Tuesday, 7 May 2013

TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2013-2014 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் 2013-2014 |

  1. PG TO HR SEC HM | FORM IN WORD FORMAT
  2. PG, HIGH SCHOOL HM TO HR SEC HM | தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி – 01.01.2013 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்தல்
  3. BT TO PG | FORM IN WORD FORMAT
  4. BT TO PGT | தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி-2013-2014ம் கல்வியாண்டில் அரசுமற்றும்நகராட்சிமேல்நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் நியமனம் 1.1.2013 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்கத் தகுதிவாய்ந்த பள்ளி உதவியாசிரியர்களின் தேர்ந்தநபர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல்
  5. SGT TO BT | NEW INSTRUCTIONS
  6. SGT TO BT | தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி – 01-01-2013 அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் (தமிழாசிரியர் உட்பட) மற்றும் சிறுபான்மை பாட / மொழி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பட்டியல் தயாரித்து அனுப்பக் கோருதல்
  7. PG TO BRC SUPERVISOR | தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி - வட்டார வள மைய மேற்பார்வையாளர் - காலிப்பணியிடம் - முதுகலையாசிரியர்கள் மாறுதல் மூலம் நிரப்பிடுதல் - விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் - பரிந்துரையுடன் அனுப்பிடக் கோருதல்
  8. BT,PG TO HIGH SCHOOL HM | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – முன்னுரிமைப் பட்டியல் 01.01.2013 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் – விவரங்கள் கோருதல்
  9. BT,PG TO MUNICIPAL HIGH SCHOOL HM | தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி- நகராட்சி/நகரிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி - பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2013 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்

ஓய்வூதியத் துறையில் விரைவில் எஃப்.டி.ஐ. வரம்பு அதிகரிப்பு

காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) வரம்பு விரைவில் அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மசோதா 2008-ம் ஆண்டிலிருந்து மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் அவர் இத்தகவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான போக்குவரத்து, சில்லறை வர்த்தகம் மற்றும் பன்முக இலச்சினை கொண்ட தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அனுமதிப்பதில் உள்ள வரம்பு மேலும் தளர்த்தப்படும். இதேபோல காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறைகளில் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்படும் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் காப்பீட்டுத் துறையில் அன்னிய நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது. சாலை மற்றும் நிலக்கரி துறைகளில் சுயச் சார்புள்ள கட்டுப்பாட்டு ஆணையம் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார் சிதம்பரம்.

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 01.01.2013 முதல் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

IGNOU - APPLICATION FORM AND GUIDE FOR APPLICANT'S FOR BACHELOR OF EDUCATION (B.Ed.,) JANUARY 2014

TO DOWNLOAD IGNOU - PROSPECTUS CLICK HERE...

APPLICATION COST : RS.1000/- AND RS.1050/- BY POST

COURSE FEES : RS.20000/-

LAST DATE TO SUBMIT FILLED-IN APPLICATION : 15.07.2013

DATE OF ENTRANCE TEST : 18.08.2013

Monday, 6 May 2013

எளிதாக ரத்ததானம் கொடுக்க/ பெற! ! ! !

எளிதாக ரத்ததானம் கொடுக்க/ பெற! ! ! !

இரத்த தானம் என்பது இப்போது அடிக்கடி அவசியமாகிற ஒன்று. இணையத்தில் நிறைய ரத்த தானம் குறித்த தளங்கள் இருப்பினும். நிறைய நண்பர்கள் பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் ரத்தம்தேவை என்று கேட்பார்கள். ஆனால் அதன் மூலம் மட்டும் நமக்குஉதவி கிடைப்பது இல்லை. இணையத்தில் எப்படி எளிதாக இதை செய்வது என்று பார்ப்போம். அத்தோடு வலைப்பதிவர்கள் எப்படி இது குறித்த Gadget- ஐ தங்கள் தளங்களில் வைப்பது என்றும் பார்ப்போம்.

இங்கே உள்ள தளங்கள் எல்லாவற்றிலும் ரத்த தர விரும்புவோர் Register செய்து கொள்ளலாம்.

Blood Helpers ( http:// bloodhelpers.com / )

இந்த தளம் நகர வாரியாக ரத்தம் பெறுவோர் கொடுப்போர் தகவல்களை கொண்டிருக்கும். உங்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் குறிப்பிட்ட பிரிவை தெரிவு செய்து உங்கள் நகரத்தில் இருக்கும் நண்பர்களை தேடலாம். பின்னர் அவர்களின் போன் நம்பர் மூலம் அவர்களை தொடர்பு கொள்ள இயலும்.

