Thursday, 31 October 2013
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS விவரங்களை சரி பார்த்து 31.10.2013 க்குள் ஒப்படைக்க உத்தரவு
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS இல் பதிவேற்றம் செய்த விவரங்களை சரி பார்த்து 31.10.2013 க்குள் ஒப்படைக்க வேண்டும். EMIS இல் அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது எனவும், இதில் ஏதேனும் தவறு இருப்பின் அதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று தலைமை ஆசிரியர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என உத்தரவு இடப் பட்டுள்ளது.
Wednesday, 30 October 2013
Two-day nationwide sensitization programme on Mathematics for Teachers
Two-day nationwide sensitization programme on Mathematics for Teachers in Puducherry நீங்கள் கணித ஆசிரியரா? கணித்தின் மீது ஆர்வம் கொண்டவரா? கணித்தை மக்களிடம் பரப்புமும் எண்ணம் கொண்டவரா? விஞ்ஞான் பிரச்சார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு, புதுச்சேரியில் புதுவை அறிவியல் இயக்கம் இணைந்து நடந்த இருக்கும் இரண்டு நாள் கணித விழிப்புணர்வு பயிற்சியில் நிங்கள் பங்கேற்க உடனே ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யவும். கடைசி நாள் நவம்பர்,20.2013. The last date to register for the workshop is 20 November 2013. ஆன்லைன் படிவம் http:// www.vigyanprasar.gov.in/ whats_new/whats_new_events/ Nationwide_Sensitization_Worksh ops_Application_2013/ Nationwide_Sensitization_Worksh ops.aspx Galileo said “the book of nature is written in the language of mathematics”. Mathematics is the language of communication which has its roots and applications in almost major area of science, technology, commerce, arts, history and even in information technology. The development of mathematics has emerged out of needs and necessity of the time. Mathematics gave the scope for exploration of universe and development of human kind. In the history of mathematics, India played a very crucial role by the inventing zero. The credit goes to the great astronomer and mathematician Aryabhatta. Over the period, many learned scientists, philosophers and mathematicians have progress the subject with sub classifications according to the characteristics, properties, functions and use like asthmatics, algebra, calculus, geometry, trigonometry, set theory and many more. One of the great modern mathematicians from India Sri Srinivasa Ramanujan whose intelligent work and tricks made the global group to take the note of his contribution and forced the world to recognized his efforts. Government of India announced the year 2012 as a National Year of Mathematics to commemorate his 125th birth anniversary. Large scale programmes were organised by various groups across the country. Over the year efforts, Vigyan Prasar realised the need and necessity of the subject where it has been noted that the mathematics is considered as a hard and difficult to learn and teach in the schools and colleges. Therefore, to sensitize the teachers towards the mathematics education and communication through hands on activities, demonstrations and exercises, Vigyan Prasar has taken the initiative of conducting more than 30 nationwide two days sensitization workshops in the year to come. The targeted components of the workshop are: • India's Contribution in Mathematics • Mathematics and Daily life • Lecture on Mathematics Today and Tomorrow • Lecture on “Teaching Mathematics :an approach” • Hands on- Mathematics • Screening of film on Srinivasa Ramanujan • Experience sharing(Open House Discussion) • Career and opportunity in Mathematics If you are school teacher or science activists and has a keen interest in teaching and learning mathematics for the betterment of students and society, then it is the right opportunity for you to enroll yourself the sensitization workshop getting carried out at various places across the country. Women teachers and activists are encouraged to apply. Only shortlisted applicants will be informed about the venue, dates and closest place of workshop to him/her. In addition, wherever required, frugal accommodation and food will be provided. — with Hemavathi Anandu and 5 others.mrs hama is working as a AEEO pond
Monday, 28 October 2013
SMS ATTENDANCE TRICHY
திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE - நாளை முதல் (29.10.2013) - மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு

திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMSமூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என
Sunday, 27 October 2013
ஒரு தந்தையின் கடிதம்
அன்புள்ள மகனுக்கு,
அப்பா எழுதுவது
நான் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கான காரணங்கள் மூன்று.
- வாழ்க்கை, வாய்ப்புகள்,துரதிர்ஷ்டம் முதலானவற்றை யாராலும் முன்கூட்டியே அறியமுடியாது.வாழ்க்கை கால அளவு எவ்வளவு என்பதும் நமக்கு தெரியாது.சில விஷயங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்திலேயே சொல்லி விடுவது நல்லது
- நான் உனக்கு அப்பதானே! நான் சொல்லிக் கொடுக்காமல் வேறு யார் சொல்லிக் கொடுப்பார்கள்?
- நான் சொல்லி இருக்கும் விஷயங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டவை. இவற்றை நீ அனுபவித்து தெரிந்து கொள்வதை விட எனது அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்வது கால,பொருள் விரயங்களை தவிர்க்கும் அல்லவா?
நான் சொல்லப் போகும் விஷயங்களை உன் மனதில் பதிய வைத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும் உன் கையில்தான் இருக்கிறது.
