல் மேதைகளின் மறுபக்கம் இந்நூல் நெடுக நம்மி டம் சொல்லும் செய்திகள் பல . அறிவுத் தேடலும்  பல தவறான நம்பிக்கைகளும் சேர்ந்தே பயணித்திருக்கின்றன .தனிப்பட்ட பலவீனங்களை மீறி அறிவியல் உண்மை கள் வெளிச்சக் கீற்றுகளை பாய்ச்சியுள்ளன.
 
அணு, குவார்க் , புவிநகர்வு என இயற்பியல் கூறுகள் பலவற்றில் அறிவியல் வரலாற்றை  ஐன்ஸ்டீனில் தொடங்கிய அந்த புதிய சகாப்தத்தை மூன்றாம் பாகம் படம்பிடிக்கிறது. டால்டனின் அணுக் கொள்கை எவ்வாறு பிந்தைய கண்டுபிடிப்புகளால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது என்பது அறிவியல் கருத்து களும் ஒன்றையொன்று மோதி புதிய தடத்தில் முன் னேறுவதின் சாட்சியாகும்.
 
ஒரு நூற்றாண்டுக்கும் சற்றேகுறைந்தகாலம் வரை யிலும் புவியின் உள்ளே இருப்பது பற்றி, நன்கு விவரம் தெரிந்த வர்களுக்கும் கூட ஒரு நிலக் கரிச் சுரங்கப் பணியாளருக்குத் தெரிந்ததைவிட அதிகம் தெரிந்திருக்க வில்லை. என்று கூறுகிற நூலாசிரியர் எரிமலை உட் பட பல உட்கூறுகளை வியப்பூட்டும் விதத்தில் நமக்கு நான்காம் அத்தியாயம் நெடுக விளக்குகிறார். அறி வியல் வளர்ச்சி எல்லா துறை களிலும் ஏககாலத்தில் நடப் பதே. ஆனால் அளவீட்டில் கூடுதல் குறைவு இருக் கலாம். ஒவ்வொரு பாகமும் ஒருமையச் செய்தியைச் சொன்னாலும் பிற செய்திகளும் விரவியே இருக்கிறது.
 
புவியில்   130 கோடி கன கி. மீ தண்ணீர் உள்ளது. 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இதனை எட்டிவிட் டது. 1872 வரை கடல்கள் குறித்த முறையானமுதல் ஆய்வு உண்மையில் நிகழவில்லை . 240 விஞ்ஞானிகள் கொண்ட குழு 3 ஆண்டுகள் கடல் ஆய்வில் ஈடுபட்டது. எழு பதினாயிரம் கடல்மைல்கள் பயணம் செய்து; 4700 கடல் உயிரிகளைச் சேகரித்தனர். 19 ஆண்டுகள் உழைத்து 50 தொகுதிகளாக அறிக்கைகள் தொகுத்தனர். இந்தப் பணியில் ஈடுபட்டோரில் பலர் மன உலைச்சலுக்கு ஆளாகி நான் கில் ஒருவர் கடலில் குதித்தனர். இப் படி உயிர் கொடுத்து கண்டுபிடிக் கப்பட்ட அறிவியல் உண்மைகளின் வரலாறு ஐந்தாம் அத்தியாயத்தில் நம்மை சிலிர்க்க வைக்கிறது .
 
உங்களின் அப்பா, அம்மா அவர்களின் அப்பா அம்மா இப்படி முப்பது தலைமுறை பின்னால் பயணித் தால் உங்கள் உறவினர்கள் எண்ணிக்கை 1, 073,741,824 இவர்களின் வாழ்வை கூர்ந்து நோக்கினால் ஏதாவது ஒருவகையில் தகாத உறவாகவே இருக்கும் என அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப்போடுகிறார் நூலா சிரியர்.  நீங்கள் ஒரு பூங்காவில் இருக்கும் போது சுற்றி இருப்போரின் வரலாற்றைத் துருவினால் அனை வரும் உறவினரே. ஆசிரியரின் இக்கூற்றைச் சரியாக உள்வாங்கினால் சாதி மதச் சண்டை ஏன்? 
 