இதை வலைப்பூவில் Gadget ஆகவும் வைக்க முடியும். Get BloodHelpers Search / Blood Request Widget ( http:// bloodhelpers.com /widgets )
Indianblooddono rs ( http:// www.indianbloodd onors.com/ )
கிட்டத்தட்ட இருபதாயிரம் நண்பர்களுடன் இயங்கும் இந்த தளம் மிக எளிதான வழிகளை கொண்டுள்ளது. உங்களுக்கு ரத்தம்தேவை என்றால் இவர்களை தொலைபேசி மூலமோ அல்லது, SMS அனுப்பியோ தொடர்பு கொள்ள முடியும். அதற்கு உங்கள் ஏரியாவின் Pin Code மற்றும் STD Code தெறித்து இருக்க வேண்டும். அவ்வளவே.

Friends2Support ( http:// www.friends2supp ort.org/ index.aspx )
முதல் தளத்தை போலவே மிக எளிதாக் தளத்தின் முகப்பிலேயே நீங்கள் ரத்த தானம் தருவோரை தேட முடியும். ரத்தம் தேவை என்றால் போஸ்ட் செய்யவும் இயலும்.

BloodDonors ( http:// www.blooddonors. in/ )
தளத்தின் முகப்பிலேயே யாருக்கு,எங்கே ரத்தம் தேவை. என்னகாரணம் போன்றவற்றை சொல்லி விடுகிறார்கள். இதே போல ரத்தம் தேவைப் படுவோர் போஸ்ட் செய்யலாம். உடனடி தேவை என்றால் ரத்தம் தருபவர்களை தொடர்பு கொள்ளவும் முடியும்.

மற்ற சில தளங்கள்:

# Indian Blood Donors ( http:// www.indianbloodd onors.in/ default.aspx )

# Bharat Blood Bank ( http:// www.bharatbloodb ank.com/ )

# Blood Donors India ( http:// www.blooddonorsi ndia.org/ )

# Blood Bank India ( http:// www.bloodbankind ia.net/ )

# Indian Blood Bank-Under the management of IBBS ( http:// indianbloodbank. com/ )

# Blood Donors Club ( http:// blooddonorsclub. in/ )

# Share Blood ( http:// www.shareblood.i n/eye.php )

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) வினாத்தாள் மையங்களில் காலை 9 மணிக்கு பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்பதால் தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

# பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது.

# கடந்த ஆண்டுகளில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவர்களின் பிளஸ் 2 அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பெற்றுச் சென்றனர்.

# இந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

# அதன்படி, மாவட்டங்களில் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் பள்ளிகளின் தலைமையாசியர்கள், முதல்வர்களிடம் இருந்து பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரித்து கணினியில் பதிவு செய்து அரசு தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டது.

# மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும் நேரத்திற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

# உரிய நேரம் வரை பட்டியலை பிரிக்க கூடாது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்ட மையங்களின் (குறிப்பிட்ட பள்ளிகள்) பொறுப்பாளர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் அனுப்பி வைக்கப்படும்.

# அந்தந்த பள்ளிகளின் பெயரில் சீலிடப்பட்ட கவர்களில் மதிப்பெண்கள் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். வினாத்தாள் மையங்களில் இருந்து மதிப்பெண்கள் பட்டியலை தலைமையாசிரியர்கள் காலை 9 மணிக்கு முன்பாக வந்து பெற்றுச் செல்ல வேண்டும். இதனால் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் அனைவரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

# தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிகளில் மே 9ம் தேதி காலை 10 மணிக்கு மதிப்பெண் பட்டியலை ஒட்ட வேண்டும்.

# இந்த மதிப்பெண் பட்டியலை, இணையதளங்களில் வெளியாகும் மதிப்பெண் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்வதற்காக, அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைப்பு வசதி ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

# அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் பிராட்பேண்ட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளுக்கான கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் இருந்தால், பள்ளி வசதி கட்டணத்தில் செலுத்தி பிராட்பேண்ட் இணைப்பை உபயோகத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

DAILY REPORT---COST FREE SUPPLY OF UNIFORM RECEIVED PARTICULARS FOR THE YEAR 2013-2014 (1nd SET)


DIRECTORATE OF ELEMENTARY EDUCATION 
COST FREE SUPPLY OF UNIFORM RECEIVED PARTICULARS  FOR THE YEAR 2013-2014  (1nd SET)

DISTRICT : 