- எல்லோரும் உன்னிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்க வேண்டாம். மரியாதை இன்றி நடந்து கொள்பவர்களைப் பற்றி புலம்புவதில் பயனில்லை. உண்மையில் உன்னை மரியாதையாக நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கும் உனது அம்மாவுக்கு மட்டுமே தவிர வேறு யாருக்கும் இல்லை உன்னிடம் நல்லவிதத்தில் நடந்து கொள்பவர்களிடம் நீ நல்ல உறவு வைத்துக் கொள்ளவேண்டும்.அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும்.அதே நேரத்தில் எச்சரிக்கையும் தேவை.ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். உன்னிடம் நல்லவிதமாக நடந்து கொள்பவர்கள் எல்லாம் உன்னை நேசிப்பவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
- இந்த மனிதர்தான் வேண்டும். இந்தப் பொருள்தான் வேண்டும். இவை இல்லை என்றால் வாழ்க்கையே முழுகிப் போய்விடும் என்றெல்லாம் இந்த உலகத்தில் ஒன்றும் கிடையாது.நீ நேசிக்கும் நபரோ அல்லது பொருளோ உன்னை விட்டுப் போய்விட்டாலும் உண்மையில் எந்த பாதிப்பும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் எந்த இழப்பையும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியும்.
- மனித வாழ்க்கை மிகவும் சிறியது. ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம் போன்றது. நிகழ்காலத்தில் வாழ்கையை வீணடித்தால் எதிர்காலத்தில் வாழ்க்கை உன்னை விட்டு விலகி சென்றிருக்கும்.
- அன்பு என்பது உண்மையில் நல்ல விஷயம்தான்.ஆனால் அது நிலையானது அல்ல. சூழ்நிலயைப் பொறுத்து அது அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும்.காதல் புனிதமானது இனிமையானது,அழகானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசித் திரியாதே! இதெல்லாம் எல்லா பெற்றோரும் சொல்வதுதானே என்று நீ நினைக்கலாம். ஆனால் இவற்றால் என்றாவது நீ மனமுடைந்து போக நேரக் கூடிய சூழல் வந்தால் அந்த சோகத்தை தவிர்க்கவே இதைக் கூறுகிறேன். அதனால்தான் அவற்றை மிகைப் படுத்த வேண்டிய அவசியம்இல்லை என்றும் வலியுறுத்துகிறேன்.
- வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களில் பலர் அதிகம் படிக்காதவர்கள்.கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம் என்பது இதற்கு அர்த்தம் அல்ல.வாழ்க்கைக்கு முக்கியமானது கல்வி. அதே நேரத்தில் படிப்பறிவு மட்டுமே வாழ்க்கைக்கு போதாது என்பதை புரிந்து கொள்
- கந்தை உடுத்துபவன் பணக்காரன் ஆக முடியாதா என்ன? நிச்சயம் முடியும் ஆனால் கந்தைத் துணியுடன்தான் தனது பயணத்தை தொடங்க வேண்டும் வேறு வழியில்லை.
- என்னை வயதான காலத்தில் நீ தாங்குவாய் என்று நான் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை.அது போலவே உன்னையும் வாழ்நாள் முழுதும் என்னால் தாங்கிக் கொண்டே இருக்க முடியாது என்பதை நீ உணர வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் வரையே உன்னை பராமரிக்க முடியம். உனது உழைப்பும் முயற்சியுமே உன் எதிர் காலத்தை நிர்ணயம் செய்யும்
- மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை ஒரு போதும் மீறாதே. அதே நேரத்தில் மற்றவர்கள் உனக்கு கொடுத்த வாக்கை கடைபிடித்தே தீர வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நீ மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்வது உன்னை மட்டுமே பொறுத்த விஷயம். நீ நிச்சயம் அவ்வாறு நடந்து கொள்ள முடியும்.
- அதிர்ஷ்டத்தை நம்பாதே இந்த உலகில் இலவசம் என்று ஒன்று கிடையாது.அதற்கான விலையை கொடுத்துத்தான் வேண்டும்.
- புற விசை ஒன்று தாக்காதவரை ஒரு பொருள் அதே நிலையில் இருக்கும். இது நியூட்டனின் விதி. வாழ்க்கையும் அப்படித்தான் ஏதோ ஒரு புற நிகழ்வு வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்து விடுகிறது. அந்தப் புறநிகழ்வு நடக்கும்போது அதை பயன்படுத்திக் கொள். இல்லையெனில் சாதாரண மனிதனைப் போல பயணமோ நிலைப்போ அப்படியே இருக்கும்.
- நான் உன்னுடன் செலவிடும் நேரம் போதுமானதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது எவ்வளவு நேரமாக இருந்தாலும் நம் இருவருக்கும் அது மிகமுக்கியமானது. நாம் அடுத்த முறை சேர்ந்து இருப்போம் என்று சொல்ல முடியாது காரணம் வாழ்க்கை அவ்வளவு தூரம் நிலை இல்லாதது. அதை கவனத்தில் கொள்வாய் என் கண்மணி!
