Saturday, 25 January 2014

Excel தப்பா கணக்கு போடுமா? பகுதி 2

   
நான் நினைத்தது போலவே போதுமான அளவு வரவேற்பு கிடைத்த பதிவாக "எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?" அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும் நான் குறிப்பிட்டிருந்த எக்சல் சிக்கலுக்கு காரணத்தை சொல்லி விட்டனர். பாலாஜி, பொன்சந்தர் இருவரும் ஆர்வம் காரணமாக அதை எப்படி சரி செய்வது என்பதையும் சொல்லிவிட்டனர். அனைவருக்கும் நன்றி. உஷா அன்பரசு சொன்னது போல Excel பற்றி தேடுபவர்களுக்கு இதுபோன்றவை பயனளிக்கக் கூடும். அப்படி முந்தைய பதிவுகள் அவ்வப்போது சிலரால் தேடிப் பயன் பெறுவதை  அறிய முடிந்தது .

  இது மிக எளிமையானது பலரும் அறிந்தது என்பதில் ஐயமில்லை. கூடுதலாக ஒரே ஒரு விஷயத்தை சொல்லவே  இந்தப் பதிவை எழுதினேன். அதற்கு முன்னர் விடை தவறாக வருவதற்கான காரணத்தை  பார்க்கலாம்

படம் 1

எக்சல் தவறு செய்யாது என்பது உண்மை.எக்சல் கணக்கீடுகள் செய்யும்போது  மறைந்துள்ள தசம இலக்கங்களையும் சேர்த்துக் கொள்கிறது.இது அதன் இயல்பு நிலையில் அமைந்துள்ளது. கணக்கிடுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் செல்களில் முழுமையக்கப் பட்டதை எடுத்துக் கொள்ளாமல் தசம இலக்கங்களையும் சேர்த்துக் கூட்டி பின் கூடுதலை முழுமையாக்குகிறது. 

மேலுள்ள உதாரணத்தில் DA மற்றும் Total காலத்தில் உள்ள செல்களின் தசம இலக்கங்கள் என்ன என்று பார்ப்போம்.செல்லில் எத்தனை தசம இலக்கங்கள் தெரிய வேண்டும் என நாம் முடிவு செய்துகொள்ளலாம்.

படம் 2

சிவப்பு வட்டமிடப்பட்ட பட்டனைக் கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட செல்களில் உள்ள எண்களின் தசம இலக்கங்களின் எண்ணிக்கையை கூட்டவோ குறைத்துக் கொள்ளவோ செய்யலாம்.இடப்புறம் உள்ளது தசம இலக்கங்களை அதிகமாக்கும். வலப்புறம் உள்ளவை குறைத்துக் காட்டும். அந்த செல்களில் உள்ள எண் பார்முலா மூலம் கணக்கிடப் பட்டிருந்தால் கணக்கீடுகளில் அடிபடையில் தசம இலக்கங்கள் அமையும். மேலுள்ள எடுத்துக்காட்டில் இரண்டு தசம் இடங்கள் திருத்தமாக DA மற்றும் Total காலங்கள் அமைந்துள்ளது.  படம் 1 இல் தசம இலக்கங்கள் காட்டப் படாமல் மறைக்கப்பட்டிருந்தாலும் அவற்றையும் சேர்த்துக் கூடுதல் கணக்கிட்டுள்ளது EXCEL. 14232.40 ஐ முழுமையாக்கும்போது 0.40 விடப்பட்டு கணித வழக்கப் படி 14232 ஆக மாற்றப் படுகிறது.அதே போல கீழ் செல்லில் .10 ஐ விடுத்து 20666 ஆக முழுமைப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டும் கூட்டப்டும் D4 செல்லில் முந்தைய செல்களின் தசம இலக்கங்களான .40 மற்றும் .10 கூட்டப்பட்டு .50 ஆக எடுத்துக் கொள்ளபடுகிறது. .50 அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால் அது 1 ஆக எடுத்துக் கொண்டு ஒன்றுத்தான இலக்கத்துடன் சேர்க்கப் பட்டுவிடுகிறது.  இதனால் 34898.50 என்பது 34899 ஆக கணக்கிடப்படுகிறது. 