S.NO.  BLOCK BOYS INDENT   (1  TO 8)  GIRLS INDENT   ( 1 TO  8 ) BOYS (SETWISE) Received  GIRLS (SETWISE) Received  TOTAL RECEIVED 
Half Pant/Shirt (1 to 5)  Full Pant/ Shirt      (6 to 8) TOTAL                     (1 TO 8) Skirt /Blouse       ( 1 to 5) 
TOTAL                    (1 TO 8)   GRAND TOTAL                   (7 + 10)
Salwar Tops/Pant/        Dupatta                (6 to 8) 
1 2 3 4 5 6 7 8 9 10 11
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
TOTAL                    









PERCENTAGE :






























DISTRICT ELEMENTARY EDUCATION 


Sunday, 5 May 2013

ஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை


ஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை

CPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து

CPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து

மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!

மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!

நமது சமூகத்தை ஒரு மோகம் ஆட்டிப் படைக்கிறது. அது, இன்ஜினியரிங் தொழில்நுட்ப மோகம். இன்றைய காலத்தில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம், தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மூளையுடனேயே பிறக்கின்றன என்பது பெற்றோர் உள்ளிட்ட பலரின் நினைப்பு.
இன்றைய மாணவர்களிடம், நீங்கள் மேற்படிப்பில் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால், பெரும்பாலானோர், பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளையே கூறுவார்கள். அதற்கடுத்து, ஆங்கில மருத்துவம் சார்ந்த படிப்புகளைக் கூறுவார்கள். ஆனாலும், மருத்துவம் சார் படிப்புகளைவிட, பொறியியல் படிப்பு என்பது, பல காரணங்களுக்காக, பலரையும் கவரும் ஒன்றாக இருக்கிறது.

எதிர்பார்ப்புகள்

படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைக்க வேண்டும், சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்க வேண்டும் மற்றும் சுகமான வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள், இந்தியாவைப் பொறுத்தவரை வழக்கமானவையே. பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகள்தான் இத்தகைய ஒரு வாழ்க்கை நிலையை அமைத்துத் தரும் மற்றும் இதர கலை, அறிவியல் படிப்புகளால் பெரிதாக பயன் ஒன்றும் கிடையாது என்ற ஒரு பொது மனோநிலை, பள்ளி மாணவர்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதனால், பலிகடா ஆக்கப்படுவது மாணவர்கள்தான். மனித மூளையானது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சில மூளைகள், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியதாக இருக்கலாம். சில மூளைகள் கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் சமூக நெருக்கடிகளுக்காகவும், போலியான மாயைகளுக்காகவும் பல மூளைத்திறன்கள், நமது இன்றைய சமூகத்தில் வீணடிக்கப்படுகின்றன என்பதே உண்மை.

பொருளாதார தாராளமய சுரண்டலால், மனித சமூகத்தின் பல கலை மற்றும் பண்பாட்டு அமைப்புகள், இந்தியாவைப் பொறுத்தவரை அமுக்கப்பட்டு மற்றும் அழிக்கப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் மட்டுமே, சமூக வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் உகந்தவை என்ற கருத்தாக்கத்தால், பல எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

பன்முகப் படிப்புகள்

இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு சார்ந்த படிப்புகள், வரலாற்றுப் படிப்புகள், இயற்பியல், கணிதம் போன்ற அடிப்படை அறிவியல் படிப்புகள், பொருளாதாரம், வணிகம் மற்றும் நிதி சார்ந்த படிப்புகள், அலங்காரம் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்ந்த படிப்புகள், மீடியா மற்றும் திரைப்படம் சார்ந்த படிப்புகள், சுற்றுலா மற்றும் உணவகம் சார்ந்த படிப்புகள், சுற்றுச்சூழல் மற்றும் தாவர-விலங்கினம் சார்ந்த படிப்புகள் மற்றும் வேளாண்மை படிப்புகள் என்று பல்வேறான படிப்புகள் இருக்கின்றன. இப்படிப்புகள், தங்களுக்குள் ஏராளமான வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ளன என்பதை கவனிக்க வேண்டும்.

வாழ்க்கைத் திறன்கள்

புதிய விஷயங்களைக் கற்றுகொள்ளும் ஆர்வம், படைப்பாக்க திறன், சவாலை எதிர்கொள்ளும் மன தைரியம், விடா முயற்சி, கடின உழைப்பு, சாமர்த்தியம், நேர்மை, எளிதில் புரிந்துகொள்ளும் திறன், சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பக்குவம், நிதானம், சரியான முடிவெடுக்கும் திறன், குழுவாக இணைந்து செயல்படும் திறன், தலைமைத்துவ பண்பு மற்றும் நல்ல உடல் ஆரோக்கியம் போன்ற தகுதிகளில் பெரும்பாலானவற்றை பெற்ற ஒரு மாணவர், வாழ்க்கையில் அடையும் வெற்றிகளுக்கு அளவேயில்லை. இவற்றில் பாதி தகுதிகளைப் பெற்றிருந்தாலும்கூட, நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.