உங்கள் மெத்தையை உருப்பெருக்காடியால் உற்றுநோக்கின் 20 லட்சம் சிறுபூச்சிகளின் வீடாக இருப்பதைக் காணலாமாம். இப்படி அனைத்தையும் உற்றும் ஆழ்ந்தும் விரிந்தும் பார்த்து, இரா. நட ராசன் கூறுவ தைப்போல “அறிவியலின் வரலாறும் ;வரலாற்றின் அறிவியலும் தொடும்சிகரமாக” இந்நூலைப் படைத் திருக்கிறார்.
 
பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் நவீன தலை நிமிர்ந்த உடல் கொண்ட பிராணி ஆப்பிரிக் காவை விட்டு வெளியேறி பரவத் தொடங்கியது . 60000 ஆண்டுகளுக்கு முன்மனிதர்களிடையே மொழியே தோன்றியிருக்கவில்லை. நமது வரலாற்றை நாமறி வோமா?
 
 “திகைத்து நிற்கின்ற ஒரு குறுகிய காலத்தில் சிறந்த இந்நிலைமைக்கு வந்திருக்கிறோம் . நடத் தை யைக் கொண்டு நவீன மனிதர்களாகக் கருதப்படு வோர் , புவியின் வரலாற்றில் சுமார் 0.0001 சதவீதத் திற்கும் அதிக காலமாக இருக்கவில்லை “ என்கிறார் நூலாசிரியர். ஆனால் இந்த சொற்ப காலத்தில் அறிவி யல் பயணித்திருக்கும் தூரமும் காலமும் பரப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்நூல் அத னை நமக்குச் சொல்கிறது. பகுத்தறிவின் மீதான பற்று தலை நம்பிக்கையை பிரகடனம் செய்கிறது.
 
 மொழிபெயர்ப்பு குறித்து மொழிபெயர்ப்பாளர் நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். அது குறித்து தீர்ப்புச் சொல்ல நான் தேர்ந்த புலமையாளன் அல்லன். ஆனால் வாசகன் என்ற முறையில் மொழி பெயர்ப்பு எனக்குக் கடினமாகவேபடுகிறது . வழக்க மாக வேகமாக வாசிக்கும் பழக்கம் உடையவன் நான். என்னால் இந்நூலை அவ்வாறு வாசிக்க முடியவில்லை. பல இடங்களில் திருப்பிப் படிக்கும் தேவை ஏற்பட்டது. தமிழுக்கு வந்து சேர்ந்துள்ள இந்த அரியகொடையை அனைத்து வாசகர்களும் அட்டியின்றி பருக மொழியாக்கத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என் பது எனது தனிப்பட்ட கருத்து. எது எப்படி இருப் பினும் சமூகமாற்றத்திற்காக உழைக்க உறுதி பூண் டோர் அனைவரும் இந்நூலை ஒரு முறைக்கு இரு முறை - தேவைப்படின் இன்னொரு முறை என வாசித்து உள்வாங்கல் மிக அவசியம்.
 
அனத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு
மனித அறிவுத்தேடலின் முழுக்கதை
ஆசிரியர்: பில் பிரைசன்,
தமிழில் : ப்ரவாஹன்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018.
பக் : 640 , விலை : ரூ. 640.
 
 
 

காலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர்

மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பண்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடு தல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்: காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும். அனைத்து மாணவர்களும் சுழற்சி முறையில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடவேண்டும்.வாக்காளர் தினம் (ஜன 25), தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி (ஜன 30), கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் (மே5), குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி நாள் (ஜூன் 12), நல்லிணக்க நாள் (ஆக 8), பயங்கரவாத ஒழிப்பு நாள் (அக் 31), விழிப்புணர்வு வாரம் (நவ 11), தேசிய ஒருமைப்பாட்டு நாள் (நவ 19), வரதட்சணை ஒழிப்பு தினம் (நவ 26), எயிட்ஸ் விழிப்புணர்வு நாள் ( டிச 1) ஆகிய நாட்களில் மாணவர்களை உறுதிமொழி எடுத்து கொள்ள செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.