இதை எப்படி சரி செய்வது. பின்னூட்டத்தில் சொன்னது போல round function ஐ பயன்படுத்துவது ஒருமுறை. பெரும்பாலும் நடைமுறைக் கணக்குகளில் சதவீதம் கணக்கிடப்படும்போதும்வகுத்தல் கணக்கீடுகளின்போதும் தசம பின்னம்தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அவ்வாறு செய்யும்போது  முழு எண்களாக்க increase decimal, decrease decimal பட்டனை பயன்படுத்தாமல் round function உபயோகப் படுத்தலாம். C2 செல்லில் உள்ள எண்ணுக்கு  DA கணக்கிட D2 செல்லில்  =ROUND(C2*91%,0) , என்ற forumula வை உள்ளீடு செய்யவேண்டும். இப்போதும் 14232 தான் காட்சி அளிக்கும் ஆனால் தசம இலக்கங்கள் மறைந்து இருக்காது. அதை drag செய்து அடுத்துள்ளதையும் சதவீதம் கண்டு ரவுண்டு செய்து விடும்.

இன்னொரு  முறை :

Round function ஐ பயன்படுத்தாமல் செய்ய ஏதேனும் வழி உள்ளதா என்று ஆராய்ந்ததில் உண்டு என்று சொன்னது எச்சல் . அது என்ன? set precision as displayed என்று ஒரு Option உள்ளது. மறைந்துள்ள தசம எண்களை கணக்கில் கொள்ளாமல் சாதரணமாக  செல்லில் கண்களுக்கு தெரியும்  எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கீடு செய்யும் . இதனால் நாம் கண்ட இந்தப் பிழை ஏற்படாது.

இந்தப் படத்தில் பாருங்கள் முதல் படத்தில் உள்ள அதே தரவுகளைத்தான் பயன்படுத்தி இருக்கிறேன். round Function ஐ பயன்படுத்தவில்லை ஆனால் விடை சரியாக வருவதை காணலாம்

 இது எப்படி? எக்சல்லின் இடது ஓரத்தில் ஆபீஸ் பட்டனை கிளிக் செய்யவும்.கீழ்கண்ட வாறு கிடைக்கும் மெனுவில் Options ஐ கிளிக்கவும்.

பின்னர் கிடைக்கும் டயலாக் பாக்சில் Advanced ஐ தேர்ந்தெடுத்து பிறகு வலது புறத்தில் set precision as displayed என்பதற்கு முன் உள்ள செக் பாக்சை டிக் செய்யவும். தன்னியல்பாக இவை டிக் செய்யப்பட்டிருக்காது

தேவை இல்லை என நினைத்தால் டிக் மார்க்கை  நீக்கி விடலாம். பழைய நிலைக்கு வந்து விடும். 

இதில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை இன்னொரு நேரத்தில் சொல்கிறேன்.

எக்சல் எனும் பிரம்மாண்டத்தில் அதிகம் பயன்படுத்தப் படாத பயனுள்ள வசதிகள் இருப்பதை நினைத்து  ஆச்சரியம் ஏற்படுகிறது. எக்சல் பயன்பாட்டில் நான் Expert அல்ல. ஆனால் நான் என் அனுபவத்தின் மூலம் பெற்ற பயனை, எளிமையாக இருந்தாலும் தெரியாத யாருக்கேனும் பயன்படும் என்ற நோக்கத்திலும்  நான் எழுதியதில் தவறுகள் இருப்பின் அறிந்தவர்கள் சுட்டிக் காட்டும்போது அதையும் திருத்திக் கொள்ள முடியம் என்பதாலும் எழுதப் பட்டதே இந்தப் பதிவு.

நான் பாசாயிட்டனா?

குறிப்பு: மேற்கண்டவை அனைத்தும் EXCEL 2007 ஐ அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது 

எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?


கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புகள்.
கணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும்  அலுவலகப் பயன்பாடான Microsoft Office Excel, Word பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை வருவதுண்டு.
எக்சல்லை புதிதாக பயன்படுத்துவோருக்கு இந்தப் பதிவு உதவக் கூடும். வழக்கமாக என் வலைப பக்கம் வருபவர்களுக்கு இவை பற்றி தெரியும் என்பதால் அவர்களிடமிருந்து வரவேற்பு இருக்காது என்றாலும்  இது போன்ற பதிவுகளை புதியவர்கள் பலர் படிப்பதை அறிய முடிகிறது. 
நான் முறையாக இவற்றை கற்கவில்லை எனினும் பயன்படுத்தும்போது அறிந்தவற்றை என்னைப்போல் உள்ளவர்களுக்கு உபயோகப்படும் என்ற நோக்கத்தில் கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். இது சம்பந்தமான மாதிரிக் கோப்புகளையும் டவுன் லோட் செய்யும் வகையில் உருவாக்கி இணைத்திருக்கிறேன். இவற்றை 2000 க்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளதோடு  தினந்தோறும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவை தந்த  தைரியத்தின் அடிப்படையில்தான் இந்தப் பதிவையும் பகிர்கிறேன். அறிந்தவர்கள் பொறுத்தருள்க.  
 
பள்ளிகள் அலுவலகங்களில் பல்வேறு கணக்கீடுகளுக்கு எக்சல்தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. முன்பெல்லாம் கால்குலேட்டரில் மாங்கு மாங்கென்று கஷ்டப்பட்டு போட்ட கணக்கீடுகளை எக்சல் எளிதில் செய்து விடுகிறது. அலுவலகங்களில் வோர்டில் எளிதாக வேலை செய்வார்கள். ஆனால் எக்சல் என்றதும் தயக்கம் காட்டுவார்கள். அதில் உள்ள கட்டங்கள் அவர்களை பயமுறுத்தி விடும்.  எக்சல் மூலம் எளிதில் செய்யவேண்டிய வற்றை வோர்டில் டேபிள் போட்டு டைப் அடித்துக் கொண்டிருப்பார்கள். பல DTP சென்டர்களிலும் எக்சலில் பிரிண்ட் எடுப்பதற்கும் திருத்தம் செய்வதற்கும் அதிக பணம் வாங்குவார்கள்.

எனக்குத் தெரிந்தடைப்பிஸ்ட் ஒருவர் வோர்டில் விரைவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யும் திறன் படைத்தவர்.ஆனால் எக்சல் என்றால் ஒதுங்கி விடுவார். தலைமை அலுவலகத்திலிருந்து தகவல்கள் கேட்கும்போது பல சமயங்களில் எக்சல் படிவத்தில்தான் அனுப்ப வேண்டும் என்று கேட்பார்கள். அப்போது மட்டுமே வேண்டா வெறுப்பாக எக்சல் பயன்படுத்துவார் .
அப்படி  ஒருமுறை வேலை செய்ய நேரும்போது கணக்கீடுகளை அதிலேயே பார்முலா மூலம் செய்யாமல் கால்குலேட்டர் மூலம் செய்து அதை எடுத்து உள்ளீடு செய்து கொண்டிருந்தார். ஈசியாக செய்வதை விட்டுவிட்டு ஏன் இப்படி கஷ்டப்பட்டு செய்கிறீர்கள்? எக்சல் உருவாக்கப் பட்டதன் நோக்கமே வீணாகிறதே என்றேன். எக்சல்ல சில சமயம் தப்பாகி விடுகிறது என்பார். 
அந்த மாதிரி ஆக வாய்ப்பில்லையே என்றேன்.
நான் காண்பிக்கிறேன் பாருங்க என்றார். அவர் காண்பித்தது கீழே.


DAகாலத்தின் கூடுதலும் (=sum(D2:D3 பயன்படுத்தப் பட்டுள்ளது) Total காலத்தின் கூடுதலும் (=sum(E2:E3) பயன்படுத்தப் பட்டுள்ளது) தவறாக உள்ளதே பாருங்கள் என்றார். இதை Formula பயன் படுத்தி போடப்பட்டதுதானே ஏன் தவறாக உள்ளது என்றார். அதனால் நான் இதை நம்புவதில்லை. சாதரணமாக டோட்டல் போட்டால் சரியாக வந்துவிடுகிறது ஆனால் சதவீதம் போன்றவற்றை பயன்படுத்திய பின் கூடுதல் செய்யும்போது சில சமயங்களில் சரியாகவும் சில சமயங்களில் தவறாகவும் வருகிறதே என்றார் . 