உன் அன்பு அப்பா
The annual Festivals held by Prakriti Foundation
Prakriti Foundation was founded by Ranvir Shah in Chennai in 1998 to host events enquiring into our cultural heritage and inheritance. The vision behind Prakriti was to host events that would play a catalytic role in changing and enlarging the cultural scene in Chennai. Thus, Prakriti Foundation saw itself typically as the moving force behind events as diverse as music concerts, seminars and serious scholarly discourse, multi media events, experimental and protest cinema and theatre festivals. In the last nine years, Prakriti Foundation has worked to explore identity through history and heritage, art and cultural expression. In a city accustomed to a regular diet of classical performance, Prakriti has been the space where scholars, researchers, artists, critics, poets and filmmakers have been able to present their work to those who engage with it on serious terms. Our lecture demonstrations, poetry readings, film screenings and intimate performances continue to dot the Chennai calendar.
23 - 27 October 2013, 7 pmThe Eighth Edition of One Billion Eyes Documentary Film Festival in collaboration with Alliance Française of Madras and Voices From Water, International travelling Film Festival . The theme of this year's Festival is ' Water'. ![]() |
![]() The annual Festivals held by Prakriti Foundation
|
![]() |

நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான, இலினார் கேத்த னுக்கு, இந்த ஆண்டுக்கான, புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புக்கர் விருதுக்கான போட்டியில், அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான, ஜூம்பா லாகிரியின், தி லோலேண்ட் என்னும் நாவலும் இடம்பெற்றிருந்தது.
புக்கர் விருதுக்கான போட்டியில் கலந்து கொண்ட நாவல்களில் இருந்து, இறுதிச் சுற்றுக்கு, ஆறு நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில், கேத்தன்,28, எழுதிய, தி லுமினரிஜ் என்னும் ஆங்கில நாவல், விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில், கில்டுஹாலில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில், பிரிட்டன் இளவரசர் சார்லசின் மனைவி கமீலா பார்க்கர், இந்த விருதினை வழங்குகிறார். இந்த விருது, 49 லட்சம் ரூபாய் ரொக்கபரிசு கொண்டது.
புக்கர் விருதை பெற்றவர்களில், மிக இளையவரான கேத்தன் எழுதிய புத்தகம், 832 பக்கங்களைக் கொண்டது. இப்புத்தகத்தை, தனது 25ஆவது வயதில், எழுதத் துவங்கியதாக, கேத்தன் கூறியுள்ளார்.
பெண்களே! தோல்வியை கண்டு துவளாதீர்....

வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வருவது இயல்பு. வாழ்வில் எல்லோரும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உயர்வு வரும் இடத்தில் தோல்விகளும் கூடவே வரும்.
உயர்வும், தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்களாக கருத வேண்டும். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில் ஒரு முறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவர் வெற்றி யடைந்தால் அவருக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பல முறை தோல்வி கண்டு, வெற்றி யைத் தழுவும் ஒருவரால் தான் அதை உண்மையில் உணர முடியும். அவன் சந்தோஷத் திற்கு அளவே இருக்காது; வெற்றியைக் கொண்டாடுவான்.
நமக்கு ஏற்பட்ட நிறைய தோல்விகளும் நம் வெற்றிக்கு காரணமாக அமையும். ஒருவர் பெற்ற வெற்றியை தாங்க முடியாதவர்கள், அவரை ஏதேனும் வகையில் தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
நாம் வெற்றி பெற்றுக் கொண்டே போகும் போது மற்றவர்களைப் பற்றி அறிய முடியாது. ஆனால், தோல்வி ஏற்படும் போது தான், யார் நல்லவர் கெட்டவர் என்ற சுயரூபம் நமக்குத் தெரியும். பொதுவாக வெற்றி பெறும் போது நமது நண்பர்கள் கூட எதிரிகளாக மாறுவார்கள். ஆனால், தோல்வி அடையும் போது சில நண்பர்களும் நமக்குக் கிடைப் பார்கள்.
இதெல்லாம் வாழ்க்கையில் இயல்பாக எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் நட்புடன் பழக வேண்டும். சில தோல்விகள் தான் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தோல்வி வரும் போது அதற்காக துவண்டு போய் சாப்பிடாமல், இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து யோசிப்பதை விட்டுவிட்டு, இதுவும் வெற்றிக்கான பாடமாக எடுத்துக் கொண்டு நேர்மறையாக நமது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தோல்வியின் முடிவே உயர்வின் ஆரம்பமாக இருக்கும்.
தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடைகள் எழுதுங்கள்: மாணவர்களுக்கு அறிவுரை
கூடலூர்: கூடலூரில் நேற்று மதியம் 1:00 மணிக்கு துவங்கிய பிளஸ் 2 மாணவர்களுக்கான "ஜெயித்துக்காட்டுவோம்" நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெற கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த "டிப்ஸ்" விபரம்:
விசாலாட்சி, (தமிழ்): கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்குரிய வினா எண்ணை சரியாக எழுத வேண்டும்; திருக்குறள், தொடர் நிலை செய்யுள், மறுமலர்ச்சி பாடல் போன்ற பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் கேட்கப்படுகிறது. மனப்பாட பகுதியை மனப்பாடம் செய்வதுடன் அடிக்கடி பிழை இல்லாமல் எழுதி பார்த்தால், தேர்வு நேரத்தில் எளிதாக விடையளிக்க இயலும். துணைப்பாடத்தை விரிவாக புரியும் வகையில் படித்துக்கொண்டால் இரண்டாம் தாளுக்கான விடைகளை எளிதாக எழுத இயலும்.
கமலா (ஆங்கிலம்): நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்; தேவையற்ற விடைகளை எழுதுதல், அடித்தல் திருத்தல் இருத்தல் கூடாது. தெரிந்த விடையை உடனடியாக எழுத வேண்டும். கடின உழைப்பு மட்டுமே தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வழி வகை ஏற்படுத்தும்.
கிறிஸ்டோபர் தனபால் (வணிகவியல், கணக்குப்பதிவியல்): முதலில் தெரிந்த வினாக்களுக்கான விடைகளை தெளிவாக புரியும் வகையில் எழுத வேண்டும். வினா எண்களை தவறுதலாக எழுதாமல் சரியாக எழுத வேண்டும்.
தனியார் வணிகம் மற்றும் அமைப்புகளின் முறைகள் குறித்து நன்றாக தெரிந்துகொண்டால் அதில் பெரிய கேள்விகள் கேட்கப்படும் போது, எளிதாக விடையளிக்கலாம். கூட்டாண்மை வணிகம் குறித்தும், தெரிந்துகொண்டால் ஏதுவாக அமையும். தலைப்பிட்டு பதில் எழுத வேண்டும்; முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். கணக்குகள் சரியாக எழுதினால் மட்டுமே விடை சரியாக கிடைக்கும்.
சரஸ்வதி: (பொருளியல்) சரியாக படித்தால் அதிக மதிப்பெண்கள் பெற இயலும் பாடம் பொருளியல். அரைமணிநேரத்தில் 80மதிப்பெண்களுக்கான விடைகளை எளிதாக எழுத இயலும். அதற்கு மாணவர்கள் பொருளியல் பாடத்தை படிக்கும்போது புரிந்துக்கொள்ள வேண்டும்.
சித்ரகலா(கணக்கு): கணக்குகளை திரும்ப, திரும்ப போட்டு பயிற்சி எடுப்பதன் மூலம் தேர்வு நேரத்தில் ஏற்படும் மனசோர்வையும், சந்தேகமும் இல்லாமல் விடை எழுத வழி ஏற்படுத்தும். இப்பாடத்தில் ஒவ்வொரு பகுதியிலும் எந்த கணக்கு தேர்விற்கு வரும் என்பதை முந்தைய காலங்களில் நடந்த பொதுத்தேர்வு விடைகளை ஆய்வு செய்து பயிற்சி செய்து வழிமுறைகளை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
திருவருட்செல்வி(இயற்பியல்): முதல் பத்து பாடங்களை முறையாக படித்தால் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை பெற இயலும். சூத்திரங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டால் விடை எழுதும்போது உதவியாக இருக்கும்.
பரமேஸ்வரி(வேதியியல்): முதல் பாகத்தில் நன்றாக புரிந்து படித்தால் ஒரு மதிப்பெண் விடையளிக்க ஏதுவாக இருக்கும். அதேபோல் இரண்டாம் பாகத்திலும் பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். ஒவ்வொரு வழிமுறைகளையும் தெளிவாக தெரிந்துக்கொண்டால் விடையளிக்கும்போது வீண் சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்கும்.
நாகராஜ்( தாவரவியல்): பாடங்களை மீண்டும், மீண்டும் படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். எழுத்து பிழை இல்லாமலும், தாவர வகைகளின் பெயர்களையும் தெளிவாக எழுதவும் வேண்டும்.
இசைவாணி(உயிரியல்): புத்தகத்தில் எந்தமாதிரியான விடைகள் உள்ளதோ அதேபோன்று தேர்விலும் எழுத வேண்டும். அதேபோல் படங்கள் வரையும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர், டிவியில் மூழ்கலாமா?
கம்ப்யூட்டர், டிவியில் மூழ்கலாமா?
இன்றைக்கு இண்டர்நெட், இமெயில், செல்போன், பேஸ்புக், சார்டிங் என்று பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. மாணவ, மாணவிகளில் பலர் கம்ப்யூட்டரில் மூழ்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. சிலர் டிவியில் மூழ்கி கிடக்கும் நிலை உருவாகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
சமூகத்தின் பங்கு
சமூகம் என்றால் என்ன, அதில் நம் பங்கு என்ன என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். பொதுவான விபரங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு தெரியும் வகையில் அதனை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆபத்து... ஆபத்து...
ஆம்புலன்ஸ் சேவை, 108 போன்றவற்றை தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். சில சேனல்களில் வரக் கூடிய ஆபத்தான விளையாட்டு போன்றவற்றை பார்த்து அதனை செய்து பார்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். அதுபோன்ற சேனலை பார்க்க கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.