நம்மை சுற்றி...

நம்மை சுற்றி என்ன இருக்கிறது மற்றும் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். எனவே, மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். குறைந்தபட்சம், நாள்தோறும் பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகில் என்ன நடக்கிறது, எந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது என்பதை தெரிந்துகொண்டால், தனக்கான படிப்பு எது என்பதை ஒரு மாணவர் முடிவுசெய்வது எளிதாக இருக்கும்.

தனது விருப்பத்திற்கு ஏற்ற படிப்பிற்கு எதுபோன்ற வேலைவாய்ப்புகள் இருக்கின்றன மற்றும் நேரடி படிப்பாக இல்லாமல், அது தொடர்புடைய படிப்புகளுக்கு எதுமாதிரியான வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். தொழில்நுட்ப படிப்புகள் என்ற மாயைக்குள், தேவையின்றி சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மறந்துவிடாதீர்கள்

மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம் மாணவர்களே!...

உங்களின் மூளை பன்முக பரிமாணத்தைக் கொண்டது. அதன் அற்புதங்களையும், சிறப்புகளையும் எளிதில் விளக்கிவிட முடியாது. எனவே, இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி சார்ந்த படிப்புகளில்தான் நீங்கள் சாதிக்கப் பிறந்துள்ளதாய் அவசரப்பட்டு முடிவுசெய்து விடாதீர்கள்.

நிதானமாக, நன்கு யோசித்து முடிவெடுங்கள்...வாழ்வில் சாதித்து மகிழுங்கள்...வாழ்த்துக்கள்!

தொடக்கக் கல்வி - சாதி சமயம் ஆகியவற்றை குறிப்பிட விருப்பம் இல்லாதவர்க்கு உரிமை வழங்கி தமிழக அரசு உத்தரவு.

தொடக்கக் கல்வி - சாதி சமயம் ஆகியவற்றை குறிப்பிட விருப்பம் இல்லாதவர்க்கு உரிமை வழங்கி தமிழக அரசு உத்தரவு.


பெற்றோர்களின் கவனத்திற்கு : ஒரு ஆரம்பப் பள்ளி குழந்தையின் கட்டுரை

பெற்றோர்களின் கவனத்திற்கு : ஒரு ஆரம்பப் பள்ளி குழந்தையின் கட்டுரை

"நம்மில் பலர் தெரிந்தோ (அ) தெரியாமலோ இத்தவறுகள் செய்கிறோம், இனியாவது இத்தவறுகளை திருத்திக்கொள்ளவிடில் இச்செயல்கள் நம் குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும்மில்லை".
ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார் தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்", என விரும்புகிறீர்கள் ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார்.
அதை கண்ட அவர் கணவர் என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என்றார்

என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் என்று கொடுத்தார் அதில்

கடவுளே என்னை என் வீட்டில் இருக்கும் டிவியை போல் ஆக்கிவிடு நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும்.அதை போல் வாழ வேண்டும்
எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர்

நான் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க வேண்டும்,அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும்.தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு கவனத்தை போல் நானும் பெற வேண்டும்
அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும் என்னை விளக்க கூடாது

என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும் சண்டையிடவேண்டும்
என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும்

கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்

என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை.நான் டிவியை போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார் அந்த குழந்தை பாவம் என்ன பெற்றோர் இவர்கள் குழந்தையை கவனிக்காமல் என்ன ஜென்மமோ

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார் இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்

பெற்றோர்களே டீவீக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நம் குடும்ப உறவுகளை தூரமாக்கி விடாதீர்கள்

டிவியில் வரும் சில ப்ரோக்ராம்கள் கூட குழந்தைகளிடம் எதிமறையான விளைவுகளை ஏற்படுத்த கூடியவைகளாகவே பெரும்பாலும் இப்பொழுது உள்ளன

எனவே பொன்னான நேரத்தை சிறிது குடும்பத்தினருடன் செலவிட பலக்கபடுத்திகொள்ளுங்கள்.



"நம்மில் பலர் தெரிந்தோ (அ) தெரியாமலோ இத்தவறுகள் செய்கிறோம், இனியாவது இத்தவறுகளை திருத்திக்கொள்ளவிடில் இச்செயல்கள் நம் குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும்மில்லை".