    DA கணக்கிட PAY இல இருந்து 91% சதவீத அறிய  அதனோடு =C2*91% என்ற பார்முலா பயன்படுத்தப் பட்டுள்ளது . இரண்டாவது நபருக்கான DA வும் அவ்வாறே கணக்கிடப் பட்டுள்ளது. 
DA கண்டறிய FORMULA பயன் படுத்தாமல் தனியாக கணக்கிட்டு 14232, மற்றும் 20666 ஐ உள்ளீடு செய்தால் விடை சரியாக வருவதை காணலாம். 
இது ஏன்? எக்ஸல் ஏன் தவறாக கணக்கிடுகிறது. உண்மையில் அது தவறுதானா? சரியாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அறிந்தால் சொல்லலாம்.  
ஒரு வேளை,  தெரியாதவர்கள் இருப்பின்  சனிக்கிழமை  வரை காத்திருக்கவும். 
அடுத்த பகுதி படிக்க
Excel தப்பா கணக்கு போடுமா? பகுதி 2

Thursday, 26 December 2013

7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்தியஅரசு ஜரூர்!


            மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. 
 

Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த!!!

         இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

Skype மென்பொருளின் புது வசதிகள்:

1. HD Video Calling – உங்களிடம் நல்ல வெப்கேமிரா, இணைய இணைப்பு இருப்பின் துல்லியமான வீடியோ காலிங் வசதியை அனுபவிக்கலாம்.

2. Facebook Integration – இந்த மென்பொருளில் Facebook இனை இணைத்ததன் மூலம் எண்ணற்ற பேஸ்புக் பயனர்களிடம் ஸ்கைப் இல்லாமலே அவர்களுக்குள் இலவசமாக வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் உங்கள் Facebook கணக்கில் சென்று உங்கள் நண்பர்களூடன் பேசலாம். பேஸ்புக்கில் இங்கிருந்தே உங்கள் Status ஐ அப்டேட் செய்யலாம். உங்கள் நண்பர்களின் தகவல்/செய்திகளை இங்கிருந்தே பார்த்துக் கொள்ளலாம்

3. Group Screen Sharing – ஒரே நேரத்தில் பலர் குழுவாக Conference Callசெய்யும் போது உங்கள் டெஸ்க்டாப்பையோ அல்லது ஒரு மென்பொருளையோ நண்பர்களும் பார்க்கும் படி செய்யலாம். இந்த வசதி பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

4. Custom Chat and Sms – இந்த மென்பொருளிலேயே சாதாரண Chatting வசதியும் இருக்கிறது. மேலும் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளையும் அனுப்பிக் கொள்ளலாம்.

5. Skype to Skype பேசுவதற்கு இலவசமாகவும் மற்ற தொலைபேசிகளுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

தரவிறக்கச்சுட்டி: http://www.skype.com/intl/en-us/get-skype/
(இங்கேயே லினக்ஸ், ஆண்ட்ராய்டு, ஐபோன் பதிப்புகளும் இருக்கிறது)

Skype மென்பொருளினை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்த

ஸ்கைப் மென்பொருளை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்திக் கொள்ள Language Translation Pack ஒன்றினை தமிழர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். கீழிருக்கும் சுட்டியில் சென்று அதனைத் தரவிறக்கவும்.

பின்னர் ஸ்கைப் மென்பொருளில் சென்று Tools -> Change Language என்ற மெனுவில் செல்லவும். அதில் கடைசியாக இருக்கும் Load Language Fileஎன்பதைக் கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கிய மொழிக்கோப்பினை தேர்வு செய்தால் போதும். உடனடியாக ஸ்கைப் மென்பொருள் முழுவதும் தமிழில் மாறிவிடும்.

தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் சரிபார்ப்பு

      தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. 
 