பேஸ்புக்
தங்களது போட்டோக்களை இனம் தெரியாத நபர்களுக்கு பேஸ்புக் மூலம் அனுப்ப கூடாது. எஸ்.எம்.ஏ.ஆர்.டி என்கிற சேப்டி, மீட், அஸ்பெட்டிங், ரிலையபிள், டெல் ஆகியவற்றை தெளிவாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சேப்டி என்கிற போது கம்ப்யூட்டரில் பல்லூடக தொடர்பில் (சேட்டிங்)
சொந்த தகவல்களை பிறரிடம் பரிமாறிக் கொள்ளாமல் (சேப்) பாதுகாப்பாக இருக்க வேண்டும். இமெயில் முகவரி, போட்டோ, செல்போன் எண், பள்ளியின் பெயர் போன்ற தகவல்களை தெரிவிக்க கூடாது.
சொந்த தகவல்களை பிறரிடம் பரிமாறிக் கொள்ளாமல் (சேப்) பாதுகாப்பாக இருக்க வேண்டும். இமெயில் முகவரி, போட்டோ, செல்போன் எண், பள்ளியின் பெயர் போன்ற தகவல்களை தெரிவிக்க கூடாது.
மீட் என்கிற போது பல்லூடகத்தின் வழியே அறிமுகமில்லாத ஒருவரை சந்திக்க நேரிடுவது மிகவும் ஆபத்தானது. பெற்றோர், பாதுகாவலரின் துணையுடன் தான் செய்தல் வேண்டும்.
இ-மெயில் இன்னல்கள்
அக்ஸ்செப்ட்டிங் என்கிற போது அறிமுகம் இல்லாதவர்களின் இமெயில் தகவல்கள், போட்டோக்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது பிரச்னைகளை உண்டாக்கிவிடும். இந்த தகவல்களை வைரசாக தேவையில்லாத தகவல்களாக இருக்கலாம்.
ரிலையபிள் என்கிற போது தகவல்களை பல்லூடகத்தில் பார்க்க நேரிடும் போதும், உண்மை தகவல்களா, நம்பகத்தன்மையான நபர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
டெல் என்கிற போது அசவுகரியமான, துன்பப்படும் படியான செயல்களை பல்லூடகம் வாயிலாக உங்களுக்கு ஒருவர் கொடுக்கும் போது உடனடியாக பெற்றோர், பாதுகாவலர், நம்பகத்தன்மையான, உண்மையான நபர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற தகவல்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த புது திட்டம்
அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் துவங்கும் முன்மாதிரி திட்டத்திற்கென ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்தனர்.
அரசு பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் 10ம் வகுப்பு வரை முன்னேறிய பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழை கூட சரியாக வாசிக்க தடுமாறும் நிலையில் இருப்பதால் வாசிப்புத்திறனை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
முதல் கட்டமாக 3 முதல் 10ம் வகுப்பு வரை இந்த முன் மாதிரி வாசிப்பு திறனை அமல்படுத்துவது குறித்து, தேவகோட்டையில் கல்வி அதிகாரிகள் மற்றும் நூலக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப் பட்டது. ஒவ்வொரு வகுப்பறையிலும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி புதிய உக்திகளில் வாசிப்பு, தமிழ் எழுத்துக்களை கற்றுத்தருவது என, முடிவெடுக்கப்பட்டது. இதற்காக அரசு உயர், மேல்நிலை பள்ளிகளிலும் இருந்து தலா ஒரு ஆசிரியருக்கு சிவகங்கையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
சி.இ.ஓ.,கணேசமூர்த்தி கூறுகையில், "மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிப்பு குறித்து ஏற்கனவே ஆசிரியர்கள் படித்த ஒன்று தான். புதிய உத்திகள் மூலம் மேலும் வாசிப்பு திறனை மேம்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் ஒன்றிய, வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கு வாசிப்பு திறன் குறித்த பயிற்சி தரப்படும். தமிழை தொடர்ந்து படிப்படியாக அடுத்த பாடம், வகுப்பினருக்கும் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி பயிற்றுனர்களுக்கு அறிவுறுத்தல்
கடலூர், அக் 26-1
முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் பயிற்றுனர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களை சேர்ந்த வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், உதவி தொடக்கக்கல்வி அலு வலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கள் மற்றும் ஆசிரியர் பயிற்று னர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல் நிலைப் பள்ளி யில் நடந்தது. அனை வருக் கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி தலைமை வகித்தார். கற்றல் மற்றும் கணித அடிப்படை திறன்களில் பின்தங்கியுள்ள மாணவர் களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குறுகிய காலத்திற் குள் திட்டமிட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என அந்த கூட்டத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
கடனாளி ஆக்காதீர்கள்!
