Tuesday 17 September 2013

கேள்வி பதில்

கேள்வி பதில் 
prabath periyasamy
 <pprabath84@gmail.com>
Sep 15 (2 days ago)
to me
 1.    சார் வணக்கம்!
         எனது தலைமை ஆசிரியை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து
பி.லிட் பட்டப் படிப்பின் மூலமாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி
உயர்வு பெற்று வந்தவர்.
        அதன் பிறகு பி.எட். பட்டப்படிப்பையும் முடித்து ஊக்க ஊதியம்
பெற்ற நிலையில் தற்போது அதைத் திருப்பிக் கட்ட சொல்கிறார்கள்.
        ஏனென்றால் பி.லிட் முடித்து பதவி உயர்வு பெற்றவருக்கு
பி.எட்.க்கு ஊக்க ஊதியம் இல்லையாம்.
        தயவு கூர்ந்து இந் நிலையைத் தெளிவாக்க வேண்டுகிறேன்.(மொத்தத்தில்
அவர் இரண்டு ஊக்க ஊதியத்தைத் தாண்டவில்லை).
        இருக்கும் பட்சத்தில் அரசாணை எண்ணையும் குறிப்பிட வெண்டுகிறேன்.
பதில் 

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்வித் தகுதி பி.எட்  ஆகும். ஆனால் தமிழ் படிதததால் சிறப்பு முன்னுரிமை காரணமாக பி.எட் படித்ததாக கருத்தில் கொண்டு ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப் படுவதால் அதற்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப் படுவதில்லை.




2) 
RANGANATHAN.K RAJESWARI <kr.nathan49@gmail.com>
4:05 PM (22 hours ago)
to me
ஐயா, வணக்கம்.
                எனக்கு ஒரு சந்தேகம்.தெளிவுபடுத்துவீர்களா?


 1.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இடலாமா?
 2.பச்சை நிற மையை பயன்படுத்தலாமா? 
                                      
                                            கே.ரங்கநாதன் த.ஆ
                                               திருப்பூர். 

பதில் 

1. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இட விதிகளில் அனுமதி இல்லை 


2, பச்சை நிற மை பயன்படுத்தக் கூடாது


*******************************************************************************************






2 comments:

  1. கேள்வி பதில் - செய்திகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    மிக்க நன்றி

    M.RAJENDRAN, DINDIGUL

    http://kalvinilayam.blogspot.in/

    ReplyDelete
  2. Rs. 4400 மற்றும் அதற்கு மேலும் தர ஊதியம் பெறும் அனைவரும் ( Group B ) சான்றொப்பம் செய்யலாம். G.O Ms. No. 189 of P&AR dept. dated 18-07-2007

    R. Selvam
    75984 69360

    ReplyDelete