 
         இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு ஏற்கெனவே ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (மேல்நிலை) ராஜராஜேஸ்வரி அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


          அனைத்துப் பள்ளிகளும் வருகிற ஜன.1ம் தேதி முதல் 3ம் தேதி மாலைக்குள் ஆன்லைனில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பக்கங்களை ஜன.4ம் தேதிக்குள் அனைத்துப் பள்ளி களும் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும். திருத்தங்கள் எதுவும் இல்லையெனில் ‘சரி பார்ப்பு பெயர் பட்டியல் கவனத்துடன் சரி பார்க்கப்பட்டது, திருத்தங்கள் ஏதும் இல்லை‘ என பள்ளித் தலைமை ஆசிரியர் சான்றளித்து முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பக்கங்களை ஜன.7ம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பின்னர் பெயர், பிறந்த தேதி, பள்ளி போன்றவற்றில் சில சமயங்களில் அச்சுப் பிழைகள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையால் மதிப்பெண் சான்றுகளுடன் மாணவர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு ஓட வேண்டியுள்ளது. இதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் கால விரயமும் ஏற்படுகிறது. இதை தவிர்த்து எந்தப் பிழையும் இன்றி மதிப்பெண் பட்டியல் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வுக்கு "ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு

தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
        பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, டிச.,10 க்குள் ஆன்லைனில் பதிய, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், சில பள்ளிகள் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாத பள்ளிகள், சரிபார்ப்பு பெயர் பட்டியல் (நாமினல் ரோல்) பெறாத பள்ளிகள், தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, நாளைக்குள் சென்னை அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.


           மேலும், "ஆன்லைன்'ல் பதிவு செய்த பள்ளிகள், சரிபார்ப்பு பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், "இன்சியல்", மதம், இனம் ஆகியவற்றை சரிபார்த்து, 2014 ஜன.,4 ல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் "ஆன்லைன்' மூலம்,ஜன.,1 முதல் 3 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் பட்டியலில் உள்ள திருத்தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும்,தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Key Answer

Half yearly Exam Key Answer for 6 - 11th Standard

New TET Study Materials



Thanks to Sree Vaishnavi Computers, Arni, T.V.Malai Dt.

9ம் ஆண்டு சுனாமி பேரழிவு நினைவு நாள்

9ம் ஆண்டு சுனாமி பேரழிவு நினைவு நாள்

2004ம் ஆண்டு இதே நாள், டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவில் வந்த பூகம்பம் அதைத்தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளை பிணக்காடாக்கிய சுனாமி பேரழிவு நடந்தேறியது, தமிழகமும் கடும் உயிரிழப்புகளை சந்தித்தது.

கடல்கோள் என்று சங்க இலக்கியங்களில் நினைவு கூறப்படும் இந்த பேரழிவுகளினால் பல நகரங்களை கடலுக்கு காவு கொடுத்து இழந்துள்ளது தமிழ் தேசம்.

# சுனாமி பேரழிவுகளில் இறந்து போன அனைத்து உயிர்களுக்கும் நினைவு கூர்ந்துaeeo s அஞ்சலி செலுத்துகிறோம்.

இய்க்குநர் எம்.சிவக்குமாரின் சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு நூல் வெளியீட்டு விழா

STUDENTS COMPETION


சேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக வாசிப்பு முகாம்-டிசம்பர், 28,29

சேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக வாசிப்பு முகாம்-டிசம்பர், 28,29




தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கும் முகாமாக நடத்தபடுகிறது. இதுவரை 8 முறை புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றுள்ளது. தற்போது ஒன்பதாவது முறையாக சேலத்தில் நடைபெறுகிறது. எனவே தங்களுக்கு தொடர்புடைய ஆசிரியர்களை இப்புத்தக வாசிப்பு முகாமில் பங்கு பெறச் செய்யும்படி கேட்டு கொள்கிறோம். இரண்டு நாள் முகாமில் ஒவ்வொரு அமர்விலும் கல்வியின் அரசியல், சமகாலக் கல்விக்கூட பிரச்சினைகள், வகுப்பறை ஜனநாயகம் என பல்வேறு தலைப்புகளில் கருத்தாளர்கள் கலந்துரையாடுகின்றனர்.

பங்கேற்கும் கல்வியாளர்கள்: பேராசிரியர் ச.மாடசாமி, பேரா.கே.ராஜீ, ஆயிஷா நடராஜன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேரா.விஜயகுமார், பேரா.என்.மணி


புத்தகம்:திருமிகு இரா நடராஜன் அவர்களின்  “இது யாருடைய வகுப்பறை”

பதிவுக்கு:
1. திருமிகு நீலா, புத்தக வாசிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் – 97866 26273
2. திருமிகு பாலசரவணன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் – 94861 61283

நிகழ்ச்சி நடைபெறும் நாள்:
2013 டிசம்பர் 28ந் தேதி காலை 9.00 மணி முதல் 29ந் தேதி மாலை 05.00 மணி வரை.