தவறான கொள்கைகளாலும், முறையான கண்காணிப்பு இல்லாததாலும், கட்டுப்பாடுகளைச் சரிவர, சரியான நேரத்தில் மேற்கொள்ளாமல் போனதாலும் பொருளாதாரத்தை மிகப்பெரிய நெருக்கடியில் தள்ளி இருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். குறிப்பாக, நிதியமைச்சகத்தின் பல தவறான முடிவுகள்தான் இன்று ரூபாயின் மதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பதற்கும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கும் காரணம். இப்போது மீண்டும் ஒரு தவறான முடிவை நிதியமைச்சகம் எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.
ப்ரிட்ஜ், ஏர்கண்டிஷனர், டெலிவிஷன், மோட்டார் சைக்கிள் போன்ற மத்திய தர வகுப்பினர் பரவலாக வாங்க ஆசைப்படும் பொருள்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் முன்வர வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். இதன் மூலம் அதுபோன்ற நுகர்வோர் பொருள்களின் விற்பனையை அதிகரிப்பதும், உற்பத்தியைப் பெருக்குவதும்தான் நிதியமைச்சகத்தின் நோக்கம். அதனால், பொருளாதாரம் சுறுசுறுப்படைந்து புதிய வேகத்துடன் இயங்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
இது ஏதோ கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பதுபோல இருக்கிறது. இதனால் ஏற்றுமதி அதிகரிக்கப் போவதும் இல்லை. இறக்குமதி குறையப் போவதும் இல்லை.
சற்று யோசித்துப் பார்த்தால், இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கக் கூடும் என்பதும் அதனால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரே மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன.
நமது இன்றைய உடனடித் தேவை நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பது. அதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை, இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் அத்தியாவசியப் பொருள்கள் அல்லாதவை எவை என்பதைப் பட்டியலிட்டு அவற்றிற்கான சுங்க வரியை அதிகப்படுத்துவது. இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது. அடுத்தாற்போல, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் அதே வேளையில் அன்றாட வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்கவும் வழிகோலுவது.
இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கு அதிகக் கடனுதவி வழங்குவதன் மூலம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. குறைந்த வட்டியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் கடனுதவி வழங்குவதன் மூலம், அந்த வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்குமே தவிர குறையாது. அது மட்டுமா? ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி நிற்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களை மேலும் கடனாளிகளாக்குவதன் மூலம், அவர்களது அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சியாகவும் இது முடியும்.
குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்று பொருள்களை வாங்குவோரும் நாளையே வட்டி விகிதம் உயர்த்தப்படுமானால் கடனைத் திரும்பி அடைக்க மாட்டார்கள். முறையான கட்டுப்பாடுகளோ, தேவையை உத்தேசித்த கடன் விநியோகமோ இல்லாமல் போனால் 2008 இல் அமெரிக்காவில் நடந்தேறிய வங்கி திவால் நிலைக்கு நமது அரசுடமை வங்கிகளும் தள்ளப்படும்.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரவர்த்தி கூறியிருப்பதுபோல, இப்போதே அரசு வங்கிகளிடம் இருக்கும் வைப்பு நிதியின் 78 விழுக்காடு கடனாக வழங்கப்பட்டுவிட்ட நிலைமை. இதற்கு மேலும் கடன் வழங்கி அவை வாராக் கடனாகப் போனால், வங்கிகள் தடுமாறத் தொடங்கிவிடும். அரசு நிதியுதவி அளிக்கும் என்றாலும் எந்த அளவுக்கு உதவி செய்துவிட முடியும் அல்லது பங்களிப்பு நல்க முடியும்? அந்த அளவுக்கு அரசிடம் அதிகப்படியான நிதியாதாரம் இருந்தால் பொருளாதாரம் இப்படி தள்ளாட வேண்டிய அவசியமே இல்லையே.
இங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. எல்லாவற்றிலும் தனியார்மயம், தனியார் பங்களிப்பு என்று பேசும் அரசு, இதுபோன்ற சிறுகடன்களையும், நுகர்வோர் கடன்களையும் குறைந்த வட்டியில் வழங்கும்படி தனியார் பன்னாட்டு வங்கிகளுக்கு அறிவுரை வழங்குவதுதானே? வாராக்கடனாகும் வாய்ப்புள்ள கடன் விநியோகம் என்றால் அது அரசு வங்கிகளுக்கு என்று ஒதுக்கீடு செய்வது என்ன நியாயம்?
நிதியமைச்சகத்தின் இந்தத் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதுதான் அரசுடமையாக்கப்பட்ட வங்கித் தலைவர்களின் கடமை. ரிசர்வ் வங்கியும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளை பலவீனப்படுத்தும் அரசின் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
நிதியமைச்சருக்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவின் பலமே நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு மனப்பான்மைதான். தயவுசெய்து, அதை உருக்குலைத்து, மக்களைக் கடனாளியாக்கி நடுத்தெருவில் நிறுத்தத் திட்டம் தீட்டாதீர்கள்!