குழந்தைகள் ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள...

குழந்தைகள் ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள...

குழந்தைகள் விடுமுறை நாட்களை வீணாக கழிப்பதைவிட அறிவு திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாகவும், ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளும் விதமாகவும் விடுமுறை நாட்களை கழிக்கலாம். குழந்தைகளின் ஞாபகத் திறனை அதிகரிக்கும் வகையில் பிரத்யேகமாக ஒரு இணையதளம் உள்ளது.
குழந்தைகளுடைய ஞாபகத் திறனை அதிகரிக்கும் விதமாக நான்கு வகையான விளையாட்டுக்கள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

முதல் விளையாட்டு எண்களை ஞாபகத்தில் கொள்வதற்கானது. இந்த விளையாட்டுப் பயிற்சியின் மூலம் தொலைபேசி எண்கள், எழுத்துக் கூட்டு (Spelling), தெருக்கள் அடையாளம், குறியீடுகள் (Symbols) போன்றவற்றை ஞாபகத்தில் கொள்ள முடியும்.

இரண்டாவது விளையாட்டு ஞாபக ஒப்பீடுக்கானது. இதன் மூலம் இருவேறு இடங்களிலுள்ள ஒரே பொருளை ஞாபகத்தில் கொண்டு ஒப்பீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் குறியீடுகள் அடையாளங்கள் போன்றவற்றை ஞாபகத்தில் கொள்ள முடிகிறது.

மூன்றாவது விளையாட்டு சற்று முன் நடந்ததை ஞாபகத்தில் கொள்வது. இதன் மூலம் ஒளியைக் கொண்டு சற்று முன் நடந்த நிகழ்வை ஞாபகத்தில் கொள்வதுடன் அடுத்தடுத்து நடக்கும் தொடர் நிகழ்வுகளை தொடர்ச்சியாக ஞாபகத்தில் கொள்ள உதவுகிறது.

நான்காவது விளையாட்டு தொடர் வரிசையை ஞாபகத்தில் கொள்வதற்கானது. இவ்விளையாட்டின் மூலம் முக அடையாளத்தைக் கொண்டு வரிசையாக நிகழ்வுகளை ஞாபகத்தில் கொள்ள முடிகிறது. மேலும் தொடர்ச்சியாக எத்தனை நிகழ்வுகளை நம்மால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

குழந்தைகள் மட்டுமின்றி வயதானவர்களும் தங்கள் மறதியைப் போக்கி ஞாபகத்தை வளர்த்துக் கொள்ள, சிறப்பான பயிற்சியை பெற்றுக் கொள்ள இந்த இணையதளம் உதவுகிறது.
இணையதளம் www.kidsmemory.com

காபி மாதிரிதான் வாழ்க்கை




சென்னை அறிவியல்உதவி தொடக்கக் கல்வி அலுவலர் டி.என். முரளிதரன் அவர்களின் மூங்கில் காற்று என்ற வலை தளத்திலிருந்து 
                                             

தங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.  வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.
  
 திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் 'வெள்ளி, பீங்கான்', போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் 'கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்' போன்ற  சாதாரண கோப்பைகள் வரை  பல வகைகள் இருந்தன. 
 
  அனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துகொண்டு  நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற  வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும்  அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்

  இப்போது பேராசிரியர் பேசலானார், "உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள் .கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான்  மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை  காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை.விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

  அது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.
வாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி  பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும்  வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.
  மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை. 
"எளிமையாய் வாழுங்கள்!
கருணையுடன் பேசுங்கள் 
எல்லோரையும் நேசியுங்கள்! 
வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்" என்றார் பேராசிரியர் 
உண்மைதானே!

*********************************************************************************

உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல்


அன்பார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பெருமக்களே ! ஒரு நற்செய்தி 

இதோ வருகிறது! அதோ வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ முதல் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.  இதை முதல் படியாகக் கொண்டு முன்னேறுவோம் .இதை எட்டிப்  பிடிப்பதற்குத்தான் எத்தனை தடைகள்!

இருபது பேர் கொண்ட அந்த பட்டியலைக் காண கீழே கிளிக் செய்யவும் 


தயங்காமல் இதை கண்டு வாழ்த்துவோம் 
மனமார்ந்த வாழ்த்துக்கள் 
இதற்காகப் பாடுபட்ட அத்துணை பேருக்கும் நெஞ்சார்ந்த  நன்றிகள் 

********************************************************************************