நிகழ்ச்சி நடைபெறும்  இடம்:
சமுதாய கூடம், சேலம் உருக்காலை, கணபதி பாளையம். கேட் எண்.1
Admin Hall. Salem Steel Plant, Ganapathypalayam.

போக்குவரத்து:
1. சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ஜங்சன் இரண்டு இடங்களிலிருந்தும் தாரமங்கலம் செல்லும் அனைத்து டவுன் பஸ் மற்றும் ரூட் பஸ்ஸும் செல்லும்.
2. பஸ் நிறுத்தம் – சேலம் ஸ்டீல் பிளான்ட், முதல் கேட்.

தொடர்புக்கு:
1. திருமிகு ராமமூர்த்தி – 94864 86755,
2. திருமிகு பாலசரவணன் - 94861 61283, 89031 61283
3. திருமிகு K.P. சுரேஷ்குமார் – 94433 91777
4. திருமிகு மீனாட்சி சுந்திரம் – 75986 70004.

Wednesday, 25 December 2013

HAPPY CHRISTMAS.....


RTE

RIGHT TO EDUCATION (RTE)
சார்ந்த தெளிவுரைகள்.

.    இலவச மற்றும் கட்டாய  கல்வி உரிமைச்சட்டம், 2009. (FREE AND  
       COMPULSARY EDUCATION ACT, 2009) மத்திய அரசு வெளியீடு.
                              Click Here to Download    

.    RTE Model Rules Under Right to Education Act 2009.
                              Click Here to Download4.    Right to Education Act, Tamil Version. ( தமிழகத்தில் இச்சட்ட வரைவு 
       விதிகள் நிறைவு செய்வதற்கு முன்னர் கருத்து கேட்புக்காக 
       வெளியிடப்பட்ட தொகுப்பு)
                              Click Here to Download      

.    Right to Education 2009, Clarification on Provisions.
                              Click Here to Download

.   Guidelines regarding deployment of teachers for Elections.
                              Click Here to Download
.   Central Government authorises NCTE as Academic authority.
                             Click Here to Download 


எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்

 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "இ-வித்யா" திட்டம் மாநிலத்தில்முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் உள்ளபிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்.,மூலம் தகவல் தெரிவிக்கும்
திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்கள் "ஆப்சென்ட்" ஆனாலோ, தாமதமாகவந்தாலோ, பெற்றோர்களின் மொபைல் போனுக்குபள்ளியில் இருந்து தகவல்பறக்கும்.மேலும், ரேங்க் கார்டு வழங்குவது, பெற்றோர் சந்திப்பு கூட்டம், விடுமுறைபோன்ற விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.சிலபள்ளிகளில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள், தினசரி தேர்வில்எடுத்த மார்க் போன்ற தகவல்களும் எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்குதெரிவிக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் "கட்"அடித்தால் உடனடியாக தகவல் தெரிந்து கண்டிக்க முடியும் என்பதால், இத்திட்டம்,பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.எஸ்.எம்.எஸ்., மூலம்தகவல் தெரிவிக்கும் திட்டத்தை அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, "இ-வித்யா" என்றபெயரில் இந்த திட்டம்முதன் முறையாக ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படஉள்ளது.முதற்கட்டமாக ஏனாம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசுஆங்கில உயர்நிலைப்பள்ளி, கிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசுஉயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், "இ-வித்யா" செயல்பாட்டுக்குவருகிறது.மத்திய அரசு திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித்திட்டம்) உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள, "இ-வித்யா" திட்டப் பணிகளில்ஏனாமில் உள்ள தேசிய தகவல் மைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இருபள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல்போன் உள்ளிட்ட விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முழு வீச்சில்நடந்து வருகிறது. இரு பள்ளிகளை தொடர்ந்து ஏனாமில் உள்ள மற்ற பள்ளிகளில்இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதைதொடர்ந்து, மாநிலம்முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், "இ-வித்யா" திட்டத்தை அமல்படுத்த புதுச்சேரிஅரசு திட்டமிட்டுள்ளது