P.U.M.S.NALLAMBAKKAM KANCHEEPURAM DIST
ஸ்கூல்ல வெட்டியாக உட்கார்ந்துதானே இருக்கப்போறீங்க?', 'உலகத்துலயே ரொம்ப ஈஸியானது, கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர் வேலைதான்', 'பசங்கள நிக்க வெச்சு வாசிக்க சொல்றது... அவங்களாவே நோட்ஸ் வாங்கிப் படிக்கச் சொல்றது... இதுக்கு மேல என்னத்த பண்ணப்போறீங்க', 'கவர்ன்மென்ட் டீச்சர்ஸ் சரியா பாடம் நடத்தினா, அப்புறம் ஏன் பிரைவேட் ஸ்கூல்ல அட்மிஷன் குவியுது..?'
பேருந்து பயணத்திலும், ஷேர் ஆட்டோ பயணத்திலும் சக பயணிகளிடம் பேச்சுக்கொடுக்கும்போது, உதிர்க்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களால் உண்டான கோபத்துக்கு, தன் பள்ளியின் பெயரில் தொடங்கிய ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் பதில் சொல்லி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி.
சென்னை அருகே வண்டலூருக்குப் பக்கத்தில் உள்ள நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கென தனி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அவ்வப்போது அப்டேட் செய்து வரும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம் பேசினேன்.
"அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே பலரும் மோசமாகவே பார்க்கிறார்கள். எங்களை எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கும் சோம்பேறிகள் என்றே சிலர் நினைக்கிறார்கள். இதை எனக்குத் தெரிந்தவர்களே என்னிடம் கலாய்த்தல் தொனியில் குத்திக்காட்டியிருக்கிறார்கள்.
அத்தகையோர் ஒவ்வொருவரிடமும் என்னால் விளக்கத்தை அளித்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்குப் புரியவைப்பதும் கடினம். அப்போதுதான், ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கி, எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கல்விச் சேவையையும், எங்கள் பள்ளி மாணவர்களின் திறமையையும் வெளிப்படுத்த முடிவு செய்தேன்.
அதன்படி, நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரிலேயே ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கினேன். எனக்கு ஃபேஸ்புக்கில் இருந்த மிகச் சில நண்பர்களிடம் விருப்பம் தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தேன். சென்ற ஆண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்ட இந்தப் பக்கத்துக்கு இப்போது லைக்குகள் 500-ஐ தாண்டியிருக்கிறது. இதற்குக் கிடைக்கும் எதிர்வினைகள் ஊக்கத்தை அளிக்கிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
தமிழகத்தில் முப்பருவ முறை கொண்டுவரப்பட்ட பிறகு, வளரறி மதிப்பீடு பிரிவின் மதிப்பெண்களை அள்ளுவதற்காக மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலைக்கொண்டு விதவிதமான புராஜெக்ட்டுகளை செய்து, தங்கள் ஆசிரியர்களிடம் அசத்தி வருகிறார்கள். இந்த மதிப்பீட்டு முறை, இந்தக் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர்களின் படைப்பாற்றல் வியக்கத்தக்கது. தங்களுக்கு எளிதில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு அசத்தலான புராஜக்ட்களை செய்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இந்த விவரம் அனைத்தும் இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குவிந்து கிடக்கின்றன. மாணவர்கள் தங்கள் புராஜெக்ட்களுடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் காட்சிகள்தான் இந்தப் பக்கத்தின் ஹைலைட்.
"எங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை, உலகுக்கு ஆதாரங்களுடன் உரைப்பதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கம் துணைபுரிகிறது. எங்கள் பள்ளியில் கொண்டாடும் 'ஜாய் ஆஃப் கிவிங்', 'ஆசிரியர் தினம்' உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறோம்.
நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே ஏழ்மையின் பின்னணி கொண்டவர்கள். இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கு நேரடியாக உதவி செய்வதற்கு, இளைஞர்கள் பலரும் முன்வந்திருக்கிறார்கள். எங்கள் பள்ளிக்கு கணினி உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருவதற்கும் சிலர் உறுதி அளித்திருக்கிறார்கள். என் கோபத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம், இப்போது என்னையும், சக ஆசிரியர் நண்பர்களையும் ஊக்கப்படுத்தும் தளமாகவே மாறிவிட்டது.
எங்கள் பள்ளிக்குக் கிடைத்த வரவேற்புக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைவருமே காரணமானவர்கள். அனைவரின் ஒத்துழைப்பால்தான் எங்கள் பகுதியில் இப்பள்ளிக்கு நன்மதிப்பு கூடியிருக்கிறது" என்கிறார் ஆசிரியை கிருஷ்ணவேணி.
சமீபத்தில்கூட தன் மாணவர்கள் போட்டி ஒன்றுக்காக செய்த புராஜெக்டை, யூடியூபில் பதிவேற்றி, அதற்கு இணையவாசிகளின் ஆதரவையும் நாடினார். அந்தப் புராஜெக்ட்டைப் பார்க்க http://youtu.be/HioD6RKgPe4
ஃபேஸ்புக் என்பது பொழுதுபோக்கு அல்ல... அது ஓர் அற்புதப் பொழுதாக்கம் என்பதை உணர்த்தும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம், இப்போதெல்லாம் யாராவது அவரது பணி மற்றும் பள்ளியைப் பற்றி கிண்டல்செய்தால் ஒரு துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுக்கும் ஃபேஸ்புக் பக்க முகவரிhttps://www.facebook.com/nallambakkampums
பேருந்து பயணத்திலும், ஷேர் ஆட்டோ பயணத்திலும் சக பயணிகளிடம் பேச்சுக்கொடுக்கும்போது, உதிர்க்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களால் உண்டான கோபத்துக்கு, தன் பள்ளியின் பெயரில் தொடங்கிய ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் பதில் சொல்லி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி.
சென்னை அருகே வண்டலூருக்குப் பக்கத்தில் உள்ள நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கென தனி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அவ்வப்போது அப்டேட் செய்து வரும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம் பேசினேன்.
"அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே பலரும் மோசமாகவே பார்க்கிறார்கள். எங்களை எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கும் சோம்பேறிகள் என்றே சிலர் நினைக்கிறார்கள். இதை எனக்குத் தெரிந்தவர்களே என்னிடம் கலாய்த்தல் தொனியில் குத்திக்காட்டியிருக்கிறார்கள்.
அத்தகையோர் ஒவ்வொருவரிடமும் என்னால் விளக்கத்தை அளித்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்குப் புரியவைப்பதும் கடினம். அப்போதுதான், ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கி, எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கல்விச் சேவையையும், எங்கள் பள்ளி மாணவர்களின் திறமையையும் வெளிப்படுத்த முடிவு செய்தேன்.
அதன்படி, நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரிலேயே ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கினேன். எனக்கு ஃபேஸ்புக்கில் இருந்த மிகச் சில நண்பர்களிடம் விருப்பம் தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தேன். சென்ற ஆண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்ட இந்தப் பக்கத்துக்கு இப்போது லைக்குகள் 500-ஐ தாண்டியிருக்கிறது. இதற்குக் கிடைக்கும் எதிர்வினைகள் ஊக்கத்தை அளிக்கிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
தமிழகத்தில் முப்பருவ முறை கொண்டுவரப்பட்ட பிறகு, வளரறி மதிப்பீடு பிரிவின் மதிப்பெண்களை அள்ளுவதற்காக மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலைக்கொண்டு விதவிதமான புராஜெக்ட்டுகளை செய்து, தங்கள் ஆசிரியர்களிடம் அசத்தி வருகிறார்கள். இந்த மதிப்பீட்டு முறை, இந்தக் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர்களின் படைப்பாற்றல் வியக்கத்தக்கது. தங்களுக்கு எளிதில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு அசத்தலான புராஜக்ட்களை செய்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இந்த விவரம் அனைத்தும் இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குவிந்து கிடக்கின்றன. மாணவர்கள் தங்கள் புராஜெக்ட்களுடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் காட்சிகள்தான் இந்தப் பக்கத்தின் ஹைலைட்.
"எங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை, உலகுக்கு ஆதாரங்களுடன் உரைப்பதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கம் துணைபுரிகிறது. எங்கள் பள்ளியில் கொண்டாடும் 'ஜாய் ஆஃப் கிவிங்', 'ஆசிரியர் தினம்' உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறோம்.
நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே ஏழ்மையின் பின்னணி கொண்டவர்கள். இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கு நேரடியாக உதவி செய்வதற்கு, இளைஞர்கள் பலரும் முன்வந்திருக்கிறார்கள். எங்கள் பள்ளிக்கு கணினி உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருவதற்கும் சிலர் உறுதி அளித்திருக்கிறார்கள். என் கோபத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம், இப்போது என்னையும், சக ஆசிரியர் நண்பர்களையும் ஊக்கப்படுத்தும் தளமாகவே மாறிவிட்டது.
எங்கள் பள்ளிக்குக் கிடைத்த வரவேற்புக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைவருமே காரணமானவர்கள். அனைவரின் ஒத்துழைப்பால்தான் எங்கள் பகுதியில் இப்பள்ளிக்கு நன்மதிப்பு கூடியிருக்கிறது" என்கிறார் ஆசிரியை கிருஷ்ணவேணி.
சமீபத்தில்கூட தன் மாணவர்கள் போட்டி ஒன்றுக்காக செய்த புராஜெக்டை, யூடியூபில் பதிவேற்றி, அதற்கு இணையவாசிகளின் ஆதரவையும் நாடினார். அந்தப் புராஜெக்ட்டைப் பார்க்க http://youtu.be/HioD6RKgPe4
ஃபேஸ்புக் என்பது பொழுதுபோக்கு அல்ல... அது ஓர் அற்புதப் பொழுதாக்கம் என்பதை உணர்த்தும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம், இப்போதெல்லாம் யாராவது அவரது பணி மற்றும் பள்ளியைப் பற்றி கிண்டல்செய்தால் ஒரு துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுக்கும் ஃபேஸ்புக் பக்க முகவரிhttps://www.facebook.com/nallambakkampums
Subscribe to:
Posts (Atom)